Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ,இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, லொகுகே, அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என பதிலளித்தார்.
நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெள்ளையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி
வெள்ளையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி
வெள்ளையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி ,இணையத்தில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இணையத்தில் விற்பனையாகும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் எழுந்துள்ளன.
மேலும், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ சோஷியல் மீடியாக்களுக்குப் போனால் பல விளம்பரங்கள் வருவதைப் பார்க்கிறீர்கள். இந்த க்ரீம் உபயோகிக்கிறேன் என்று ஒரு அழகான பெண் வந்து சொல்வாள். இதை ஒரு விளம்பரமாகத்தான் பார்க்கிறோம்.
இந்த விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. சில சமயங்களில் தொலைபேசி எண், மற்றும் விலாசம் என ஒன்றும் இருக்காது.
அதிலும் குறிப்பாக சருமத்திற்கான கிரீம் போன்ற பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்னை என்றால், அந்த பொலுள் குறித்து எதுவும் அறியமுடியாது.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விஷயங்களை ஆர்டர் செய்வதிலும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். க்ரீம்களைப் பயன்படுத்துவதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்றார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.
விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள் ,புதிய அரசியல் வெள்ளோட்டம் ,தேரோட்டமாக மாறிய நிலையில் பதறிய வண்ணம் உள்ளனர் .
இதோ எமது கேள்விகளுக்கு ,வெள்ளை வேட்டிகளிடம் உள்ள பதில் என்ன ..?
காணொளியை முழுமையாக பாருங்கள் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா ,சர்வதேச ரீதியில் உள்ள புலிகள் கட்டமைப்பு ஏன் இதுவரை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பாக பதில் ஏதும் வழங்காததற்கு காரணம் என்ன என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார் .
மக்கள் மனங்களில் உள்ள கேள்விகளை அவர் எழுப்பியுள்ள இந்த விடயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது .
காணொளியில் அழுத்தி அர்ச்சுனா இராமநாதன் ஆனா ரகுராம் தெரிவித்த கருத்துக்களை மக்களே கேளுங்கள்
10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்
10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்
10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர் ,பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு
ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு
ஐ தே சு முவின் வேட்பு மனு நிராகரிப்பு ,இந்த வருட பொதுத் தேர்தலுக்காக மாத்தளை மாவட்டத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியல் கட்சிகள் மற்றும் 07 சுயேட்சை குழுக்களில் இருந்து 24 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக, மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.
அதில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதன்படி 16 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சை அமைப்புகளின் 16 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன” என்றார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் உரிய சான்றுப் பொருட்களை
கொழும்பில் உள்ள நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பில் வினவிய போதே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை(7) தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே சதோச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித
எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் காணப்படும் பெட்டிகள்,பொதி செய்யப்பட்டு,நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
பல வருடங்களுக்கு பிற்பாடு,குறித்த ஐந்து நாட்களும்,பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும்,சட்ட வைத்திய அதிகாரி குழுவும் மன்னார் நீதவான் முன்னிலையில்,காணாமல் ஆக்கப்பட்டோர்
அலுவலகத்தினரும்பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில்ஆஜராகும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது மனித எலும்பு தொகுதிகள் தனியாகவும்,அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு,பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விடையங்கள் சம்பந்தமாக மனித எலும்புகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யும்,மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் குறித்து களனி பேராசிரியர் ராஜ் சோமதேவ வின் தொல்பொருள் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை(16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது,இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப் படவுள்ளது.
அவர்கள் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள தமது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்து அவை எக் காலப்பகுதிக்கு உரியது என தொல்பொருள் திணைக்களமும்,அந்த எலும்புக்
கூட்டுத் தொகுதிகளில் இறப்புக்கான காரணம்,வயது,பாலினம் போன்ற விடயங்கள் தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கான கால அளவுகள் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்படும்.
குறித்த 5 நாட்களும் இடம் பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட பொருட்கள் பிறித்து எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு ,மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்
வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.
இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச்
சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல்
செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு ,வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று
பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த Mitsubishi Montero ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

யாழில் பணத்தை எரித்த தமிழர்
யாழில் பணத்தை எரித்த தமிழர், யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தமிழர் ஒருவர் பத்து லட்சம் பணத்தை எரித்துள்ளார் .
பத்து லட்சம் ரூபாய்களை எரித்ததுடன் மேலும் வைத்திருந்த ஏழு லட்சம் பணத்தையும் தூக்கி வீசியுள்ளார் .
பணத்தை எரித்தும் ,வீசிய தமிழர் செயல் யாழ்பாணத்தில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒத்த ரூபா பணத்தை சேகரிக்க மக்கள் பெரும் இன்னல் படும் இவ்வேளையில் ,பல லட்சம் ரூபாயை ஏன் இவர் இவ்விதம் எரித்தார் என்கின்ற விடயம் கேள்வியை எழுப்பியுள்ளது .
யாழ் அரியாலை பகுதியில் மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .
சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .
இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு ,2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அத்துடன், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் நேற்றைய தினம் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும்
வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.
விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ சில இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை அல்லது ஏதேனும் ஒரு வகையில் பிரித்து மறைக்கப்பட்டுள்ளமை
அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சிதைவடைய இடமளிக்கப்பட்டுள்ளமை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொலைப்பேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாகவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மைத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும், தவறான தகவல்களைத் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் மானிகளின் நீர் மட்ட பகுப்பாய்வின் படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச
செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது ,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி, வியாழக்கிழமை (10)
இரவு புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 01 மணித்தியாலங்கள் 35 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-265 215 பயணிகளுடன் 10/10 மாலை 06.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10/10 இரவு 07.50 மணிக்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
இங்கு சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்குச் செல்ல வேண்டிய விமானப் பயணிகளை வேறு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்ததுடன், மீதமுள்ள விமானப் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ஏ.330 விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு ,யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவத்தால், பெண்
தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று(10) கையளிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பெயர்
பலகையை திரைநீக்கம் செய்து பயனாளிகளிடம் வீட்டை உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.
“இமேசன் கொம்பேசன்” என்ற அவுஸ்ரேலியா நிறுவனத்தின் சுமார் 35 இலட்சம் ரூபா நிதி உதவியில், இராணுவத்தின் மனித வலுவுடன் இந்த வீடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் யாழ்.கொடிகாமம் தெற்கில் இன்று இடம்பெற்றது.