Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
ஈழம் பிறந்ததின்று – அள்ளி கொஞ்சு ..!
ஈழம் பிறந்ததின்று – அள்ளி கொஞ்சு ..!
எழுவான் திசையில் வருவான் தலைவன்
அழுகை நிறுத்தி எழுவான் தமிழன் ….
அஞ்சி ஓடும் பகையை நொறுக்கு
ஆழும் பலம் உனதாய் ஆக்கு ….
வீழ்ந்தோம் என்று கதறாதே
விதி செய்வோம் பதறாதே …
விட்ட இடம் தொட்டு
விடுதலை வா நட்டு ….
முடியாதென்று ஏதுமில்லை
முடிந்ததாய் போர்கள் ஏதுமில்லை….
இடை வீழ்ந்த அமைதி
இல்லையடா தோல்வி …
கையில் ஏந்து கருவி
காலை தொடும் அருவி ….
விடியல் இன்றி தமிழர் தேசம்
வீதி உறைவதா
விழியன் ஓரம் நீரும் விழவே
வீழ்ந்து அழுவதா ..?
கரிகாலன் பட்டறைகள்
கறையாகி உறைவதா ..?
இன்று பிறந்தான் எங்கள் அண்ணன்
இன்றே ஈழம் வென்று தருவான்
நூறாண்டு நீ வாழ்வாய் – எங்கள்
நூலகமே நீ ஆள்வாய் …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 26-11-2021
நீயே என் உயிர் வந்து விடு …!
நீயே என் உயிர் வந்து விடு …!
நீயும் நானும் கூடனும்
நீளும் காலம் வாழனும்
உயிரே வா வா
உள்ளம் தா தா
அசைந்து வரும் காற்றாய்
ஆடி விழும் மின்னலாய்
ஓடி நாளும் வருவாய்
ஓராயிரம் இன்பம் தருவாய்
மின்னல் அடி கண்ணில் ஊறுதடி
யன்னல் வழி காற்று ஓடுதடி
கொட்டும் மழையில் உடல் நனையுதடி
ஓட்டும் உடையில் உடல் தெரியுதடி
வானம் கறுத்ததோ மேனி சிலிர்த்ததோ
வானம் பாடி மழை பொழிந்ததோ
அட டா இது தான் விதியோ
ஆண்டவன் இட்டான் சதியோ
ஓடும் நதியிலே ஆடும் அலையிலே
ஓடும் படகாய் ஆடும் மயிலே
நீதானே நிதம் வேண்டும்
நீயே என் உயிர் வரணும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-11-2021
ஏன் என்னை சிறையில் வைத்தாய் ..?
ஏன் என்னை சிறையில் வைத்தாய் ..?
உன்னை கண்டால் பேச்சிழக்கும்
உதடும் காய்ந்து போகும்
வீங்கி முட்டி மூச்சிளைக்கும்
வியர்வை உடல் நனைக்கும்
ஏனோ தெரியவில்லை நீ வந்தால்
ஏறி மனம் குதிக்கும்
ஏகாந்த பெரு வெளியிலும்
ஏழ்மை சிரிக்கும்
வட்ட நிலா உடல் அழகு
வாலிபத்தில தேயுது
வந்து பேச தமிழும்
வையத்தில வெட்குது
கொண்டையில மல்லிகை பூ
கொலுசு சத்தம் போடுது
சண்டையிட்ட தோட்டாக்கள் – உன்
சாளரத்தில் தோற்குது
ஏய் பிரம்மா ஏன் படைத்தாய்
ஏன் பின்னால் சுற்ற வைத்தாய்
உன்னாலே நான் தவித்தேன்
உயிரே ஏன் சிறை வைத்தாய் ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-11-2021
சொல்லி விடு
சொல்லி விடு …!
பூ மாலை வீதியில
புகழ் பாடி போகையில
மயிலாட்டம் நடப்பவரே
மா மனிதர் நீவீரா ..?
