Posted in Uncategorized

17 மோட்டர் சைக்கிளுடன் திருடன் சிக்கினான்

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 78

வயதுடைய நபரொருவர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய மேலும் பல மோட்டார்

சைக்கிள்களை சந்தேகநபர் திருடி பல்வேறு பிரதேச நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

அனாதையாக கிடைக்கும் சடலம் – உறவுகளை தேடும் பொலிஸ்

அனாதையாக கிடைக்கும் சடலம் – உறவுகளை தேடும் பொலிஸ்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில், கடந்த மூன்று வாரங்களாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ள

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு லிந்துலை பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் (வயது 74) என்ற பெயர் மற்றும் வயது விபரத்துடன், கடந்த ஜனவரி 4)ஆம் திகதி, கண்டி பெரியாஸ்பத்திரியில் குறித்த நபர் சுகவீனம் காரணமாக

அனுமதியாகியுள்ளார் என்றும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், கண்டி வைத்தியசாலையிலிருந்து

குறித்த நபரை (16) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், வைத்தியசாலையின் ஆண்கள் பிரிவு விடுதியில் ஏற்பட்ட இடவசதி பற்றாக்குறை காரணமாக, லிந்துலை பிரதேச

வைத்திசாலைக்கு இடமாற்றம் செயப்பட்டிருந்த நிலையில், கடந்த (4) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபருக்கு உறவினர்கள் யாரும் இருந்ததாகவோ, சரியான முகவரி இருந்ததாகவோ தொடர்பான

தகவல்கள் ஏதும் வைத்தியசாலையின் பதிவேட்டில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம், உயிரிழந்த நபரின் சடலத்தை மீண்டும் நுவரெலியா மாவட்ட

வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், சடலம் பிரதே அறையில் கடந்த ஒருமாத காலமாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சடலத்தை ஆடையாளம் காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

11 மாணவர்களை கடத்திய கடல்படை அதிகாரி விடுதலையாகும் அபாயம்

கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த

கரனாகொடவுக்கு எதிராக வழக்கை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களை அறிவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் மேலும்

காரணங்களை ஆராய்வதாக, மேலதிக சொலிசிட்டர் நாயகம் அயேசா ஜினசேன நேற்று(4) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதியாக தன்னை

பெயரிடுவதற்கு எதிராக ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தான் உள்ளிட்ட 14 அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வலுவற்றதாகும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது,

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர (தலைவர்) மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய

நீதியரசர்கள் குழாமால் மனு ஆராயப்பட்டபோதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் நாயகம அயேசா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ரிட் மனுவை மே மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று

எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர்

நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Posted in Uncategorized

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை

தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்

உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது

இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி

ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்;திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ‘சௌபாக்கிய வாரத்தை’ அமுலாக்கி வருகின்றது.

இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத்

திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.

கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.

ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக

களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு

அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.

இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிற்றி பஸ் சேவை’ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி

வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு

இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு

இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை

வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு,

போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும்

விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு

பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு

பிரிட்டனில் ஆளும் நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள வரவு செலவு அறிக்கையில் பல்வேறு பட்ட புதிய விடயங்கள் அறிவிக்க பட்டுள்ளன

அதில் பூட்டப் பட்டுள்ள அல்லது வணிகம் முடக்க பட்டுள்ள கடைகளுக்கு நிதிகள் அதிகளவு வழங்க படுகின்றன

சலூன்,மற்றும் ஆடம்பர கடைகள் என்பனவற்றுக்கு 18.000 பவுண்டுகள் வழங்க படுகிறது ,நிகழ் காலத்தில் திறக்க பட்டுள்ள கடைகளுக்கு 6000 வழங்க படுகிறது

£6,000 per premises for non-essential outlets due to re-open in April and £18,000 for gyms, personal care providers and other hospitality and leisure businesses

மேலும் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் சம்பளம் 8,91 ஆக அதிகரிக்கிறது ,ஆனால் இதுவே பத்து பவுண்டுகள் உயரும் என எதிர் பார்க்க ப்பட்ட பொழுதும் இங்கே அது ஏமாற்றமாக அமைந்துள்ளது

Minimum wage to increase to £8.91 an hour from April

இவற்றுடன் சோசல் பணம் வாரம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் எதிர் வரும் ஆறு மதங்களுக்கு அதிகரிக்க பட்டுள்ளது ,£20 uplift in Universal Credit worth £1,000 a year to be extended for another six months

மேலும் Working Tax Credit claimants will get £500 one-off payment ஒரு தரத்தில் வழங்க படுகிறது

வங்கி அட்டைகளில் 40 பவுண்டுகள் வழங்கும் நடைமுறை தற்போது நூறு பவுண்டுகளாக அதிகரிக்க பட்டுளள்து Contactless payment limit will rise to £100 later this year

இவை பிரதானமாக இடம் பிடித்துள்ளன

தமிழ் முதலாளிமாருக்கு குஷி தான் ,இதுவல்லோ அரசு

Posted in Uncategorized

வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்

மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,

இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான

துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்

சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்

கொழும்பு டாம் வீதியில் முப்பது வயது மதிக்க தக்க பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டு சூட்கேசில் அடைத்து வைக்க பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

குறித்த சூட்கேசில் பெண்ணை கொலை செய்து அடைத்து எடுத்து சென்ற நபர் தற்போது தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .


பெண்ணை கொன்று கொடூரமாக சூட்கேசில் அடைத்து வீசிய கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் தீவிர விசாரணையில் சிறப்பு போலீஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர் .

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் மிரட்டும் கொலைகள்

முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்

குறித்த இளம் பெண் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை .

இலங்கை தலைநகரில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்க பட்ட மேற்படி சம்பவ உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    Posted in Uncategorized

    குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

    குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

    யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் எட்டுமாத சிசுவை பிரம்பால் அடித்து கொடுமை படுத்தியமை ,கொலை செய்திட முனைந்தமை

    உள்ளிட்ட தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது

    மேற்படி சட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க பட்டால் குறித்த பெண் இருபது வருடங்கள் சிறையில் வாழ நேரிடும் என

    காவல்துறை அதிகாரி தெரிவித்துளளார் ,இதனையே உலக மக்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர் .

    யாழ்ப்பாண நீதிமன்றம் இந்த சிறந்த தீர்ப்பை குறித்த பெண்ணுக்கு வழங்கி சமூகத்தில் நிலைபெறும் இவ்வாறான கொடுமையான

    சிந்தனை வாதிகளை தடுத்து குற்றங்களை குறைக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியாவில் பேரூந்து சாரதியை தாக்கிய பெண்

    நேற்று (02) மதியம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.

    பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார்.

    அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர் அதே தொலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது நடத்துனரின் தொலைபேசியினை கேட்ட போது தொலைபேசியினை அவர் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

    அதன் போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில்

    ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தாக்குதல் நடத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு

    தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.

    காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமையுடன் வவுனியா மாவட்ட பொது

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி சி டிவியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ

    தேனிசையின் விவசாயி / நாம் தமிழர் தேர்தல் பாடல் . வீடியோ

    நாம் தமிழர் கட்சி சட்ட சபை தேர்தலின் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்திட விவசாயி சின்னத்தில் புதிய பாடல்கள் உருவாக்க பெற்று வெளியிடப் பட்டுள்ளன

    அவ்வாறான பாடல்களில் புதிய பாடல் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

    இளங்கோ செல்லாப்பா இசையில் கம்பீரமாக நடை போடுகிறது இந்த பாடல் ,

    சமகால அரசியல் களத்தின் முதன்மை அறிந்து பரப்புரை பணியாளர்களினால் முன்னெடுக்க படும் இந்த களப்பணி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது

    இந்த பாடல் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எமது பாரட்டுக்கள் ,வாழ்த்துக்கள் ,வெல்லட்டும் நாம் தமிழர்,

    https://www.youtube.com/watch?v=kEuY_Cl0Amc&t=5s

    CLICK HERE VIDEO

    Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

    ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

    ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

    அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள்

    குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு திங்கட்கிழமை (01-03-02021) அன்று இணையவழிமூலமாக நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா

    பார்வையாளராக இல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றக்கொடுக்க இந்தியாவே தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கிறோம்.

    https://youtu.be/hw5a7OmeO-k
    ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென

    எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு

    பிராந்தியம் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தூக்கியெறிந்துள்ள சிங்கள அரசாங்கம், தமிழர்களின் பாரம்பரிய

    தேசத்தைச் சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

    சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தைச் சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையினைத் தடுத்து நிறுத்தும் தார்மீக் கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.

    யாழ்ப்பாணத்தின் தீவுக் கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.

    ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலாகும். ஈழத் தமிழர்கள் தொடர்பான

    இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

    இதற்கு வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்கின்றோம். இதனடிப்படையில், சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்துக்குப்

    பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக கட்சிகள் அனைத்தும், தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

    அதனை, அனைத்துக் கட்சிகளும் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலைமையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு

    பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதனையும் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க அவர்கள், கௌரவ பிரதமர்

    மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (2021.03.02) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

    மஹாசங்கத்தினரது ஆசீர்வாதத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்கள் தனது அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

    குறித்த நிகழ்வில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்

    ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள்

    இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    Posted in இலங்கை செய்திகள்

    மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை

    மனித உரிமைகள் பேரவையில் – இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் இலங்கை

    மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

    கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்

    நீண்ட நாள் நல்லுறவு தொடர்புபட்ட விடயமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

    இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இலங்கை தமிழர்கள்

    தொடர்பில் இந்திய அரசாங்கம் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்குட்பட்ட அதிகார பகிர்வை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இவ்வாறான நிலையில், தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தற்போது இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்கும் என இலங்கை அரசாங்கம்

    எதிர்பார்க்கின்றது என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

    13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் 1976 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இடம்பெற்றதாகும். அந்த

    நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டு அமைச்சர் எமது படையினர் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

    துரதிஷ்டமான இந்த கருத்துக்களினால் பல நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டது. உண்மை நிலையை

    புரிந்துக்கொண்டு பல நாடுகள் செயற்பட்டதற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

    L.T.T.E இனால் யாழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை கருத்தில் கொள்ளாமல் சில நாடுகள்

    செயற்பட்டன. L.T.T.E இனால் பிள்ளைகள் கடத்தப்பட்டமையால் பெற்றோர் துன்பத்தை அனுபவித்தனர்.

    யுத்ததிற்கு பின்னர் யாழ் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துக்கொண்டுள்ளனர். சில நாடுகள் டு.வு.வு.நு மற்றும்

    புலம்பெயர்ந்தவர்களுக்காக ஆதரவை தெரிவிக்காததையிட்டு நாம் கவலை அடைகின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

    இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதி அபிவிருத்தியை பணியை மேற்கொள்ள இந்தியாவுக்கு 35 வட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது

    இதனை அடுத்து மீளவும் இந்தியா அதனை பாவனைக்கு உட்படுத்தும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது

    இந்தியா இலங்கைக்குள் இடம்பெற்று வந்த இழுபறி நிலை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

    குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

    யாழ்ப்பாணம் அரியாலை

    பகுதியில் இளம் பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை சரமாரியாக அடிக்கும் காட்சி

    சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

    குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதனை காணொளி பிடித்து

    சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

    இவளை பிடித்து தூக்கில் தொங்க விட வேண்டும் என நெட்டிசன்கள் கருது எழுதுவருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இலங்கைக்குள் இந்தியா போர் விமானங்கள் புகுந்தன

    இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி

    வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு 2021 மார்ச் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக

    பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன

    இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய

    கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க

    உள்ளன.1D6A5709இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 2021 பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன.

    இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானங்களும் இதற்கு ஆதரவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.1D6A5945

    பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும்

    இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.

    இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்

    துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. தேஜாஸ் பயிற்சி விமானம் முதற்தடவையாக இந்த கண்காட்சியில் கலந்து

    கொள்வதுடன் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது. அதே

    நேரம் இந்த நிகழ்வுகளின்போது சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

    இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் சமுத்திர ரோந்து விமானமான டோனியரில் முதற்தடவையாக அனுபவங்களைப்பெற உள்ளனர். இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படையினர்

    இந்திய விமானிகளுடன் இணைந்து விமானங்களில் பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை

    மற்றும் இலங்கை விமானப்படையினருக்காக அரையாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் டோர்னியர் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைகின்றது.

    பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் “முதல் முன்னுரிமை” நாடாக இலங்கை அமைகின்றது. 2020 நவம்பர் மாதம் இலங்கையால் நடத்தப்பட்டதும் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்டதுமான முத்தரப்பு கடல்

    பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களால் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பாதுகாப்புதுறை சார்ந்த

    விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பானது வலியுறுத்தி கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில்

    இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை இரு நாடுகளினதும்

    ஆயுதப்படைகள் இடையிலான நட்புறவு, தோழமை மற்றும் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது..