காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.

பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.

இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.

தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு ஒருவர் கொலை

காணி தகராறு ஒருவர் கொலை

நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ராகல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.

காணி தகராறு ஒருவர் கொலை

அதன்படி, சம்பவம் தினம் அன்று சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 41 வயதான வீட்டு உரிமையாளரான பெண்ணும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.