ஓட்டளித்த மக்கள் எல்லாம்
ஓலை குடில் வசிக்கையில
காணமல் போனவரே
கால் கடுக்கும் போவீரா
வீடழித்தான் பகை இணைந்து
விடு கதை அளப்பவரே
உன் வயிறு பசியடங்க
உணவளித்தார் மறந்தீரே
சிறையினிலே திருடர்களா ..?
சிரிப்புதான் வாயினிலே
கோடிகளை திருடி வைத்தார்
கேடிகளோ வெளியினிலே
குற்றங்கள் தடுக்கத்தான்
சட்டங்கள் இருக்கிறதா ..?
சட்டத்தை திருடி விற்றார்
சாக்கடையில் வீசலையா ..?
இது தானா உன் நாடு
இன்றிந்த சூடு காடு
என்று வரும் சுதந்திரமோ ..?
எவரெனும் சொல்லி விடு ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 16-11-2021
மனதை மாற்று ….!
மனதை மாற்று ….!
சக்தி தரும் சாமிக்கொரு
சலங்கை ஆட்டம் போட்டுவிடு
புத்தி திறந்து மாறிவிட – உன்
புன்னகையை காட்டி விடு
ஆத்திரத்தில் வீசும் சொல்
ஆழ காயம் தந்து விடும்
மூத்திரத்தில் நோய்களை தான்
முழு மருத்துவம் கண்டு விடும்
வீற்றிருக்கும் ஆடம்பர
வீட்டுக்குள்ளே ஒளி இன்றின்
வீடிருந்து என் செய்வாய் ..?
விபரம் உண்டா கூறி விடு
மமதைக்குள் மனம் புதைத்து
மாளிகையில் வாழாதே
மனம் இருந்தால் வீதி உளார்
மனம் குளிர உணவு இடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-11-2021
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
சின்னம் சிறு எறும்பிடை கற்றுக்கொள்ளு – அதன்
நிகழ்ச்சி நிரல் மெல்ல வந்து எடுத்து கொள்ளு
உடலை விட பன்மடங்கு சுமக்குது பார்
உலகிலேறி தன் புகழை விதைக்குது பார்
பார்வையிலே சிறிதென்று ஒதுக்கி வைத்தார் – இவர்
பலத்தை கண்டேன் வியந்து நின்றார் ..?
போர்வைக்குள்ளே மறைந்திருந்தால் சூடுவரும் – குளிர்
போர்வை விட்டு எழுந்துவிட்டால் தெரிந்து விடும்
சிந்தையுளார் மன்றில் வந்து பேசிடுவார் – சபை
சிரிக்கும் படி தன்பேச்சை வைத்திடுவார்
அறிவு தன்னை அறிந்துவைத்து அவிழ்த்திடுவார்
அதனாலே உச்சி புகழ் பெற்றுவிட்டார்
வறுமையுளார் வலிகள் தன்னை படித்திடுவார்
வலி சுமந்தார் வாழ்வினிலே வென்று நிற்பார்
ஆணவத்தை தலைமேல வைத்து விட்டார்
ஆணிவேர் அறுத்தெறிந்து வீழ்ந்திருப்பார்
உன்னிடத்தில் உள்ளதை கொடுத்து பார் – இவர்
உள்ளம் மகிழ உன்னை நினைத்திருப்பார்
இறந்த பின்னும் இவ்வையம் வாழ்ந்திருப்பார்- இவர்
இறைவனாக மக்கள் மனம் போற்றிடுவார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-11-2021
ஏன் என்னை விட்டு விலகினாய் ..?
ஏன் என்னை விட்டு விலகினாய் ..?
