Author: நலன் விரும்பி
தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்
தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்
இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர்.
சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும்,
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
சிவகார்த்திகேயன் – ரஜினி
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக
இணையதளங்களில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த படத்துக்கு பாடல் எழுதுவதாகவும் தகவல் பரவி உள்ளது.
அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை அழைக்கவும் இல்லை. அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
சிவகார்த்திகேயன் – ரஜினி
எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆசை. சமூக விஷயங்களை பேசும் அழுத்தமான கதைகள் வந்தாலும் நடிப்பேன். கனா, வேலைக்காரன், ஹீரோ படங்களில் சமூக விஷயங்கள் இருந்தன. நான் நடித்துள்ள
டான் படம் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும். சினிமா இப்போது ஆரோக்கியமாக உள்ளது. ஓ.டி.டி.யிலும் படம் பார்க்கிறார்கள். தியேட்டர்களுக்கு வந்தும் பார்க்கிறார்கள். எனது படங்கள் பல கோடிகள் வசூலிக்கிறது
என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை. நியாயமான சம்பளம் வாங்குகிறேன்.
எனக்கு பிடித்த கதையில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
நடிகையை படம் பிடித்த மர்மநபர்
நடிகையை படம் பிடித்த மர்மநபர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையை படம் பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகையை படம் பிடித்த மர்மநபர்
நவ்னீத் ராணா
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் ராணா.
இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடிகை நவ்னீத் ராணாவும், அவரது
கணவர் ரவி ராணாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் ஓத முயன்றனர்.
இதுதொடர்பாக நவ்னீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 12 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள்
சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் எடுத்தபோது மர்மநபர் ஒருவர் நடிகை நவ்னீத் ராணாவை படம் பிடித்தார்.
இதுதொடர்பாக நவ்னீத் ராணா மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மருத்துவமனையில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை
கைப்பற்றி போலீசார் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?
ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?
இலங்கையின் புதிய பிரதமராக ராணில் விக்கிரமசிங்க மீளவும் நியமனம் பெற்றுள்ளார்
இவரது நியமனத்தில் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா என்பதே இன்றைய கேள்வியாகும்
ரணில் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அதனை மறந்து ரணில் இவ்விதம் அரியணை ஏறியுள்ளார்,
இங்கே கோட்டா நிறைவேற்று அதிகாரம் பறிக்க பட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா அணைத்து அதிகாரம் பெற்ற பிரதமராக மாற்றம் பெறுவார்.
அவ்விதம் எனின் ஜனாதிபதிக்கு பல்லு பிடுங்க பட்ட ஒன்றாகும் .
ரணில் பிரதமராகவும்,ஆட்சியில் கூட்டணியாகவும் அங்கம் வகித்த பொழுது சந்திரிக்கா ,மற்றும் மைத்திரி அரசை கவிழ்த்தார் என்பது கறை படிந்த வரலாறாக உள்ளது.
அவ்விதமான நிகழ்வுகள் எதிர்வரும் காலத்தில் அரங்கேறும் என அடித்து கூறலாம்.
புதிய பிரதமர் ரணிலுக்கு மகிந்தா வாழ்த்து
புதிய பிரதமர் ரணிலுக்கு மகிந்தா வாழ்த்து
இலங்கையின் புதிய பிதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள
ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்
தற்காலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வு காணமுடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார்

வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை
வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை
கொழும்பு பகுதி எங்கும் இராணுவம் கவச வாகனங்களுடன் குவிக்க பட்டு
போர்க்காலத்தில் இடம்பெற்றது போன்று சோதனைகள் அதிகரிக்க பட்டுள்ளன.
இவை இலங்கையில்இராணுவ ஆட்சி நிலவுகின்ற நிலையை காண்பிக்கிறது ,கோட்டா விரைவில் பதவி விலக கூடும் என எதிர்
பார்க்க படுவதால் ,இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை
மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை
இலங்கையில் அப்பாவி மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்ற சாட்டில்
மகிந்த அவர் மகன் நாமல் உள்ளிட்ட 17 பேருக்கு நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
காலிமுக திடலில் அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தினர் என்ற குற்ற சாட்டில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
முன்னரே நாம் கூறிய படி இப்பொழுது கூண்டுகள் இவர்களுக்கு தயாராகிறது.
உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்
உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்
சஜித் அணியின் பலத்தை சிதைத்து அவர் ஜனாதிபதியாக வருவதை தடுக்கும் முயற்சியில் அவரது முக்கிய
உறுப்பினர்களுக்கு விலை பேச படுகிறது
இந்த விலை பேச்சின் வாயிலாக ஆறுபேர் சுயாதீனமாக செயல் பட உள்ளதாக அறிவித்துள்ளனர்
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பல கொட்டல்களில் பொருட்களை மக்கள் திருடி சென்றுள்ளனர்
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை மீள அவர்கள் ஒப்படைத்துள்ளனர்
இவ்விதமான விசித்திர சம்பவங்களும் இலங்கையில் இடம்பெறுகின்றமை சிரிக்க வைக்கிறது
கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா
கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா
எதிரிகளாக விளங்கிய அக்கோட்டை அபய அபொன்சேக திடிரென சந்தித்துள்ளனர் ,பொன்சேகாவை
பிரதமராக பதவி ஏற்கும் படி கோட்டபாய கோரியுளளார்
இதனை அடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்கலாமா என எதிர் பறக்க பாடுகிறது ,இருவருக்கும்
இடையில் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,குறிப்பிட தக்கது
ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி
ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி
தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை
தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளது.
மே12ம் நாள் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக உலகத் தமிழர்களால் தொடங்குகின்றது.
2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால்
இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.
போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.
இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.
இரத்தம் தோய்ந்த தமது வரலாற்றின் வலிகளை
அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடந்தும் பண்பாடாக 20ம் நூற்றாண்டின்
மிகப்பெரிய இனப்படுகொலைக்கு உள்ளான அ10ர்மேனியர்கள் ‘ஹரிஸ்ஸா’
உணவையும், யூதர்கள் ‘மற்சூ’ உணவையும் கொண்டிருப்பது போல், ஈழத்தமிழர்கள் நாமும், ‘
முள்ளிவாய்க்கால் கஞ்சி’யினை எமது அடுத்த தலைமுறையிடம் கடத்தும்
ஓர் விடுதலைப் பண்பாடாக இதனை முன்னெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2022 மெல்பேர்ண் நிகழ்வு
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2022 மெல்பேர்ண் நிகழ்வு
May 18 Tamil Genocide Remembrance Day – Melbourne
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண்
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 13 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில்
பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.
கொடியபோர் முடிவடைந்து 13ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து,
மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அன்பான உறவுகளே,
எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப்
போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
மெல்பேர்ணில் எதிர்வரும் 18-05-2022 அன்று நினைவேந்தல் நாள் நிகழ்வு நடைபெறுகின்றது.
மலையகத்தில் மண்சரிவு – வீடுகள் சேதம்
மத்திய மைல நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (11) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.
மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக உயர்ச்சேதம் ஏற்படவில்லை.
இதே நேரம் நோட்டன் தியகல பிரதான வீதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு
ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.
லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்
லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்
பிரிட்டன் Bristol பகுதியில் 15 வயது வெள்ளைக்கார சிறுமி ஒருவர் கடத்த இருபத்தி ஆறாம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
இதுவரை இவர் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சமீப நாட்களில் இவ்வாறான சிறுமிகள் காணாமல் போவது தொடராகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் லொத்தரியில் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் லொத்தரியில் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்
சுமார் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறான பெரும் தொகை பணத்தை ஒருவர் தட்டி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது.
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
வைரமுத்து
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி
வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற குரல் இலங்கை தீவு முழுக்க எதிரொலிக்கிறது.
இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டதால் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி திரிகோண மலையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதே மே மாதம் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதன் பலனைத்தான் ராஜபக்சே
தற்போது அனுபவித்து வருகிறார் என்ற பேச்சு, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வைரமுத்து
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் தாயகம் பிரியேன் தாய் மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரன் தமிழனின் பேராண்மை எங்கே.. ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே… ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும்
தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து உணர்ச்சிப் பொங்க தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
41 வயதில் கர்ப்பமான நமீதா
41 வயதில் கர்ப்பமான நமீதா
பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது என நமீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
41 வயதில் கர்ப்பமான நமீதா.. வைரலாகும் புகைப்படம்
நமீதா
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ்
ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.
பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார்.
2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும்
மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன்
மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று
குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை நமீதா அறிவித்திருக்கிறார்.
இது பற்றி அறிந்ததும் நமிதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி
தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி
தற்போது அமைதி வழியில் போராடி வரும் சிங்கள மக்களின் போராடத்திற்குள் .
தமிழர்களை இழுத்து போராட்டத்தை திசை திருப்பும் நகர்வில் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை புத்திசாலித்தனமாக தப்பித்த தமிழர்கள் ,இதுபோல அமைதி காத்து சிங்களத்தின் பெரும் படு கொலை சதியில் இருந்து தப்ப வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.
உணர்ச்சிகளுக்கும் இடமளித்து உயிர்களை பலிகொடுக்காது ,சொத்து சேதங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுதல் விடுக்கின்றனர்.
பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா
பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா
இலங்கையில் ஆளும் ஆட்சி யாளர்களுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும்.
,அவ்விதம் இல்லாது போனால் தான் மத்திய வாங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலக போவதாக ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து போராட்டங்கள் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் அதனை நிவர்த்தி செய்திட உடன் தீர்வை காணுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் நெருக்கடியில் கோட்டா சிக்கியுள்ளார்.
மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்
மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்
காலிமுக திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக கூடாரம் அமைத்து கோட்டா மகிந்தா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் அந்த மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கோட்டா பணிப்புரை விடுத்துள்ளார்
பொலிஸாரினால் இவ்விதம் அறிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் அங்கிருந்து அகன்று
செல்ல மறுத்து வருகினறனர் ,அவ்விதம் அத்துமீறி தரித்து நின்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசாரை மிரட்டி வருகின்றனர்
ஊரடங்கு வேளை ஒன்று கூடுதலை தடுக்க இந்த அடக்குமுறையை அவர்கள் விடுத்தது வருகின்றனர் ,இங்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
இடம்பெற்று பெரும் ரணகளமாக இலங்கை மாற போகிறதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன









