பொலிஸார் துப்பாக்கிச்சூடு
பொலிஸார் துப்பாக்கிச்சூடு கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.
அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மாளிகாவத்தை பகுதியில் வைத்தே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கை

- ஈரான் மற்றும் ஹூதிகளின் அச்சுறுத்தல் அமெரிக்கா மக்களுக்கு எச்சரிக்கை

- அர்ஜென்டினாவின் கடற்படை, விமானப்படையை ‘பயங்கரவாத’ அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது

- எரியும் எண்ணெய் கப்பல்

- நிலச்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான சாலை மூடல்









