Author: நலன் விரும்பி
SP.பால சுப்ரமணியம் மரணம் – பேரதிர்ச்சி – தமிழிசை
SP.பால சுப்ரமணியம் மரணம் – பேரதிர்ச்சி – தமிழிசை
பிரபல பின்னணி பாடகர், சகோதரர் திரு. SP.பால சுப்ரமணியம் அவர்கள்
மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. தெலுங்கு மண்ணில் பிறந்து
தமிழ் மண்ணில் பிரபலமடைந்த SPB அவர்களை மண்ணுலகில் பாடியது
போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம்
அழைத்துக்கொண்டதோ? என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரை உலகினருக்கும்
மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம்

வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு
வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு
மட்டக்களப்பு – வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த
நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், இன்று (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
இவர், வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைப்பயிர் செய்கை செய்துவருவதாகவும் வழமைபோல
சம்பவதினமான இன்று காலை தோணியில் பயிர்ச் செய்கை பகுதிக்கு
ஆற்றில் ஊடாக தனிமையில் பயணித்தபோது, தோணி கவிழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு
கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு
கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை பெண்ணொருவரின்
சடலம் கரையொதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவலை தெரியப்படுத்தினர்.
இதனை அடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், பொதுமக்கள்
ஒன்றிணைந்து, கரை ஒதுங்கிக் கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர்.
கல்முனையில் – 02 கிராமசேவையாளர் பிரிவில் வசித்து வந்த 78 வயதுடைய
சின்னத்தம்பி நேசம்மா என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும்
இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
சடலம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்
கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்
தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்
இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆரம்ப நட்டஈடாக 340 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு
வழங்குவதற்கு கப்பல் நிறுவனம், சட்டமா அதிபரிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனை, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.
கற்கை நெறியில் அதிரடி மாற்றம் – கோட்டா உத்தரவு
பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும்.
• தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம்.
எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்
அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை
தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால
திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள்
அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.
‘நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள்
கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப
கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார்
அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப்
பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம்
தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை
ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத,
தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000 த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர்
உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது
அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர்
பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய,
கடற்றொழில் திணைக்கள அதகாரிகளினால் கடந்த சில தினங்களாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், கடந்த காலங்களில் பருவகால மீன்வர்களிடமிருந்தும் தெனினிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ். மாவட்ட
மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்த
சுமார் 183 படகுகளை பதிவு செய்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கடல் வழியான போதைப் பொருள் உட்பட்ட கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு
அதிகாரிகளினால் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளின் போது, பதிவு செய்யப்படாத படகுகளை பயன்படுத்துகின்ற
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அசெகரியங்கள் நீங்கவுள்ளது.
அத்துடன் படகுகளைப் பதிவு செய்வதன் மூலம், குறித்த படகுகளுக்கு காப்புறுதி செய்வதற்கும் அவசிய தேவைகளின் போது
வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ளுதல் உட்பட பல்வேறு நன்மைகளை
கடற்றொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, வடக்கின் ஏனைய கடற்றொழில் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்படாத படகுகள் காணப்படுகின்ற நிலையில், அவை
அனைத்தையும் பதிவு செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய விசேட அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
கொரோனாவுக்கு எதிரான சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என்று சோதித்துப் பார்த்த ரஷியா அறிவித்துள்ளது.
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கி கதி கலங்க வைத்து வருகிற சீனாவில், கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற
உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷிய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.
இந்த ஊசி மருந்து ரஷிய மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.
இதுபற்றி பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் நேற்று கூறுகையில், “தற்போது
தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்கள் நன்றாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள்
எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள். 4 இடைக்கால பரிசோதனைகள்
நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டது.
மேலும் இந்த தடுப்பூசி தொடர்பான ஆரம்ப முடிவுகள் நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியது.
சீனாவின் இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்தவுடன், இந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் டோஸ்
தடுப்பூசியை தயாரிக்க முடியும். அடுத்த ஆண்டில் மாதம் 1 கோடி தடுப்பூசி தயாரிக்க இயலும் என்றும் பெட்ரோவேக்ஸ் தெரிவித்தது.
குளிக்க சென்றவரை கடித்து குதறிய முதலை
குளிக்க சென்றவரை கடித்து குதறிய முதலை
அவுஸ்ரேலியா Great Barrier Reef. பகுதியில் அருவியில் குளிக்க
சென்ற ஒருவரை முதலை ஒன்று கடித்து குதறியுள்ளது ,
தலை ,கழுத்து மற்றும் உடலில் முக்கிய பகுதியில் பலத்த காயங்களுக்கு
உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
உடலின் தசைகளை முதலை தின்றுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி
பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி
பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினால்
வியாழக்கிழமை நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 6,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மக்கள்
நடமாட்டத்திற்கு முற்றதாக தடை விதிக்கும் நிலை விரைவில் ஏற்படுவதுடன்
அதற்கான முன் திட்டமிடல்களை அரசு செய்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை அறிக்கை
எஸ் பி பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில்
இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்கொரியா நபரை சுட்டு கொன்று எரித்த வடகொரியா – பயங்கரம்
தென்கொரியா நபரை சுட்டு கொன்று எரித்த வடகொரியா – பயங்கரம்
வடகொரியா எல்லையில் மக்கள் நடமாடினால் அவர்களை சுட்டு கொல்லுமாறு வடகொரியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார் .
அவ்விதமான துப்பாக்கி சூடு தடை உள்ள பொழுதும் வடகொரியா கடல்
எல்லை பகுதியில் நடமாடிய தென்கொரிய அரச ஊழியர் ஒருவரை
சுட்டு கொன்ற வடகொரியா இராணுவம் அவ்விடத்தில் வைத்தே தீ வைத்து எரித்துள்ளது .
இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதை தென் கொரியா தெரிவித்துள்ளது ,
இதனை அடுத்து இரு நாடுகளும் இடையில் மீள பதட்டம் அதிகரித்துள்ளது
பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்
பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிரித்துள்ள
நிலையில்
மக்களை அதில் இருந்து காப்பாற்றும் அவசர பேரிடர் நிலை பிரகடனமாக
இன்று வியாழன் முதல் பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள்
அடித்து பூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவு கண்டிப்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த சட்டவிதிகளை
மீறி திறக்க படும் உணவகங்கள் பார்கள் லைசன்ஸ் இரத்து செய்ய
படுவதுடன் ,அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என்பதாக உள்ளது ,குறிப்பிட தக்கது
பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு
பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அடித்து பூட்டும்
நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனால் தொழில் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன
இவ்வேளையில் தொழிலாளர்கள் தமது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர் ,
இதனால் ஊழியர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களுக்கு நிதி உதவியினை
வழங்கிட அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது ,அதற்காக அரசு 34 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது
இந்த திட்டம் ஐப்பசி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது ,எனினும்
அது எவ்வாறு வழங்க படும் என்பது தொடர்பில் நிதியமைச்சர் விரைவில் அறியதருவார் என எதிர்பார்க்க படுகிறது
கூலி தொழிலாளிகளை காப்பாற்றும் முகமாக இந்த செயல் திட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிட தக்கது
போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது
போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது
பேலியகொடை மத்திய மீன் விற்பனை கட்டட தொகுதியில், போலி
நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, 5,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நாணயத்
தாள்கள் 13 மற்றும் அலைபேசி, கடன் அட்டை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின்
பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (24) தொடர்கின்றது.
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று (23) முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள
பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் நேற்று காலை ஒன்றுகூடினர்.
அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு
தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Cotton Bud-க்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய்,
ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு
சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
புத்தளம் மன்னார் பழைய வீதியின், 4ஆம் கட்டைப் பிரதேசத்தில், துப்பாக்கி
மற்றும் ரவைகள், என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் அதற்குப்
பயன்படுத்தக்கூடிய, 113 ரவைகளும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேக நபரை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக,
புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால்
விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, தொடர்ந்தும் அமலில்
இருக்குமென்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு
எதிராக பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக பல விண்ணப்பங்கள்
செய்தனர். எனினும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
ராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார்.
மயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
இறந்தவர் உடலை தகனம் செய்ய விறகுகளை தயார் செய்யும் ஜோதி.
ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்
உள்ளனர். கணவர் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் மின்மயானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிணங்களை
எரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் குடும்பத்தை காப்பாற்ற வழிதெரியாமல் திகைத்து கொண்டிருந்த ஜோதி தனது குழந்தைகளை படிக்க வைக்க
வேண்டும் என்பதற்காக மயான தொழிலை செய்ய துணிந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில்
பிணங்களை தகனம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
இதுகுறித்து ஜோதி கூறியதாவது:-
எனது கணவர் இங்கு வேலை பார்த்தபோது அவருக்கு சாப்பாடு கொடுக்க வருவேன்.
அப்போது அவர் மயான வேலையை கற்றுக்கொடுத்தார். நான் இந்த தொழிலை செய்ய தொடங்கியதும் ஆரம்பத்தில் எங்கள்
குடும்பத்தினர், உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் யாரிடமும் கை ஏந்தாமல் சொந்த காலில் நிற்பதை கண்டு ஏற்றுக்கொண்டனர்.
இரவு, பகல் பாராமல் இதுவரை சுமார் 8 ஆயிரம் உடல்கள் வரை எரித்துள்ளேன்.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விபத்து, தற்கொலை, அனாதை பிணம் போன்றவைதான். எனது இந்த வாழ்வில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர் உடலை எரிக்க ஆரம்பித்து விடிய விடிய
எரியவில்லை. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. அதேபோல, மதுரையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி
ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிள்ளைகள் இறுதிச்சடங்கிலும் எங்களின் பெற்றோர்
இணைபிரியாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். அதனால் இருவரின் உடலையும் ஒரே சமயத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக
வைத்து தகனம் செய்தேன். இதுபோன்ற ஆத்ம திருப்திதான் இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும்.
பிரேத பரிசோதனை செய்த உடல்களை இரவு நேரங்களில் கொண்டுவந்து கொடுப்பார்கள்.
விடிய விடிய தனி ஆளாக சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் எரியூட்ட வேண்டி இருக்கும்.
இந்த சுடுகாட்டினை நான் கோவிலாகத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் வறுமையில் இருந்தபோது இந்த தொழில் செய்வதால்
விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போது என்னை ஏற்றுக்கொண்டு அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மயான வேலையை ஆண்களே சவாலாக நினைக்கும் இந்த காலத்தில், குடும்பத்தை காப்பாற்ற ஜோதி இந்த வேலையை
ஏற்றுக்கொண்டிருப்பது அவரை பாரதி கண்ட புதுமை பெண்ணாக தெரிய வைத்திருக்கிறது.

4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
துருக்கியின் மேற்கு பகுதியில் நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த
மில் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
தொல்
பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்ற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இவை கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஒரு ஏக்கர் நிலப் பரப்பளவில் இந்த மில் உள்ளதும் ,அங்கு அவ்வேளை
பயன் படுத்த பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அழியாது உள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து ஆராய்ச்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








