Author: நலன் விரும்பி
திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்
திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், வீதியில் பயணிப்போரின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் செல்லல் மற்றும்
மோட்டார் சைக்கிள் திருட்டுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு நான்கு சம்பவங்கள் என்ற வகையில், நாடளாவிய ரீதியில் இந்தக் குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மோட்டார் சைக்கிள் மற்றும்
சைக்கிள்களில் பயணிப்போரே இவ்வாறான கைவரிசையை காண்பிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பெண்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவதால், பெண்கள் அனைவரும்
விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டில் இருந்த இவ்வாறான 36 வன்முறைக் கும்பல்கள், சிலவற்றின் செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளதாகவும், தற்போது அவற்றில் 24 கும்பல்களே
தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள், வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக்
கும்பல்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு, தான் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு
நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு
மாளிகாகந்தையில் மற்றுமொரு நபரின் பாதத்தை வெட்டி, அதனை எடுத்துகொண்டு
தப்பியோடியவர், வெயாங்கொடையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேக நபரை வெயங்கொடை ஹல்கம்பிடிய பகுதிக்கு பொலிஸார்
அழைத்துச்சென்றிருந்த நிலையில், சந்தே நபர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்
O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான
முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை
மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26)
நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக
அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக
அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர்,
அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 071-8591599, 011-2400315, 011-2433333, 119
குமரி பொண்ணுக்கு கொரனோ – வீடு வந்து பரப்பி சென்ற உறவு பெண்
குமரி பொண்ணுக்கு கொரனோ – வீடு வந்து பரப்பி சென்ற உறவு பெண்
பருவமடைந்து வீட்டுக்குள்ளே தனிக்கூடாரத்துக்கு வைக்கப்பட்டிருந்த மங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த யுவதியை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் புஸ்ஸலாவ பகுதியிலுள்ள தோட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருவமடைந்ததன் பின்னர் அந்த யுவதி, வீட்டுக்குள்ளே, கூடாரம் அமைத்து தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த யுவதிக்கு உணவு சமைத்து கொடுப்பதற்காக, கொழும்பிலிருந்து அவருடைய உறவுப் பெண்ணொருவர் சென்றுள்ளார்.
அப்பெண், சமைத்து கொடுத்துவிட்டு, கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதனையடுத்து, பருவமடைந்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற பொது சுகாதார அதிகாரிகள் சுமார் 13 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில், பருவமடைந்து, கூடாரத்துக்குள் தனிமையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
காணாமல் போன மனைவி பிள்ளை – தேடும் குடும்பம்
காணாமல் போன மனைவி பிள்ளை – தேடும் குடும்பம்
உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும்
காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி இம்மாதம் 13ஆம் திகதியிலிருந்துக்
காணவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில தெரிவித்துள்ள அவரதுக் கணவர், ”13ஆம் திகதி மாலை அம்மாவின் வீட்டுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். எனினும் நீண்ட நேரமாகியும்
அவர் வீடு திரும்பியிருக்கவில்லை என்பதால், அவர் செல்வதாகக் கூறிய இடத்துக்குச் சென்று பார்த்தோம். அங்கு அவர் வரவில்லை
எனக் கூறினார்கள். அன்றையத் தினத்திலிருந்து அவரதுத் தொலைப்பேசி இலக்கமும் இயங்கவில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0769080042
என்கிற அவரின் கணவரது தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயியாக மாறிய கோட்டா
விவசாயியாக மாறிய கோட்டா
அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால்
சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை
பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.
காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதி அவர்களை பாராட்டினர்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்
அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி பரவி விரும் கொரனோ வைரஸ்
நோயில் சிக்கி அமெரிக்காவில் 1,377 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே 143,225
பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 28,582 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 210 பேர் பலியாகியுள்ளனர் ,இது கடந்த நாட்களை விட வீழ்ச்சியை எடுத்து காட்டுகிறது எனினும் இதே நாளில் 34,693 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
வரும் நோயானது மீளவும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்
திருமண வீட்டில் 50 பேருக்கு பரவிய கொரனோ – பலியான தாய்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து நிகழ்வுகளில் ஆறு முதல்
பத்து பேருக்கு மேல் கூடிட தடை விதிக்க பட்டுளள்து ,இதனை மீறி இடம்பெற்ற
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நூறு பேரில் எழுபது பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதில் மணமகளின் தயார் குறித்த நோயினால் பாதிக்க பட்டு இறந்துள்ளார் ,
அரசு கூறும் விதிகளை அலட்சியம் செய்து இடம்பெற்ற இவ்வாறான திருமண
நிகழ்வுகளினால் பலர் நோயினால் பீடிக்க பட்டு மரணத்தை
எதிர்நோக்கியுள்ளதும் ,தாயார் இறந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனை கருத்தில் கொண்டு தமிழர்களே நிகழ்வுகளை இரத்து செய்யுங்கள்
,இன்று இவர்களுக்கு ,நாளை உங்களுக்கு ,அறியாமையும் ,அலட்சியமும் ,உயிர்களை பறித்து விடுகிறது குறிப்பிட தக்கது
ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்
ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்
ஆசியா நாடுகளில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகளை பிரிட்டனுக்குள்
கடத்தி வந்த சுமார் ஐம்பது குழுவை சேர்ந்த எயன்சிகள் பிரிட்டன்
போலீஸ் மற்றும் சர்வதேச காவல்துறை உதவியுடன் கைது செய்ய பட்டுள்ளனர்
வியட்னாமில் இருந்து பிருட்டனுக்குள் கடத்தி வரப்பட்ட 39 பேர் லொறிக்குள்
இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டனர் ,அதனை அடுத்து குற்ற
தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் மேற்படி நபர்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளனர்
இதனால் பெரும் மனித கடத்தல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் கடந்த 12 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கனமழை காரணமாக
பிரிட்டனின் மன்ஸிஸ்டர் உள்ளிட்ட Oldham, Bolton and Rochdale முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது ,தொடர்ந்து பெய்து வரும்
மழையால் சில முக்கிய அருவிகள் நிரம்பி வழிவதாலும் மேலும் வெள்ள
பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து எழுபது மைல் வேகத்தில் புயல் வீசி வருகிறது
மரங்களுக்கு கீழே கார்களை விட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டனில் நத்தார் தினம் அன்று மக்கள் தமது பாலன் பிறப்பது நாளை
கொண்டாடிய வண்னம் மக்கள் இருந்தனர் ,அதிகாலை ஒரு மணியளவில்
Manchester பகுதியில் வீடொன்றின் மீது திடீரென மர்ம நபர் துப்பாக்கி
சூட்டினை நடத்தினார் ,அதனை அடுத்து இரண்டாவது தாக்குதலும் இடம்பெற்றது ,
எனினும் இந்த் சூட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்து வயதான ஒருவர் மற்றும் இரு சிறார்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்
குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,விசாரணியாகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது
மக்கள் அஞ்ச தேவை இல்லை எனவும் ,பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை
பிரிட்டனில் வாலிபர்மீது அகோர கத்தி குத்து – தொடரும் பொலிஸ் விசாரணை
கடந்த தினம் பிரிட்டன் நோட்டிங்க பகுதி காவல்துறை பகுதிக்குள் இடம்பெற்ற
கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 16 வயது வாலிபர் படுகாயமடைந்தார் ,
பலமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி கோர செயலை புரிந்த இருப்பது வயது வாலிபன் மற்றும் 25
வயது பெண் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை
,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
லண்டனில் -100 மைல் வேகத்தில் கார் ஓடியவருக்கு இரண்டு லட்சம் தண்டம்
லண்டனில் -100 மைல் வேகத்தில் கார் ஓடியவருக்கு இரண்டு லட்சம் தண்டம்
பிரிட்டன் Nottinghamshire காவல்துறை பிரிவுக்குள் இருபது மைல் வேகத்தில்
செல்ல வேண்டிய பகுதியில் நூறு மைல் வேகத்தில் கார் செலுத்திய அமீர் கான்
என்பவர் தவறான பாதையிலும் ஒருவழி சாலை வழியாகவும் செலுத்தியுள்ளார்
மேலும் காவல்துறை காருடன் இவர் மோதியுள்ளார் , நீதி விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டார் .இவரது மிக ஆபத்தான கார் செலுத்துதல்
காரணமாக நீதிமன்று இரண்டு லட்சம் பவுண்டுகள் தண்டம் அறவிட்டுள்ளது
சாலைகளில் வேகமாக கார் செலுத்தும் நபர்களே இதனை சற்று கவனத்தில் கொள்ளுங்கள் ,இஇவ்வாறும் தண்டம் அறவிட படுகிறது

பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு
தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.
நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.
வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 11 கோடி ரூபாவுக்கு மேலான தொகைகை வழங்கியுள்ளது.
இந்தத் தொகை ‘மெக்’ என்றழைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பான
உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரும், மெக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் கடந்த புதன்கிழமை கைச்சாத்திட்டார்கள்.
நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த காணிகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்து, மக்களை மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு
உதவியளிப்பது திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் மன்னார், வவுனியா மாவட்டங்களில் எண்ணாயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மெக் நிறுவனம் 2002ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிலக்கண்ணி அகற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 92 சதுர
கிலோ மீற்றர் சதுர பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 551 பேருக்கு கொரோனா
இலங்கையில் 551 பேருக்கு கொரோனா
இலங்கையில் இன்றைய (25) தினம் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இதற்கமைவாக பேலியகொடை மீன் சந்தை திவுலப்பிட்டிய
சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 099 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 771 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 31 ஆயிரத்து 339 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 251 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஒருவரின் உயிரிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை:
ஊடக அறிக்கை
கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன் இ இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 186 ஆகும்.
- அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர். அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர்
- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 2020 டிசம்பர் 24ஆம் திகதி அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான இதய நோய்த்தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாங்குதலில் சிக்கி
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,197 பேர் பலியாகியுள்ளதுடன் புதிதாக அதே நாளில் 98,840 பாதிக்க பட்டுள்ளனர்
இதே போல பிரிட்டனில் 570 பேர் பலியாகியும் 32,725 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டு ஆறு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு போட பட்டுள்ள பொழுதும் வீரியம்
கொண்டுள்ள இந்த நோயானது புதிய வடிவில் பரவி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
வானில் நடந்த பயங்கரம் – இயங்கமறுத்த இயந்திரம் – தப்பிய கனடா விமானம்
வானில் நடந்த பயங்கரம் – இயங்கமறுத்த இயந்திரம் – தப்பிய கனடா விமானம்
உலக நாடுகளில் அதிக பாவனையில் உள்ள
Boeing Co 737-8 Max விமனாமாகவும் ,இதுவே அதிக விபத்தில் சிக்கி வருகிறது
அவ்விதம் வெள்ளிக்கிழமை நேற்று எயார் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான
Air Canada Boeing Co 737-8 Max விமானம் நடுவானில் இயந்திரம் கோளாறு
ஏற்படுத்திய நிலையில் திடீரென அவசரமாகTucson, ArizonaAn விமான தளத்தில் தரை இறக்க பட்டது
இவ்வேளை பயணிகள் விமானத்தில் அலறினர்
எனினும் விமானம் பாதுகாப்பாக தரை இறக்க பட்டதாக குறித்த நிறுவனம்
அறிவித்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








