Posted in சினிமா

நடிகைக்கு பாலியல் தொல்லை

நடிகைக்கு பாலியல் தொல்லை

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா வழக்கின் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

நடிகைக்கு செக்ஸ் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கணேஷ் ஆச்சார்யா


இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி

ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து

வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்திருந்தார். அதன்பின் புகாரின் அடிப்படையில் கணேஷ்

ஆச்சார்யா மீது மும்பை போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யாவின் மீது


பதியப்பட்ட இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மும்பை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு

    சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்க பட்டுள்ளதாம் – கதைவிடும் அரசு

    இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில்


    அதனை அடக்கும் முகமாக சமூக வலைத்தளங்கள் தடை செய்ய பட்டன ,அவை தற்போது நீக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


    எனினும் அவை பல பகுதிகளில்ஸ் செயல்பட முடியாத நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றன

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு

      இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு

      இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து


      தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்

      தற்போது 13
      ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க

      படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது

      இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

        வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

        இன்று ஆப்கான் தலைநகர் மேற்கு காபூல் பகுதியில் உள்ள சந்தை பகுதியில்

        மறைத்து வைக்க பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதில் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

        மேலும் சிலர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்


        தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் ஆளும் பகுதிக்குள் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது

        இது இவர்களின் பாதுகாப்பில் உள்ள ஓட்டை எனவும் ,விரைவில் இவர்கள்

        ஆட்சியும் கவிழ்க்க படும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது

          Posted in உலக செய்திகள்

          வடகொரியா ஏவுகணை சோதனை – கதறும் தென்கொரியா

          வடகொரியா ஏவுகணை சோதனை – கதறும் தென்கொரியா

          வடகொரியா மீது அமெரிக்கா நேசபடைகள் தாக்குதலை நடத்த முஸ்தீபுகளை

          மேற்கொண்ட வேளை
          வடகொரியா புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது

          சமீப நாட்களில் நடத்த பட்ட சோதனை அமெரிக்கா வரை சென்று தாக்கும்

          திறன் கொண்ட ஏவுகணைகள் வடிவமைப்பபை கொண்டது என அமெரிக்க

          உள்ளிட்ட நடுகள் கூக்குரல் இட்ட வண்ணம் உள்ளன

          வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நமக்கு பெரும் ஆபத்து என

          தென்கொரியா,மற்றும் ஜப்பான் கூட்டாக தெரிவித்துள்ளன

          வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நாடுகளுக்கு இடையில்

          பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது ,ஆனால் வடகொரியாவோ தமது நாட்டின் தேசிய


          பாதுகாப்பிற்கு இவற்றை தாம் சோதனை செய்து வருவதாக தெரிவித்து வருகிறது

          அடிபணிய மறுக்கும் வட கொரியாவின் அசுர வளர்ச்சி அடக்குமுறையாளர்களுக்கு

          வழங்க பட்ட நெத்தியடி என்பது வீரத்தின் வடிவம் என்றால் மிகையாகாது

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்

            கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்

            இலங்கையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழும் மக்கள் புரட்சியை தடுக்க

            ஊரடங்கு சட்டங்கள் அமுல்படுத்த பட்டுள்ளன ,.

            ஆவ்வறான காலப்பகுதியில் மக்கள் அதிகம் கூடி புரட்சி நடத்த காரணமாக

            விளங்கிய சமுக வலைத்தளங்கள் மீதும் அரசு தடை விதித்துள்ளது

            இந்த சமூக முகவலைத்தள முடக்கம் அர்த்தம் அற்ற ஒன்று எனவும், அவற்றை

            தான் எதிர்க்கிறேன் என தனது சித்தப்பா கோட்டாவுக்கு எதிராக மகிந்த மகன்

            நாமல் கொதித்து எழுந்துள்ளாராம்

            இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும்

            என்பது சொல்லியா தெரியவேண்டும் என்பது சமூக வலைத்தள நபர்கள்

            பேச்சாக பதிய பெறுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஓயாது எழும் மக்கள்

              கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஓயாது எழும் மக்கள்

              ஆளும் ராஜபஸ்க்ஷா அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயல் பாட்டினால்

              நாடு பஞ்சத்தில் சிக்கியுள்ளது


              இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு மக்கள் தொழில்துறை பாதிக்க பட்டு பட்டினியில் நாடு சிக்கி தவிக்கிறது

              இந்த நிலைக்கு மக்களை இட்டு சென்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்

              ஆர்ப்பாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்

              இவ்விதம் சஜிதா பிரேமதாச கட்சியினரால் கொம்பு சுதந்திர சதுக்கத்தில்

              ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த பட்டு கொண்டுள்ளது

              ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள்

              இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

                நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

                இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக


                நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு

                ,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது

                ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த

                உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  வேற்று கிரகவாசி சடலம் மீட்பு – வைரலாகும் புகைப்படம்

                  வேற்று கிரகவாசி சடலம் மீட்பு – வைரலாகும் புகைப்படம்

                  அவுஸ்ரேலியா குயின்லாந்து கடற்கரை பகுதியில் மர்ம உயிரினம் ஒன்று

                  இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது


                  அந்தக் கடல்கரை வழியாக பயணித்த ஒருவரது கமராவில் மேற்படி உயிரினம்

                  சிக்கியது
                  அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது

                  இந்த உயிரினம் வேற்று கிரகவாசியாக இருக்கலாம் என்பது நெட்டிசன்கள்

                  கருத்தாக பதிய பெற்று வருகிறது

                    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                    Posted in இலங்கை செய்திகள்

                    ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

                    ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

                    இலங்கை Madipola பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 வயதுடைய

                    நபர் ஒருவர் பலி யாகியுள்ளார்

                    இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீசார்

                    விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                    நாடெங்கும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு

                      மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு

                      இலங்கையில் மின்சாரம் ,டீசல்,பெட்ரோல் இல்லாத நிலையில் இணைய

                      சேவைகள் மற்றும் கைபேசிகள் ,கணனிகள் இயக்க முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்

                      இதனால் தொடர்பாடல் துண்டிக்க பட்டு மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                      இவை திட்டமிட்டு நடத்த படும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது

                      என கோரி மக்கள் கொதித்து வருகின்றனர்

                      அணைத்து விதத்திலும் மக்கள் அடக்கி ஒடுக்க படும் நிகழ் கால நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளது


                      இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொதிப்பில் உறைய

                      வைத்துள்ளதுடன் அரசுக்கு எதிராக மக்கள்


                      எழுச்சி கொள்ளும் நிலையை மேலும் உருவாக்காகி வைத்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்

                        பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்

                        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும்

                        நிலையில் அதனை தடுத்திட கோட்டாவினால் வர்த்தமானி மூலம் அறிவித்தல்விடுக்க பட்டுள்ளது

                        இதன் விடயம் யாதெனில் பூங்கா ,மற்றும் பொது இடங்களில் மக்கள்

                        கூடுவதற்கு தடை விதிக்க பட்டுள்ளது


                        அதனை மீறி ஒன்றுகூடினால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது

                        மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து வித சட்டங்களும் அமூல் படுத்த பட்டு சர்வாதிகார


                        போக்கில் அரசு நாட்டை நகர்த்தி செல்வது மேலும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

                          Posted in Uncategorized

                          அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது

                          அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது

                          ஊரடங்கு வேளையில் மேல்மாகாணத்தில் உலவிய 660 மக்களை தாம் கைது செய்துள்ளதாக


                          காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                          மேலும் ஆட்சியாளர்களுக்கும் ,அவர்தம் அமைச்சர்களுக்கும் எதிராக மக்கள்

                          போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

                          இதனை தடுக்க விதிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் உலவியதால்

                          இந்த கைது வேட்டையை நடத்தி மக்களை அரசு அச்சுறுத்தி வருகிறது

                          இந்த செயல் பாடு மேலும் மக்களை கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கைக்குள் இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு

                            இலங்கைக்ள் கு இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு

                            இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலவரங்களை அடுத்து ஆளும்

                            அரசுக்கு எதிராக இராணுவம் திசை திரும்ப கூடும் என்பதால் அதனை கட்டு

                            படுத்த இந்தியா இராணுவம் இலங்கைக்கு அனுப்ப பட்டுள்ளதாக பரவி வந்த

                            சமூக வலைத்தள செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது


                            அவை வெறும் வதந்தி என விழுந்தடித்து மறுத்திருக்கும்செய்தி என்பது பலத்த

                            சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in Uncategorized

                              இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்

                              இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்

                              இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து

                              போராட்டத்தில்


                              குதித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களான Twitter, FB and YouTube

