Author: நலன் விரும்பி
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு கடந்த தினம் கொரனோ
நோயின் தாக்குதல் பல் மடங்காக அதிகரித்துள்ளது
ஒரே நாளில் சுமார் 2,706 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில்
புதிதாக 19,924,059 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து 28,920 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
டிசம்பர் முடிவதற்குள் ஐந்து லட்சம் மக்கள் பலியாவார்கள் என தெரிவிக்க
பட்ட நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்து செல்வது பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை
கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை
இந்தியாவில் ஒருவரை கொலை செய்தும் , மனைவியை கொலை செய்ய
முயன்ற வழக்கில் நீதிமன்றம் இவருக்கு 115 வருட காடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது
இந்த அதிரடி தீர்ப்பு இவ்விதம் கொலைகளை புரிபவர்களுக்கு பெரும்
அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமுக ஆர்வளர்கள் கருத்துரைத்துள்ளனர்
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திற்கான நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற
கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்
னெடுக்கப்பட்டுள்ளது. காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
கொழும்பு நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்குள் 78 பேர், கொரோனா வைரஸ் தொற்றால்,
வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என, கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீடுகளுக்குள் உயிரிழந்தவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 78
பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
வீடுகளில் உயிரிழப்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள், இவ்வருடம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வீடுகளில் மரணமடைந்த முதலாவது கொரோனா
மரணம், ஒக்டோபர் 26ஆம் திகதி பதிவானது எனத் தெரிவித்துள்ள அவர், அன்றிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி வரை, 78 பேர்
கொரோனா வைரஸ் தொற்றால் வீடுகளிலேயே மரணமானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை மாத்திரம், வீடுகளில் 130 பேர் உயிரிழந்தனர் என, கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதில் 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் இன்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.
மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்தே,
அந்த பிரதிநிதி வந்துச் சென்றதாக தெரிவிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அவ்வாறு இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. கம்பளை, பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம் வந்துசென்ற வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும்,
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர
சில்வாவுக்கும் ‘ஜெனரல்’ என்ற பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் சந்தண விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவர்களுக்கான பதவியுயர்வை வழங்கியிருக்கியுள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில்
தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய
சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்த நபர் சம்பந்தமாக இதுவரையிலும் ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல்
விதிகளை மீறிய மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
தென்கொரியாவில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம்
காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பியதை
அடுத்து, குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், தாம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக
நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தின் அம்யூலன்ஸ் சேவை வரலாற்றில் நேற்று முன்தினம் நெரிசல் மிக்க நாளாக
வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில்
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றமை இதற்கான காரணமாகும்
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,131 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 106,511 பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 357 பேர் பலியாகியுள்ளனர் ,41,385 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,பிரிட்டனில் வளமையை விட இதுவே அதிக தொகையில் பாதிக்க பட்ட நாளாக மாற்றம் பெற்றுள்ளது
குளிர் காலம் தொடர்வதால இழப்புக்கள் ,மற்றும் தொற்றுக்கள்
அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
மாலியில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட சென்று இருந்த பிரான்சு
நாட்டு இராணுவத்தினர் மூவர் Hombori பகுதியில் மறைத்து வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கி பலியாகினர்.
இறந்தவர்கள் சடலங்கள் பிரான்சு எடுத்து வரும் நகர்வுகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டு படைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
கடந்த இரவு பிரிட்டன் street in Blackburn town பகுதியில் பனி மழையில் சிக்கி கார்கள் மோதி சிதறின
அதிக பனிப் பொழிவு இருக்கும் என தெரிவிக்க பட்ட பொழுதும் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து வரும் நாட்களில் இது போன்ற கால நிலை தொடரும் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டன் குற்ற தடுப்பு துறையில தேட படும் பட்டியலில் உள்ள மிக
முக்கிய 22 குற்றவாளிகள் படங்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளது
இவர்கள் கொலை ,கடத்தல் ,போதைவஸ்து பாவனை,மற்றும் குற்ற செயல்களுடன்
தொடர்பு பட்டவர்கள் , இவர்களை தெரிந்தால் அறிய தரும் படி வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளதுடன் ,இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்
சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – பழனிசாமி சவால்
சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாராக உள்ளாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்… துரைமுருகன் தயாரா? – முதலமைச்சர் பழனிசாமி சவால்
தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை
தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
- அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
- சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்
- ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது
- சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்…துரைமுருகன் தயாராக உள்ளாரா?
- புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா?
- மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை
- திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்
- ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.
- திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
- நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோ தான்.
என்றார்.
163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு
163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு
சீனாவில் Guangdong பகுதியில் அரச சுங்க அதிகாரிகளாக Zhanjiang பணியாற்றி
வந்த ஐவர் தலைமையில் செயல் பட்ட குழு ஒன்று குழாய்கள் மூலம் விநியோகிக்க பட்டு வந்த ஒயிலை திருடியுள்ளனர்
இவ்வாறு இந்த பெரும் கடத்தலில் ஈடுபட்டவர்களை சிறப்பு மறேன் பறக்கும் படைகள் மடக்கி பிடித்தனர்
இவ்விதம் திருட பட்ட ஒயில்களின் மொத்த பெறுமதி சுமார் 163 மில்லியன்
அமெரிக்காக டொலர்களாகும் .
இதுவரை இந்த திருட்டு செயலி ஈடுபட்டு வந்த 22 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இந்த கடத்தலுக்கு பயன் படுத்திய டங்கர்கள்
உள்ளிட்டவை மடக்கி பிடிக்க பட்டுள்ளன
நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு
நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு
நத்தார் தினத்தில் Arkansas பகுதியில் வீடு ஒன்றுக்குள் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் சடலமாக மீட்க பட்டனர்
இறந்தவர்கள் எட்டு முதல் ஐம்பது வயதுடையவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,
மீட்க பட்ட சடலங்கள் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,
இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக
தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது
மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது
இராணுவத்தின் சார்யன் தரத்தில் பணிபுரிந்து வைத்த இராணுவ சிப்பாய்
ஒருவர் northern Illinois பகுதியில் தனது துப்பாக்கியை பயன் படுத்தி மூவரை
சுட்டு படுகொலை செய்ததுடன் ,மூவரை காயப்படுத்திய நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளார்
இவரது இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் ஓட ஓட மக்களை வெட்டியா நபர் – 7 பேர் காயம்
சீனாவில் ஓட ஓட மக்களை வெட்டியா நபர் – 7 பேர் காயம்
சீனாவின் வடகிழக்கு Liaoning மாகாணத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரி
கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் காவல்துறை சிப்பாய் உள்ளிட்ட ஏழுபேர் படுகாயமடைந்தனர்
மேற்படி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய உடனடி காரணம்
தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை
சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவை குவான் பகுதியில் பரவிய
விடயத்தை அம்பல படுத்திய சீனாவின் முன்னாள் லோயரும் ஊடக நபருமாக
விளங்கிய Zhang Zhan, 37, பெண் ஒருவர் நான்கு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்
இவர் நாட்டுக்கு எதிரான அவதூறு பரப்புதலில் ஈடுபட்டார் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கிளிநொச்சி கல்மடு பகுதியில் யானை பலி – நபர் கைது
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு யானை ஒன்று வயல் நிலத்தினை உணவாக்கி அழித்துள்ளதுடன், பின்னர் அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
நேற்றுக் காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர்ந்த காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன..

இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி
இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, அவர்களில் பெரும்பாலானவர்களின்
சடலங்கள் (ஜனாஸாக்கள்) தகனம் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, மொத்த தொற்றாளர்களில் 120 முஸ்லிம்கள் எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள்
வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள். இவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியிருக்கும்’ எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துரைத்துள்ள அவர், ‘சளி பழசானால் கொரோனா தொற்று
ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிப்பவர்களே, அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியாத மக்களே, ஜனாஸாக்களைத் தகனம் செய்யுமாறு கூக்குரலிடுகின்றனர்’ என்றார்.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென சகல நிபுணர்களும் தெரிவிக்கும் போது
, அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்,
மக்களைப் பீதிக்குள்ளாக்கி, மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் இறப்பதற்குப் பயமில்லை. ஆனால் எரிப்பதற்ப் பயப்படுகின்றனர் என்றார்.
உலகம் பூராவுமுள்ள 194 நாடுகள், சடலங்களை அடக்கம் செய்யும் போது, இலங்கை மாத்திரம் எந்த அறிவியலை அடிப்படையாக வைத்து, தகனம் செய்கிறதென கேள்வி எழுப்பிய அவர், முழு
உலகமே ஏற்றுக்கொண்ட வைத்தியர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அங்கே இங்கே பணத்தைக் கொடுத்து சித்தியடைந்தவர்களையும் இந்த விடயத்துடன் சம்பந்தமே இல்லாத, தகுதியற்றவர்ளையும்
குழுக்களில் இணைத்து, அவர்களின் முடிவுகளைப் பெற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்