நித்தம் உன்னை பாடிட தானே
நிகழ் காலம் துடிக்கிறேன்
கத்தும் கடல் போல உன்னை
காண தானே தவிக்கிறேன்
பட்ட துயர் மறைந்திட தானே
பகலே உன்னை அழைக்கிறேன்
வித்துடல் ஆகிட முன்னே
விழி காட்டு அழைக்கிறேன்
ஒருமைக்கும் பன்மைக்கும் இடையிலே
ஓடி உறவாடினாய் – இன்று
ஓடி ஓடி மறைவதென்ன
ஒரு தரம் பதில் சொல்லாய்
விடியுமா அந்த கிழக்கு – ஒளி
தருமா வந்து எனக்கு
ஏனோ வானில் மறைந்தாய்
இருளை அள்ளி விதைத்தாய் ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-11-2021
இது முறையோ …?
இது முறையோ …?
மெல்லென விரியும் கிழக்கு -முன்னே
மெலிந்தது அதன் விளக்கு
ஒத்திகை பார்த்தே பின்னே
ஒளியிடல் இன்றே விலக்கு
அழையா இல்லம் நுளைந்து
ஆடை உள்ளே புகுந்து
துயிலை உரிப்பது முறையோ – இந்த
துணிவை தந்தது யாரோ …?
பாருக்கு நீயோ விலக்கு -இந்த
பகலும் இரவும் விளக்கு
உன்னை வைத்தே இந்த
உலகில் பிறந்தது கணக்கு
உயிரை படைத்தவன் கடவுள் – இந்த
உயர்வை படைத்தவன் கடவுள்
நிலைகளே செய்தே நன்றே
நிகழ்வுகள் வைத்தான் அன்றே
இரவும் பகலும் இரண்டு – அந்த
இன்பமும் துன்பமும் இரண்டு
ஏழையும் செல்வமும் இரண்டு – இந்த
இயல்புகள் திரிப்பு நன்றோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-11-2021
ஒரு நாள் வெல்வோம் ..!
ஒரு நாள் வெல்வோம் ..!
சில்லென ஓடி காற்று
சிலுக்காய் ஆடிய நேற்று
வீழ்ந்தது தமிழின கூற்று
விடுதலை போனது தோற்று
மலரிலே வீழ்ந்தொரு வண்டு
மகிழ்ந்தது கலவி நன்று
கொடியோன் செயலாது கண்டு
கொதித்தான் தலைமகன் அன்று
வெடித்தது சேனை நன்று
வெறியுடன் துரத்தின அன்று
ஓடினான் தப்பி மன்று
ஒடித்தான் முழுவதும் கொன்று
இடிந்தது தமிழ் மனம் இன்று
இடிந்தது செயல் நிலம் ஒன்று
முளைக்குமா தலை இனி ஒன்று
முழு தமிழ் நிலை இது இன்று
வெடிக்குமா போர் மண் ஒன்று
வெடி நிலைக்குமா இனி நன்று
தென் திசை பகைவர் வீழ்ந்திட
செழிக்குமா தமிழ் மண் நன்று …?
கொத்திய கழுகு உதடும்
கொடி நட்டே ஆடிய வாளும்
விட்டே ஓடிடும் காலம் – நிலம்
விடுதலை பெற்றே ஆடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 28-10-2021
இவளை எனக்கு தா
இவளை எனக்கு தா
உருண்டு வரும் நீரலைகள்
உன் உடலில் மோதி விழ
என் உடலோ நடுங்குதடி
ஏக்கத்தில தவிக்குதடி
கட்டியணைத்து பேரலைகள்
கண்ட படி முத்தமிட
விட்டு உடல் இருப்பவளே
விடை கூறு என் செய்வேன்
அங்கமதை தொட்டு விழி
ஆடை உருவி பார்க்குதடி
வேர்க்காத என் உதடும்
வேர்த்து இன்று கொட்டுதடி
வான் நிலவு அருவியில
வளைந்து நீராட
நாள் எழுதி கொடுத்தவரே
நான் உனக்கு மாலையிட
தேதி ஒன்று தருவீரா – என்
சேதி சொல்லி போவீரா
புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
பூவை எனக்கு தருவீரா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
உயிர் பிரியும் மர்மம்
உயிர் பிரியும் மர்மம்
ஏ மனிதா உன் உடலில்
ஏழடுக்கு தோலிருக்கு
ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
ஓர் உயிரும் பிரியாது
கட்டை விரல் ஊடக
கடைசி உயிர் பிரிந்திடுமாம்
கட்டை விரல் கட்டி போடும்
காரணங்கள் இதுவொன்றாம்
நாடி பிடித்து பார்த்த பின்னே
நல்ல மனிதன் செத்தான் என்பார்
இறந்து விட்டால் கருவிழியோ
இரண்டாக வெடித்திடுமாம்
அரவம் மனிதன் தீண்டி விடின்
அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
கவிழ் தும்பை சாறெடுத்து
காதோடு மூக்கு வழி
உயிர் பிரியும் மர்மம்
விட்டு பாரு பிழைத்திருப்பான்
வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
மரணித்தான் என்பாராம்
இறந்தவர்கள் மூன்று நாளின்
இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
அதனாலே மூன்று நாள்
அவர் உடலை வைத்திருப்பார்
பண்டைய மருத்துவத்தின்
பறை சாற்றல் இதில் இருக்கு
இக்குறிப்பை எடுத்து வைத்து
இரண்டொருவர் பகிர்ந்து விடு
விலங்குகள் உயிர் பிழைக்கும்
விசித்திரம் இதில் இருக்கு
கானகத்தில் இம் மூலிகையை
கண்டு உண்டு உயிர் வாழும்
பார்த்தாயா என் மனிதா
படைத்தவனின் படையலதை
வீரப்பன் காட்டில் வாழ்ந்த
விசித்திரம் இது தானோ ..?
கடாறிந்த பழங்குடியின
கை வைத்தியம் இதுவன்றே
ஏ மனிதா கை கூப்பி
எமை படைத்தவனை வணங்கி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
இன்றே மன்னித்து விடு
இன்றே மன்னித்து விடு
வாயோடு வாய் வைத்து
வந்து வழி பேசி நின்றேன்
நீயுரைத்த மொழி கேட்டு
நீர் விழியோடு யான் தவித்தேன்
ஆறாத என் மொழிகள்
ஆறாண்டாய் வாட்டியதோ …?
சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
சூட்டோடே சொல்லி விடு
வார்த்தையால் உனை கொன்று
வாழ்வதென்ன வாழ்வோ …?
வளர் பிறையின் முழு நிலவே
வாழும் போதே புரிந்து விடு
திட்டமிட்டு வாயில் வந்து
திட்டுவது யான் அல்ல
திட்டங்களை மூழ்கடிக்க
திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்
உச்சி முதல் உள்ளம் வரை
உயிரே வலிக்குதடி
பகுத்தறிவை படித்து வைத்து
பக்குவத்தை நட்ட பின்னர்
உன்னை வசை பாட
உயிரே நான் நினைத்ததில்லை
என் உயிலில் மாற்றமதை
எண்ணுறவே கண்டு விடு
எட்டாண்டு உயிர் வாழும்
என் உடலோ புரிந்து விடு
இறக்கும் முன்னர் ஒரு முறை
இன்றே மன்னித்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-10-2021
இன்றே இவரை விரட்டு
இன்றே இவரை விரட்டு
சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
ஒற்றுமை பேனா தமிழனை – தலை
ஒடித்து போடடா காட்டிடை
லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
நக்கியே பிழைக்கும் நாய்களை
கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
கோடிகள் வாழ்ந்திட புரியடா
அறத்தினை கொன்றவன் நாட்டிடை
அண்டியே வைத்தால் தீட்டடா
வாலாட்டும் இந்த நாய்களால்
வையத்தில் முளைக்குத்து கேடடா
வீடே முதலெனே நினைப்பவர் – இன
விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
தூவெனெ துப்படா – இந்த
துரோகியை இன்றே வீழ்த்தடா
கோபத்தில் களையாய் பொங்கடா
கொடியோர் செயல் விழ பாயடா
நாளை தமிழர் ஆளவே
நம்பிக்கை நட்டு வையடா ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-10-2021
உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்
குப்பையில கிடந்த என்னை
குளிப்பாட்டி எடுத்தவளே
மனிதனாக நட்டு வைத்து
மறந்தின்று போவதெங்கே ..?
