Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை
தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.
கூட்டத் தொடரின் ஐந்தாம் நாளான செப்ரெம்பர் 16 வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த ( Special Rapporteur on the promotion of truth, justice, reparation and guarantees of non-recurrence) உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
உத்தரவாதங்கள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை தொடர்பான கருத்தாடலிலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம்
அவர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கைத்தீவில் பாரிய அட்டூழியங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் தமிழர்களுக்களாகிய
எமக்கு, ஐ.நாவின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான சிறப்பு அறிக்கையாளரது அறிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஐநாவின் உள் ஆய்வு அறிக்கையின்படி, இலங்கையின் போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாரிய குற்றங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரைத்து அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு முன்னர் இருந்த அனைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர்களும் இதனை வலுப்படுத்தியுள்ளனர்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் எந்த தயக்கமும்
இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பேற்ற வேண்டிய தேவை இல்லை என்ற நிலையில, அதனைச் செய்யத் துணிந்துவிடுவார்கள்.
இவைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்விற்கான சர்வதேச மத்தியஸ்தம் உட்பட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
நீண்ட காலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும்,
சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத் தொடரில் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான
போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையில் கருத்துரைகளை சபையில் தொடர்சியாக வெளிப்படுத்தி
வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு
ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு
ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்கிரேனின் கார்கிவ் பகுதியை .உக்கிரேன் இராணுவம் மீள கைப்பற்றிய .நிலையில் இந்த அறிவிப்பை உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ..
உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில், ரஷ்ய இராணுவத்தினர் ,ஆரம்பித்த பொழுது ,இலங்கையர்கள் சிறை பிடிக்க பட்டனர் .
அவ்வாறானவர்களே தற்பொழுது விடுவிக்க பட்டுள்ளனர் .
ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு
இலங்கையில் இருந்து, ரஸ்யாவுக்கு மருத்துவ கல்வியை கற்க சென்றவர்களே, இந்த இலங்கை மாணவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் அமெரிக்கா ஆயுத உதவியுடன் ,இழந்த பகுதிகளைஉக்கிரேன் இராணுவம் மேடிட்ட வண்னம் உள்ளது .
தொடர்ந்து உக்கிரேனில் ரஸ்யா உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
லண்டனுக்கு பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
லண்டனுக்கு பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
லண்டனுக்கு பிரிட்டன் மகாராணியின் மரண சடங்கிற்கு ,ரணில் விக்கிரமசிங்கா பயணித்துள்ளார் .
திங்கட்கிழமை பிரிட்டன் மகாராணிக்குயின் உடல் இறுதி கிரியைகள் இடம் பெறுகின்றன .
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே ,ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் .
லண்டன் பயணித்தின் பொழுது ,தமிழ் கட்சிகள் மற்றும் ,தொழிலதிபர்களை
சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ,ரணிலுக்கு கிட்டலாம் என எதிர் பார்க்க படுகிறது.
புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு
புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும்
திரளான ஆயுதங்கள் இன்று (16) வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை
நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதிவழங்கினார்.
புலிகளின் முகாமில் ஆயுதங்கள் மீட்பு
இதனையடுத்து சம்பவதினமான இன்று (16) திங்கட்கிழமை வாழைச்சேனை மற்றும் வாகரை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு அகழ்ந்தனர்.
இதன் போது அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வாகரை பொலிஸார்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதல் இடம்பற்றுள்ளது .
தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது மணமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்
மாப்பிள்ளையால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் ஹோட்டலின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
நீச்சல் குளத்தில், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்களுடனான வாக்குவாதம் அதிகமாகி, அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்து தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக, இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்கள், உதவி கிடைக்க உள்ளது .
இந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து வெளியாகியுள்ளது .
இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரிட்டன் ,ஜாப்பானுக்கு பயணிக்கிறார் .
இவரது இந்த பயணத்தின் பொழுது ,இலங்கை நிதி நிலைகள் தொடர்பாக பேச படும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் ஜப்பன் இலங்கைக்கு ,சர்வதேச நாநாணய நிதியத்தின் ஊடாக நிதியை பெற்ற கொடுப்பதில் ,அதி தீவிர முனைப்புடன் செயல் பட்டு வருகிறது
.
இவ்வாறான நிலையில் இந்தியா ,நீதி உதவிகள் வழங்குவதை, நிறுத்தி கொண்டுள்ளதாகக தகவல்கள் வெளியிட பட்டுள்ளது .
பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு
பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு, பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு
மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச
செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு
இந்நிலையில் சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மா பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பால்மா புதிய விலையான 1,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்களும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு
நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட
அதிக விலைக்கு விற்பனை செய்வதையும், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை
செய்பவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர்
அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்
யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்
துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், சட்டத்தரணி என தகவல் வெளியாகியுள்ளது.
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணியான பெண் தெரிவித்துள்ளார்.
அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால
கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால
ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின்
298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்
கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான நேரம் 30 நிமிடங்களினால் நீடிக்கப்பட்டது.
அதன்படி நேற்று (15) முதல் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பங்குச் சந்தை வர்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்
அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன்
வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும்,
மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.
வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்
வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்
வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார் .இலங்கை அரசியலில் ,ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றாராம் .
ராஜபக்ச ஆட்சியின் கால் கழுவி , நக்கி பிழைத்து வாழும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் .இப்பொழுது தமிழர்கள் ,அவர் தம் தீர்வு பற்றி பேசிட முனைகிறார் .
தமிழர் பிரச்சனைகளை சுமந்திரனை வைத்து ,நீர்க்க செய்து ,சிங்கள அரசுக்கு விசுவாசமாக வாலாட்டி வருகிறார் சம்பந்தர் .
சாகும் வேளையில் மீளவும் ,இப்பொழுது தமிழ் தேசியம் தொடர்பில் தூசி தட்டி பேசிட முனைகிறார் .
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ,தமிழர்கள் கொன்று புதைக்க பட்டு ,தமிழர்கள் அடிமையாக அடக்க படுகின்ற செயல்கள் தொடர்கின்றன .
பிரபகாரன் துரோகி என வசை பாடிய கிழட்டு சம்பந்தர், இப்பொழுது மீளவும் ,தமிழ் தேசியம் பேசிட முனைவது ,தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும் சுமந்திரன் அந்த கட்சியில் இருந்து நீக்க பட்டால் மட்டுமே,
தமிழர்களுக்கு ,விடிவு கிட்டும் என்பது தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது .
பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்
பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்
பேருவளை கடல் பகுதியில் குளிக்க சென்ற மூவரில் ,ஒருவர் நீரலையில அடித்து செல்ல பட்டு காணாமல் போயுள்ளார் .
மேலும் அவர் கூட குளிக்க சென்ற இருவர் ,மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
நீரில்அடித்து செல்ல பட்டு காணமல் போன நபரை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,சூழியோகிகள் மற்றும் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கை கடல் மற்றும், குளங்களில் இவ்விதம் குளிக்க சென்று, பலர் இறந்து செல்கின்றமை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தகக்து.
இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை
இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை
இலங்கையில் 19 ஆம் திகதி பாடசாலைகள் யாவும் விடுமுறை வழங்க படுகிறது .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் ,இறந்த நினைவு துயரை பகிரும் முகமாக ,இலங்கையிலும் பாடசாலைகள் விடுமுறை வழங்க படுகிறது .
இவ்வாறு வழங்குவதன் ஊடாக ,பிரிட்டன் அரசின் ஆதரவை இலங்கை பெற்று கொள்ள முனைவதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை அவர்கள் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பிரிட்டன் பயணமாகிறார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.
மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா
மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா
மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மாற்றம் பெற்றுள்ள ராஜபாக்ஸ குடும்பம் ,போர் குற்றத்தில் தண்டிக்க பட வேண்டும் என ,அமெரிக்கா செனட் சபை உறுப்பினரும் ,வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவருமான மோப் மைண்டஸ் தெரிவித்துள்ளார் .
தமது எதிரிகளை கொடூரமாக மவுனமாக்கிய இவர்கள் ,தமது ஆளும் அதிகாரத்தை வலுப்படுத்தி கொள்ள எதிரிகளை ,அழித்து ஒழித்தனர் என்கிறார் அவர் .
இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் ,அரசியல் கொந்தளிப்பை ,இன மோதல்களை ஏற்படுத்தி ,நாட்டை பதட்டத்திற்குள் உள்ளாக்கி வந்த ,ராஜபட்ச அரசு மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மற்றம் பெற்றுள்ளனர் என்கிறார் அவர் .
இவ்வாறான ராஜபக்ச குடும்பம் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அவர் தெளிவிக உள்ளதை ,அவரது அறிக்கை காண்பித்துள்ளது .
நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு
நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு
நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்றும் அங்கு ஏற்கெனவே 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள் எனவும் கொழும்பிலுள்ள
நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்தார்.
நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பில் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல
ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியுஸிலாந்து உயர்ஸ்தானீகராலயத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து
உயர்ஸ்தானீகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்தார்.
“5 மில்லின் மாத்திரமே சனத்தொகையைக் கொண்ட நியூஸிலாந்து நாடு இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
“இங்கே அமர்ந்திருக்கக் கூடிய இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள், நியூஸிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன்.
“நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்த வேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து
உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம்
வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டுமென நான் அவாவுறுகின்றேன்” என்றார்.
காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .
மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர்கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கடல் படையல் கைது செய்யப்பட்டு .காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளனர் .
தலை மன்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற பொழுது ,கடல் படையால் கைது செய்ய பட்டனர் .
இவ்வாறு கைதானவர்கள் தற்போது நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து ,இந்தியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1.450 அ திகரித்துள்ளது .
மேலும் இந்த சிக்கன் கிலோ ஒன்றுக்கு ,50 ரூபாவினால் மூன்று நாளுக்கு ஒரு தடவை ,அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இந்த கோழியின் விலையினால் ,மக்கள் பெரிது பாதிக்க பட்டுள்ளனர் .
இறைச்சி கோழிகள் இப்பொழுது, திடிரென விலை அதிகரித்து செல்வதால் .நாளாந்தம் கூலிகள் பாதிக்க பட்டுள்ளனர்.









