Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா

முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா

பயன்படுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பற்ற முறையில் வீசப்படும் முகக் கவசங்கள், ஆறுகள், நீரோடைகள் ஊடாகக் கடலில் கலப்பதால், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயநிலை

அதிகரிக்கலாம் என, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 50,000க்கும் அதிகமான முகக் கவசங்கள், கடலில் கலப்பதாகத் தெரிவித்துள்ள அதிகார சபை, இதனால் பொழுது

போக்குக்காகக் கடலுக்குச் செல்வோருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

தினமும் 5 இலட்சம் முகக் கவசங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படும் அதேவேளை, பெருமளவு முகக் கவசங்கள்

தினமும் வீசப்படுவதாகவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் கீழ், வீதிகளைச் சுத்தம் செய்வதற்காக 2,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு

வருவதுடன், முகக் கவசங்கள் உரியமுறையில் அகற்றப்படாமை காரணமாக, இத்தொழிலாளர்களும் கொரோனா அச்சுறுத்தலுக்கு

ஆளாகியுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம

உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இத் தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படுவதாக

கொவிட் – 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

  1. காத்தான்குடி பொலிஸ் பிரிவு
  2. கல்முனை பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவு

 கல்முனை 1
 கல்முனை 1 C
 கல்முனை 1 E
 கல்முனை 2
 கல்முனை 2 A
 கல்முனை 2 B
 கல்முனை 3
 கல்முனை 3 A
 கல்முனை குடி 1 (KALMUNAI KUDI 1)
 கல்முனை குடி 2 (KALMUNAI KUDI 2)
 கல்முனை குடி 3 (மKALMUNAI KUDI3)

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு

கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு

கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் ஐவர் (05) மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 204 ஆகும்.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31.12.2020) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

  1. தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர்.. களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 டிசம்பர் 28ஆம் திகதி மரணமானார்.
  2. மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் அதிகரித்தமையால் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமையுடன் கொவிட் 19 நோய் தொற்று நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர்;. அம்பான்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என
  4. இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (National Institute of Infectious Diseases (NIID) ) மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர்
  5. 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையுடன் ஏற்பட்ட உக்கிரமான நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. கொழும்பு 05 பிரதேசத்தைச் செர்ந்த 61 வயதான பெண் ஒருவர். கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 நோய்
  7. தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு ( National Institute of Infectious Diseases (NIID)) மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020
  8. டிசம்பர் 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர்.. கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 30 ஆம் திகதி மரணமானார்.
  10. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நீரிழிவு சிக்கல் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  11. பெல்மதுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் 30ஆம் திகதி மரணமானார்.
  12. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று இரத்தம் நஞ்சானமை மற்றும் நுரையீரல் நோய் நிலைமை என
  13. தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

கடந்த இரவு மகர டவுன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இதன் பொழுது சார்யன் தர அதிகாரி மீது நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில்

அவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன விதானையார் சடலமாக மீட்பு

காணாமல் போன விதானையார் சடலமாக மீட்பு

அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது.

அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த 29 ஆம் திகதி மதியம்

ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம

அலுவலகர் இன்று (31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள

தோமஸ்புரி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.

நான்கு கிராம உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த 29 ஆம் திகதி

மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த

இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கிராம உத்தியோகத்தர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம உத்தியோகத்தர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம உத்தியோகத்தர்கள் மீட்கப்பட்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

சூறாவளியினால் 65 வீடுகள் சேதம்

சூறாவளியினால் 65 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து

உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை பெற்று நட்ட ஈட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

நட்புறவு கிராமத்தில் கடந்த 28 ஆம் திகதி பெய்த கடும் சுழி காற்றுடன் கூடிய மழை இரவு 9 மணி முதல் 15 நிமிடங்களுக்கு

தொடர்ச்சியாக வீசியதன் காரணமாக பகுதியளவில் 65 வீடுகள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிலும்

கோரளைப்பற்று பிரதேச செயலகபிரிவின் கும்புறுமுலை கிராமத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும்

இணைந்து பிரதேச செயலகங்களுக்கு வழங்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம்- கோட்டா அதிரடி

1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம்- கோட்டா அதிரடி

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப

வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில்

கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த அனைத்து வசதிகளையும் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம்

முன்னெடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய

பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Posted in உலக செய்திகள்

துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி

துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி

அமெரிக்காப்பிவைல் ஒரே நாளில் சுமார் 3,880 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 234,550 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதே போல பிரிட்டனில்

981 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் +50,023 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் இருந்து இருபது நாடுகளுக்கு பயணித்த மக்களுக்கு கொரனோ

தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த புதுவகையான வீரியமுள்ள வைரஸ் என குறிப்பிட பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

இராணுவம் திடீர் தாக்குதல் – 25 பேர் பலி – தொடரும் யுத்தம்

இராணுவம் திடீர் தாக்குதல் – 25 பேர் பலி – தொடரும் யுத்தம்

சிரியாவின் Deir Ezzor பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில்

சிரியா அரச இராணுவத்தினர் இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து யுத்தம் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

