இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.

இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.

இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்று (06) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ​​மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்

அரசியல் கட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்

கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இங்கு வரவில்லை. ஜனாதிபதியாக உங்கள் அனைவருக்காகவும் பணியாற்றுகின்றேன். இப்போது நாம் பாரம்பரியமாக நினைத்த காலம் முடிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

நாட்டின் தேவைக்கேற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சி அமைப்பின் விருப்பப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதைச் செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடைசிவரை யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

இது குறித்து முக்கிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடுவது நல்லது என்று நான் நம்புகிறேன். பழைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கிராமங்கள் கட்டியெழுப்பப்பட்டன. ஆனால் தற்போது பல புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. அடுத்த தேர்தலில் இதெல்லாம் மாறலாம். கட்சிகளைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையேல் பிரிவுதான் ஏற்படும் என்றார்

மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை

கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்தக் கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து மன்னா கத்தியால் அவரின் கழுத்தில் தாக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சந்தேநபர் தெரிவித்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய மன்னா கத்தி பிரிவென வீதியில் உள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை

இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது.

தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
Posted in இலங்கை செய்திகள்

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கடத்திச் சென்ற மூவரை கைது செய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுகின்றது.

இதையடுத்து இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடலோர கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை அடுத்த சிங்கி வலை குச்சு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும், மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த படகைச் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பொதியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து மத்திய வருவாய் துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த ஹாஜா செரீப், ஹம்துன் திஸ்தர்,ஹெரோஸ் அலி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும் படகுடன் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாங்கள் இலங்கையில் இருந்து படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும் அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜி.பி.எஸ் கருவியை கொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வியாழன் மாலை வரை தங்கத்தை கடலுக்கு அடியில் தேடி கிடைக்காததால் நேற்று வெள்ளி காலை முதல் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் தங்கம் அடங்கிய பொதியை தேடி வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (5) மாலை 3.00 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்கம் அடங்கிய பொதி கிடைத்ததையடுத்து தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு எடுத்து சென்று எடை போட்டு பார்த்ததில் அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என மத்திய வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கம் யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்தது சிறுவன் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு நானுஓயா பிரதான நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்தான்.

காயமுற்ற சிறுவன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதே மரம் முறிந்து விழுந்தது.

வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றைச் சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்த வேலையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் இந்த விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இந்த விபத்தினால் அந்த வீதியூடான போக்குவரத்து சற்று நேரம் பாதிப்பு ஏற்பட்டது. முச்சக்கரவண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ளது

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களில் அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

ஆலயத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஆலயத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்

ஆலயத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சம் நடைபெற்று வருகின்றது.

இந்த உற்சலத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் சாமி தூக்கினர்.

சுவாமி வீதிஉலா வரும் போது அவர்கள் சுவாமியை தூக்கியுள்ளனர். வெளிநாட்டவர்கள் இவ்வாறு சுவாமி தூக்கும் நிகழ்வை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும்.

பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல், சமூக நீதிக்காக குரல் கொடுத்தல், அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான – சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீர் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுதல், நீர்துறையில் மறுசீரமைப்பு என தான் அமைச்சு பதவி ஏற்றதில் இருந்து புரட்சிகரமான மாற்றங்களுக்காக இவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். அதற்கான வேலைத்திட்டங்களுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.

பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

YGL சமூகம் என்பது உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பில் உறுதிபாட்டை பகிர்ந்துகொள்ளும் 1000 இற்கு மேற்பட்ட இளம் தலைவர்களைக்கொண்ட ஒரு தனித்துவமான சமூகமாகும். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவ பண்பு மற்றும் அயராத முயற்சி என்பவற்றுக்கு கிடைத்த அங்கீகாரமே இத்தெரிவாகும்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு உலகளவில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த அங்கீகாரம் பெருமையளிக்கின்றது. அவருக்கு அமைச்சு சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுப்பதற்கும், இளைஞர் வலுவூட்டலை ஊக்குவிப்பதற்கும், உலக அரங்கில் இலங்கையின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கும் அமைச்சருக்கு பக்கம் பலமாக இருப்போம்.

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.

அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.

அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.

தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.

அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது

ஆமி காரனை அனுப்பவா உண்ட அம்மாவுக்கு தமிழ் பொண்ணு பேச்சு வீடியோ பாருங்கோ ..
Posted in இலங்கை செய்திகள்

ஆமி காரனை அனுப்பவா உண்ட அம்மாவுக்கு தமிழ் பொண்ணு பேச்சு வீடியோ பாருங்கோ ..

ஆமி காரனை அனுப்பவா உண்ட அம்மாவுக்கு தமிழ் பொண்ணு பேச்சு வீடியோ பாருங்கோ ..|

தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ் பெண்களை மிக கேவலமாக பேசிய தமிழ் பொண்ணு .

கேடு கெட்ட வார்த்தைகள் ,தமிழர்களை ஆத்திரமூட்ட வைத்த சைக்கோ பெண்ணின் பேச்சு .

யூதனை கொன்ற ஜெர்மன் இன்று இஸ்ரேலுடன் ஒன்றாகியுள்ளது .நாளை தமிழர்களும் சிங்கள மக்களும் இதுபோல இணைந்து அண்ணன் தம்பியாக வாழ்வார்கள் அது மாறும் , அரசியல் எப்பொழுதும் மாறக்கூடியது ,

இது போன்ற முட்டாள்கள் ..தூ

தனது கணவன் கையை மார்பை கடித்ததாக இந்த பொண்ணு தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பெற்ற தாயை விபச்சாரி என்றால் யாரையும் தான கோபம் வராது சொல்லுங்க மக்களே

வீடியோ

https://www.youtube.com/watch?v=TtjDchm7zF4
கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட

செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்

இந்நிலையில் அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை. எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு

தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணத்தினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை

இந்நிலையில் பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது அத்தோடு குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பத நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் நேற்று தவணையிடப்பட்டிருந்தது.

கந்த வழக்கின்போது அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகு

அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய்

செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, நேற்று (04) அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலிலுடன்

மோதுண்டனர். இதனால் இளம் குடும்பத் தலைவரும் சில மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தினையடுத்து, பிரதேச மக்களினால் புகையிரத கடவையில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிக தீர்வொன்றினை உடனடியாக

அமுல்ப்படுத்தியதுடன், நிரந்தர தீர்வாக ஓசை எழுப்பும் வகையிலான ஒளி சமிஞ்சை விளங்கு மற்றும் பாதுகாப்பு படலை ஆகிவற்றை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க தரப்புக்களின் ஊடாக முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பினை

செயற்பாடுகளை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீது IMF க்கு பலமான எதிர்பார்ப்பு

இலங்கை மீது IMF க்கு பலமான எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்தது.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்கள்

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை பொலிஸாரால் தெரிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சந்தேகநபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து நாடு முழுவதும் போதைப்பொருள்களை மிக நுணுக்கமாக விநியோகம் செய்து வருகின்றமையும் இந்த விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர்.

இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு சமகி ஜன சந்தனவில் இணைந்துள்ளனர்

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை உணவு பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு ஒன்றித்து உறவுகளை பேணுவதால் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வறுமை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.

நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமை, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர். நன்றாக இருந்த மக்களின் வாழ்வு சுருங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் சொல்லும் ஸ்திரத்தன்மை புதிய இயல்பு நிலையாக்கத்தால் நடந்துள்ளது. புதிய இயல்பு நிலையில் மக்களின் பிரச்சினைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் 2 இலட்சம் நுண்ரக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைத்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி ஸ்திரத்தன்மைக்கு செல்ல முடியும். மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ள புதிய இயல்பு நிலையால் நாட்டுக்கோ அல்லது 220 இலட்சம் மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதால், வறுமையை ஒழிப்பதற்கான தேசியத் திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு கல்விக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 139 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நேற்று (03) நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்கவும், மத நல்லிணக்கத்தை உருவாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் கல்வியானது பயன்படும். எந்த தீவிரவாதத்துக்கும் இடமளிக்கக்கூடாது.

ஒரு நாடாக, ஒரு தாயின் பிள்ளைகளாக நடுநிலை போக்கில் சமத்துவம் என்ற கொள்கையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும். எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் சமம்.

உயர்சாதி செல்வந்த குடிமக்கள் அல்லது தாழ்ந்த சாதாரண குடிமக்கள் என்று 2 வகையான குடிமக்கள் இங்கு இல்லை. அரசியலமைப்பின் முன் நாம் அனைவரும் சமம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதை பாதுகாக்கவும், அதன் உரிமைக்காக குரல் கொடுக்கவும் முன்நின்றவர்கள், பாராளுமன்றத்தில் இருந்து நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்த பிற்பாடு, நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.

பாராளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பாவையாக கருத்திற் கொள்ளப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம், நீதித்துறை என 3 பகுதிகள் உள்ளதால், எந்த ஒரு நிறுவனமும் மற்றொரு நிறுவனத்தை குறைமதிப்பிற்குட்படுத்ததாது, தடைகள் மற்றும் சமன்பாடுகள் மூலம் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

யுத்தத்தால் முல்லைத்தீவு பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. போருக்குப் பின்னர் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியாலும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.

தேர்தல் காலத்தில்தான் வடக்கு கிழக்கை நினைவு கூர்கின்றனர். இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
Posted in இலங்கை செய்திகள்

ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி

ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி

தமிழ் ஈழத்தையம் அதன் தாய் மார்கள் ,பெண்களை இழிவாக பேசினார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவருக்கு தர்ம அடி வழங்க பட்டுள்ளது .

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முக நூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது .

ஈழ மக்களையும் ,அந்த பெண்களையும் இழிவாக கதைக்காதீர்கள் என தெரிவித்து அந்த பெண்ணிடம் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

ஆனால் அதனை மீறி அவர் டிக் டோக்கில் அருவருப்பாக பேசியதாக தெரிவித்தே, கோபமடைந்த மக்கள் குழு இவர் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .

போரில் பல உறவுகளை பறிகொடுத்து, அந்த மன விரக்தியில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை சீண்டியவர்களுக்கே இவ்வாறு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரியவருகிறது .

டிக் டோக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பல விடயங்கள் பகிர பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.facebook.com/reel/917190570143891