இதய வங்கியில
இன் முகத்தை வைத்தேனே
அங்கமெல்லாம் உனை தொடர
அன்பே சிறை பட்டனே
சுட்டெரிக்கும் வெயில் பட்டு
சுடுகின்ற என் உடலில்
குளிர்கின்ற உன் நினைவு
குழந்தை போல் கத்துதே
தேகமதில் தென்பு தந்து
தேர்வெழுத வெல்ல வைத்து
நட்பை நட்டவளே – உனை
நான் மறந்து போவதுவோ ..?
எல்லாமும் செய்தவளே
என் மனதை காணலையோ ..?
உன்னிடத்தில் வச பட்டேன்
உள் மனதை புரியலையோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 17-10-2021
வீழ்த்தடா அவன் தான் பகைவன்
வீழ்த்தடா அவன் தான் பகைவன்
முப்படை தாங்கியே எழுந்தார்
முன் தினம் விழ நின்றார்
இப் படை ஆட்சியில் நன்றே
இடை அடி கழுவி நின்றார்
குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
இத்தரை தமிழ் நிலம் எங்கும்
இது போல் தொடர்நிலை இன்றேன் ..?
வல்வையில் பிறந்தான் ஒருவன்
வைத்தொரு போரை செய்தான்
இப் புவி தமிழன் ஆழ
இல்லம் வந்து தொழுதான்
முத்தி பெற்றிட முன்னே
முன் நிலை அறியா அவனை
வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 16-10-2021
இன்றே மனதை மாற்றி விடு
இன்றே மனதை மாற்றி விடு
காற்று உலகில் இல்லை என்றால் -உலகில்
காணும் உயிர்கள் ஏதும் இல்லை
நாற்று வயலில் இல்லை என்றால்
நாவுக்கு சோறு ஏதும் இல்லை
ஓடும் நதிகள் வேண்டும் என்றால் – உலகில்
ஓங்கும் மரங்கள் வேண்டும்
கொரனோ உலகில் அழிந்து விட – உலகில்
கோபுர மலைகளை வேண்டும்
இயற்கை உயிரை காத்து விடும்
இன்றே அதனை வாழவிடு
இடையில் வந்த மனிதன் மட்டும்
இடரை தந்தான் கொன்று விடு
நானே முதலென நினைத்து விடும்
நகலினை இன்றே எரித்து விடு
நாடே எந்தன் முதலெனே நினைத்து
நாட்டில் உயிர்களை வாழவிடு
இயற்கை மட்டும் உயிருடன் வாழ்ந்தால்
இன்றே உலகில் பஞ்சமில்லை
இன்றே துரத்தும் நோய்களும் ஓடும்
இன்றே மனதிற்கு அச்சமில்லை …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 15-10-2021
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
தொட்டதை விட்டான் கடல் எழ
வன புலி என்றே இவன் எழ
வாடினர் பகைவர் விழி அழ
நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
நெய்திட அன்றே வந்தான்
கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
கொடி நாட்டே போர் செய்தான்
கடலென தரையென விரிந்தவர்
கடுகதி வானிடை ஏறினர்
முப்படை தாங்கியே விண்ணிடை
முப் போரினை விரித்தனர்
அப்படை தளபதி அரியணை
அத்தனை வந்ததுமே குந்தினர்
எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
எங்களின் மறவரே தரித்தனர்
இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
இப்படி விழும் படி சிரித்தனர்
இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
இப் புகழ் நிலை விடியலிடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
அழுகுரல் கேட்கிறதா
அழுகுரல் கேட்கிறதா
அந்தி பொழுதில் நந்தி கடலில்
அழுகுரல் கேட்கிறதா?
அவல சாவின் ஆவிகளின்
ஆத்மா துடிக்கிறதா
ஓடிவந்தவர் கூடி நின்றவர்
ஒரு நொடி வீழ்ந்தனரே
ஓடி வந்த கந்தக கூண்டில்
ஓர் நூறாய் கிழிந்தனரே
பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
இது தான் படையெடுப்போ ..?
பகலும் இரவும் மாறி வரும்
பகைமை உணர்வீரா
ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
ஓடிடும் பகைமைகளே
ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
ஓடி அழுவீரே
விதைத்தவன் வினையை
விரைவில் அறுப்பான்
விளைச்சல் இது தானே – இந்த
விபரம் தெரிவானே
எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
எப்படி வாழ்ந்திடுவான்..?
ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
எப்போ வெடித்திடுவாய்..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-10-2021
இதை சொல்ல உன்னால் முடியுமா
இதை சொல்ல உன்னால் முடியுமா
இன்றே உலகம் படித்து விட
இணையம் வந்திடவா
எதிரி அந்த பகைவன் கொலையை
எழுதி வைத்திடவா
அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
அலசி வந்திடவா
சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
சுழற்றி கூட்டிடவா
விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
விடு கதை சொல்லிடவா
அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
ஐ பீ சி கொழுத்திடவா
ஆதவன் அன்றே ஆடி நின்றார்
ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
நேர்த்தி இவர் அல்லவா
காலை கதிரில் மாலை மலரில்
கண்ணீர் கதையல்லவா – நீ
வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
வீர கேசரியா
இதை சொல்ல உன்னால் முடியுமா
மனிதம் இல்லா மனிதன் அறிவில்
மறதி முதல் அல்லவா
பதிவு செய்தி பதியா மருவும்
பகலவன் இவர் அல்லவா
லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
லட்சங்கள் பார்த்துவிடு
இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
இழிநிலை செப்பிவிடு
புதின பலகையில் சங்கதி ஏறி
புதினம் தந்திடுமா ..?
தேனியில் ஏறி கூடு கட்டி
தேன் வலம்புரி வந்திடுமா ..?
யாழில் ஏறி அதிரடி ஓட -புது
யாழ் பிறந்திடுமா ..?
உதயனில் ஓடி தினக்குரல் பாட
உதயம் பொங்கிடுமா ..?
இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
இன்றே எண்ணிவிடு
இந்த துணிவு எவருக்கு வரும்
இருந்தால் சொல்லி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-10-2021
ஓடும் அந்த அருவி பக்கம்
ஓடும் அந்த அருவி பக்கம்
ஓடம் காத்திருந்தேன்
நீ வருவாயென பார்த்திருந்து
நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
அருவி பாடிய ஓசையில – உன்
ஆடல் கேட்கவில்லை
அந்த வேளையில் கண்ணுறக்கம்
அன்பே தெளியவில்லை
மூணு நாளா எடுத்து வைத்த
முன்னோட்டம் கரைந்திருச்சு
ஆள் மனதில் முளத்த ஆசை
ஆற்று மண்ணா கரைந்திருச்சு
உன் மீது குற்றமிட
உண்மையில் முடியவில்லை
உள்ள வேதனை மறைத்துவிட
உருளும் விழிக்கு தெரியவில்லை
நான் வரைந்த ஓவியத்தின்
நனையும் மையா நீயிருந்தாய்
உனை வரைய எனை வைத்து- நீ
ஊமையாகி ஏன் போனாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-10-2021