                              பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ளது

                              இவற்றுக்கு தடை விதிக்க கூடும் என எதிர் பார்க்க பட நிலையில் மேற்படி

                              தடையினை ஆளும் அரசு விதித்துள்ளது குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள்

                                ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

                                ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

                                ரசியாவுடன் எமக்கான வர்த்தக தொடர்புகள் இயல்பாக இடம் பெறுகிறது என

                                சீனா தெரிவித்துள்ளது

                                சீனாவின் இந்த கூற்று அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு பெரும்

                                சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

                                ரசியாவின் உக்கிரேன் மீதான போரினை சீனா தடுத்து இருக்க கூடும் எனவும்

                                ,அதனை தவிர்த்து ஆயுதங்களை வழங்கி மேலும் யுத்தத்தில் சீனாவும்

                                இணைந்து ஈடுபட்டு வருவதான குற்ற சாட்டை


                                அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

                                  சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

                                  சூடான் Nyala பகுதியி இரு இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்


                                  மேலும் பல டசின் பேர் படு காய மடைந்துள்ளனர்

                                  பல்லாண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்று வரும் இனவாத

                                  மோதல்களில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

                                    இலங்கையில் அரச பேரூந்துகள் சேவை முடக்கம் – மக்கள் அவதி

                                    இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக,
                                    இலங்கை அரச பேரூந்துகள் முடக்க பட்டுள்ளன,

                                    இந்த சேவையானது குறுகிய தூரம் வரை இயக்க படும் எனவும் தொலை தூர ,போக்குவரத்துக்கள் ,எதிர்வரும் திங்கள் வரை மட்டு படுத்த படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

                                    இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                      Posted in உலக செய்திகள்

                                      பிரிட்டனில் பரவும் புதியவகை கொரனோ

                                      பிரிட்டனில் பரவும் புதியவகை கொரனோ

                                      தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ கொரோனா வைரஸ் ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

                                      இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தகவல்

                                      சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

                                      இதை தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்த நிலையில் டெல்டா மற்றும் ஒமைரான் வைரஸாக பரவியது. இந்நிலையில், தற்போது

                                      இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                      உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸாக இது கருதப்படுவதாகவும்,

                                      புதிய வகை இந்த கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) என்று அழைக்கப்படுகிறது என பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                      ஒமைக்ரானை விட இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 19ந் தேதி எக்ஸ்இ வகை

                                      கொரோனா முதன் முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

                                      மார்ச் 2 ந் தேதிவரை இங்கிலாந்தில் 637 பேர் எக்ஸ்இ வகை கொரோனா

                                      வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவன தகவகல்கள் தெரிவித்துள்ளன.

                                        Posted in சினிமா

                                        போக்குவரத்து விதிமீறிய நடிகர் – தண்டம் விதித்த பொலிஸ்

                                        போக்குவரத்து விதிமீறிய நடிகர் – தண்டம் விதித்த பொலிஸ்

                                        பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                                        பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                                        விதிமீறிய நடிகர்…. அபராதம் விதித்த போலீசார்
                                        மனோஜ் மஞ்சு


                                        ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். கார்

                                        கண்ணாடியில் ஒட்டப்பட்டு உள்ள கருப்பு பிலிம்களையும் நீக்கி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இதில் தப்புவது இல்லை.

                                        சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் வாகன சோதனையில் சிக்கியது. அந்த காரில் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

                                        இதுபோல் நடிகர்கள் அல்லு அர்ஜுன், கல்யாண்ராம் ஆகியோரின் கார்களிலும் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த

                                        நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் போக்குவரத்து விதிமீறலில் சிக்கி உள்ளார்.

                                        மனோஜ் மஞ்சு காரில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரது கார் கண்ணாடியில் விதிகளை மீறி கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது.

                                        இதையடுத்து மனோஜ் மஞ்சுவுக்கு போலீசார் ரூ.700
                                        அபராதம் விதித்தனர். கருப்பு பிலிமையும் கிழித்து எறிந்தார்கள்.