விமானதளத்தில் வெடித்த குண்டு – தப்பிய அமைச்சர்கள்

விமானதளத்தில் வெடித்த குண்டு – தப்பிய அமைச்சர்கள்

Yemen’s Aden Airport விமான தளத்தில் திடீரென பாரிய சத்தத்துடன் குண்டு

ஒன்று வெடித்தத்த்து ,இதில் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,அரசின்

முக்கிய அமைச்சர்கள் ,விமான மூலம் வருகி தந்து தரை இறங்கிய பொழுது இந்த குண்டு வெடித்துள்ளது

இதில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை

எதனை பேர் பலியானார்கள் என்ற விபரம் உடனடியாக கிடைக்க பெறவில்லை

பாதுகாப்பு நடவடிக்கை கருதி விமான நிலையம் அடித்து பூட்ட பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

இடிந்து வீழ்ந்த வீடுகள் -10 பேர் காயம் – நோர்வேயில் பயங்கரம்

இடிந்து வீழ்ந்த வீடுகள் -10 பேர் காயம் – நோர்வேயில் பயங்கரம்

நோர்வேயில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி திடீரென

பத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்தன இதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளனர் ,காணாமல்

போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

இடிந்து வீழ்ந்த வீடுகள்
இடிந்து வீழ்ந்த வீடுகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து

இருபது மில்லியன் மக்கள் சிவப்பு எச்சரிக்கை உள்ளாக்க பட்ட

பகுதிகளில் முழுமையாக முடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்

இந்த முடக்கம் இடம்பெற்று வருகிறது ,முக்கிய வீதிகள் மக்கள்

பாவனைக்கு உட்படுத்தப்படாது முடக்க பட்டும் வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

5 நாளுக்கு காத்தான்குடி தனிமைப்படுத்தல்- பீதியில் மக்கள்

5 நாளுக்கு காத்தான்குடி தனிமைப்படுத்தல்- பீதியில் மக்கள்

எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பபட்ட பிரதேசமாகஅறிவிக்கப்படுவதாக

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று (30) மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில்

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26

பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த

ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைவாக இத்தொற்றாளர்களும்,

இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ்.

மயூரன்இ மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ

உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் – கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்- அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவில் – கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்- அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை

என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை

அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

பொலிஸார் குறித்த இடத்தில் வருகைதந்து உடல் பாகங்களை

பார்வையிட்டதோடு சிவிலுடையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்

மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்

மத்திய மாகாணத்தில் இதுவரை 1,076 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அறுவர்

மரணித்துள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், இன்று (30) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 தொற்றாளர்கள்

இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்றும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவு, தேதுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது

உறுதியானதாகவும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்

தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 535 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை

மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அவர்களின்

செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு முதலில் வருகைதந்துள்ளனர்.

அந்நாட்டிலிருந்து இதுவரை 390 பேர் வருகைதந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு

வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு

கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்

இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 122 பேர் கடும் காயங்களுக்கு

உள்ளாகியுள்ளனர். 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழப்புக்கள் இல்லாத 130 வாகன விபத்துக்கள் இந்தக்

காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்

பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

Posted in உலக செய்திகள்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் பகுதியில் மதியம் இரண்டு மணியளவில்

Ballarto Road பகுதியில் உணவகம் ஒன்றின் அருகில் தகராறில் ஈடுபட்ட

பெண் ஒருவரின் காரினை போலீசார் சோதனை செய்ய முற்பட்டனர் ,

அப்பொழுது அந்த இரு காவல்துறை ஊழியர்களையும் காரினால் தகக்கிவிட்டு

தப்பி செல்ல முறைப்பட்டனர் .
எனினும் 170 மைல் வேகத்தில்பயணித்த கார் மரத்துடன் மோதி சிதறியது ,


காயமடைந்த இரு காவல்துறை ஊழியர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த சம்பவம் தொட்ரபில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Posted in உலக செய்திகள்

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

சிரியாவில் இடம்பெற்று வரும் போரில் அங்கு நுழைந்து ஆதிக்கத்தை

செலுத்தி வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்த வருடம் சுமார் 1525

படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,.தலை வெட்டி ,குண்டு தாக்குதல் ,மற்றும்

கடத்தி சுட்டு கொலை , உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது

தொடர்ந்து இவர்களினால் பெரும் படு கொலைகள் இடம்பெற்று வருவதாக

சுட்டி காட்ட பட்டுள்ளது ,உண்மையில் இந்த ஐஎஸ் பின்னால் இயங்குவது யார் என்ற கேள்வி முதலிடத்தை தொட்டு நிற்கிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்

கடந்த தினம் உசத்தை தொட்டுள்ளது இன்று மட்டும் சுமார் +53,135 பேர் ஒரே நாளில் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதே நாளில் 414 பேர் பலியாகியுள்ளனர் தொடர்ந்து 4,191 பேர் மிக

ஆபத்தான நிலையில் உள்ளனர்
நோயின் தாக்குதலை அடுத்து 40 நாடுகளுக்கான விமான

சேவைகள்இரத்து செய்ய பட்டுள்ளதுடன் எல்லைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

குளிர்காலம் தொடங்குவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது