இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது

Spread the love

இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது

தென்கொரியாவில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம்

காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பியதை

அடுத்து, குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக

வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், தாம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக

நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தின் அம்யூலன்ஸ் சேவை வரலாற்றில் நேற்று முன்தினம் நெரிசல் மிக்க நாளாக

வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றமை இதற்கான காரணமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *