Posted in Uncategorized

பிளாஸ்டிக் ,பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை.

எதிர்வரும் ,மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle) ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்கும்.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக

சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்து தொடர்பாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு பிரிவினர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்படி கடந்த வாரம் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல தனியார் வியாபார நிறுவனங்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் இலங்கை பல

முதல்தர ஹோட்டல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலான மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுவது

குறித்து வியாபாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர்கள் பயன்படுத்துகின்ற சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சிலவற்றை அமைச்சரிட் சமர்ப்பித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன்இ இந்த வருட இறுதிக்குள்

மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

எனவே முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்

Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிப்பதற்கு மகிந்தா உத்தரவு

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கௌரவ பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித

ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்

யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா

மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Posted in Uncategorized

ஐநாவில் வென்று -இராணுவத்தை காப்பாற்றுவோம் -இலங்கை சூளுரை

ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இராணுவத்தைப்

பாதுகாக்கவேண்டிய தேவையேற்படின், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள்

சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் குறித்து இன்று வாதிடுகிறார்கள்’ என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது அறிக்கை, இலங்கையின் சுயாதீனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்

வகையில் காணப்பட்டது. ஆகையால், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது’ என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில், மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தேவையான

சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,

அப்பாவித் தமிழ் இளைஞர்களைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து

வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

’30 வருட கால யுத்தத்தைஇ நிறைவு செய்த இராணுவத்தினர், அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. . இராணுவத்தினரைப் பாதுகாக்க, தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின், புதிதாகச் சட்டத்தை உருவாக்குவோம்’ என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காலமாக, இணக்கமாகச் செயற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாகச் செயற்படுத்தி

உள்ளோம் என்று தெரிவித்த அவர், ஆனால்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்றார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சில விடயங்களை அடிப்படையாகக்

கொண்டு அறிக்கை பெறுமதியற்றது என்று குறிப்பிட முடியாது எனத் தெரிவித்த அவர், அடிப்படைவாதச் செயற்பாடுகள்,

எதிர்காலத்தில் நாட்டில் தோற்றம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.

நீண்ட அறிக்கை என்பதால், அந்த அறிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது எனத்

தெரிவித்த அவர், எமது கட்சியின் நிலைப்பாட்டை, அடுத்தவாரம் தெளிவாகப் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே, அறிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். ஒருசில பக்கங்களை மாத்திரம் புரட்டிவிட்டு, அதிருப்தி கொள்ள முடியாது; அவ்வாறு செய்வது பொறுப்பான செயலல்ல என்றார்.

‘விசாரணை ஆணைக்குழுவுக்கு, தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்றபோது, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை

வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஒட்டு சுட்டான் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்

அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

ஜனநாயக நாடு என இலங்கை கூறி கொள்கின்ற பொழுதும் ,அறவழியில் நடத்த பட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள்

,மற்றும் பிரமுகர்களை சிங்கள ஆளும் இரத்த காட்டேறி அரசு அடக்குமுறைகளை பிரோயோகித்து மிரட்டி அடக்கி வருகின்றமை

மேற்படி செயல் ஊடாக மீண்டும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்”

சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.

இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.

இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை

போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்

Posted in Uncategorized

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

கோரமாக அடித்து கொன்றுள்ளார்

எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு

இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு

இலங்கை அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில்இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு

பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

மேலு இவர்கள் பயணித்த வாகனங்களும் அடித்து நொறுக்க

பட்டுள்ளன ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Posted in Uncategorized

வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

வவுனியா வைர புளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த

இருவரையும் கம்பியால் தாக்கி விட்டு அவர்களது மோட்டசைக்கிள்,மற்றும் கடிகாரம்,பணம்,என்பனவற்றை திருடி

சென்றதுடன் ,அவர்கள் தொலைக்காட்சிகள் ,கணனிகள் என்பனவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்த தாக்குதல் சம்பவம் அப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in Uncategorized

காவல்துறை சட்டையில் கமரா பொருத்த வேண்டுதல் – வெளிநாடாகும் இலங்கை

காவல்துறை சட்டையில் கமரா பொருத்த வேண்டுதல் – வெளிநாடாகும் இலங்கை

சட்டக்கல்லூரி மாணவன், பேலியகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்துடன், பொலிஸ் வன்முறைகள் தொடர்பாக அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளதாகத்

தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்.பி. பெரேரா, தவறு நடந்தால் குற்றம் சுமத்துவதோ, தவறிழைத்தவர்களைத்

தண்டிப்பதையோ விடுத்து, இவ்வாறான பொலிஸ் வன்முறைகள் இனியும் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், இந்தப் பொலிஸ் வன்முறைகளைத் தடுப்பதற்கான இரண்டு முறைமைகளைப் பின்பற்றலாமெனத் தெரிவித்த அவர், சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு

கமெரா பொருத்தினால், பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பிரஜைகளுக்கோ, பிரதிவாதியின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அத்துடன், பொலிஸாரும் பொறுப்புடன் செயற்படுவர். எவர் மீதும் முன்வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் தடுக்கப்படும் என்றார்.

கடமைகளில் ஈடுபடும் பொலிஸாரின் ஆடைகளில், சிறிய கெமராவைப் (பொடிகேம்) பொருத்துவதன் மூலமும் வன்முறைகளைத் தடுக்கலாம் என்பது இரண்டாவது முறையாகும்.

இது புதிய விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தமது நாட்டிலுள்ள சகல பிரஜைகளினதும், பொலிஸாரினதும் உரிமைகளைப்

பாதுகாப்பதற்காக அக்கறையுடன் செயற்படும் அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

எனவேஇ உடனடியாக நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு கமெராவைப் பொருத்த வேண்டும் என்பதுடன், படிப்படியாக இரண்டாவது நடவடிக்கையை

முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். இதற்காகப் பாரியளவில் செலவு செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்த

அவர், இதன் மூலம் சட்டம், நீதியின் பக்கம் கிடைக்கும் பிரதிபலன் மிக முக்கியமென்றார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 471 பேர் மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

நாள் தோறும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உயிரிழப்பு

மேலும் திகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்ச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

கிளிநொச்சியில் பகுதியில் சிறுவன் ஒருவன் அவனது உறவினர் ஒருவரினால் மிக கோரமாக தாக்க பட்ட நிலையில்
மரணமடைந்துள்ளான் ,

கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்க பட்ட ,இவன் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் ,அப்பகுதி மக்கள் அவனை கண்டு பொலிசாருக்கு

தெரிவித்த நிலையில் ,அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான் ,ஆயினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்

,மேற்படி மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in Uncategorized

மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்

மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்

மியன்மாரில் நிலவி வரும் இராணுவ ஆட்சியில் ,குறித்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ,

இதன் பொழுது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி பதினெட்டு பேர் பலியாகியுள்ளனர்

மியன்மாரில் இராணுவத்தினர் உடனடியாக பதவிவிலகி ஜனநாயக ஆட்சியை நிலை

நிறுத்த வேண்டும் என கோரி வந்த நிலையில் மேற்படி வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா – தப்பிய தலைநகர்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா – தப்பிய தலைநகர்

சிரியாவின் தலைநகர் டமக்காஸ் பகுதியை நோக்கி இஸ்ரேல் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,

எனினும் அவர்களின் ஏவுகணைகளை தமது இலக்கினை எட்ட முன்னர் தாம் சுட்டு வீழ்த்தியதாக சிரியா வான் காப்பு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

அமெரிக்கா இராணுவத்தினர் ஈரானின் ஆதரவு படைகள் நிலைகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்தியதன் பின்னர், இஸ்ரேல்

இராணுவத்தினர் இந்த ஏவுகணை தகத்தலை நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்

மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை

இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள்

கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும்

இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ

வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ

நாம் தமிழர் கட்சியின் வெற்றியை இலக்கு வைத்து அவர்கள் விவசாயி சின்னத்தை மைய படுத்தி பல புதிய பாடல்கள் தயாரிக்க பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளன ,

அவ்வாறான பாடல் ஒன்று இப்பொழுது இளங்கோ செல்லப்பா

இசையிலும், மறத்தமிழ் வேந்தன வரிகளில் , மதுர குரலோன் பாவேந்தன் ஒலியில் முழங்கியுள்ளது

தமிழா ஒன்றிணைந்து வடமிழு ,இந்த பாடல்களை பரப்பிடு

வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணிகள்

click here video

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் முதலாளிகளுக்கு 18.000 பணம் உதவி – அரசு அதிரடி அறிவிப்பு

பிரிட்டனில் முதலாளிகளுக்கு 18.000 பணம் உதவி – அரசு அதிரடி அறிவிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்க க பட்டுள்ளது ,இதனால்


கடைகள் பார் , clubs, hotels, உணவகங்கள் gyms and hair சலூன் போன்றவைகள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளன

சுமார் 70000 முதலாளிகள் இதனால் பாதிக்க பட்டுள்ளதால ,அவர்களின் வணிகத்தை மேலும் உயர்த்தும் நோக்குடன் ஆளும்

அரசினால் மேலும் புதிதாக 18000 பவுண்டுகள் உதவியாக வழங்க படவுள்ளன ,


British finance minister Rishi Sunak will announce £5 billion ($9 billion) of additional grants to help businesses hit hard by pandemic lockdowns in his budget statement next week, the government said.

Shops, bars, clubs, hotels, restaurants, gyms and hair salons would be among nearly 700,000 companies eligible for new direct cash grants of up £18,000.

இதற்கு முன்னர் ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரை அரசு வழங்கிய நிலையில் இப்பொழுது மீள புதிதாக 18000 பவுண்டுகள் வழங்க உள்ளது

இந்த உதவி திட்டத்தின் மூலம் வீழ்ந்து போன பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட முடியும் என அரசு நம்புகிறது ,எதிர்வரும்

வைகாசி மாதத்துடன் முழு லொக்கடவுன் நீக்க பட்டு பிரிட்டன் வழமைபோல இயல்பு நிலைக்கு திரும்புகிறது

இவ்வேளை வணிகத்தில் மீளவும் கொடி கட்டி பறக்க முடியும் என அரசு நம்புகிறது


இதனால் தான் இப்பொழுது புதிதாக ஒன்பது பில்லியன் பவுண்டுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்க பட்டுள்ளது

அப்புறம் என்ன நம்ம தமிழ் முதலாளிமார்களுக்கு குஷி தான் போங்க

Posted in உலக செய்திகள்

பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உலக யாம்பவானாக இடம்பிடித்து சாதனை படைத்தது விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்க்ளின்

தனி நபர் விபரங்களை திரட்டி வெளியிட்டதாக கூறிய புகாரில்

சுமார் 843 மில்லியன் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் தண்டமாக செலுத்தியுள்ளது

பல்லாண்டுகளாக இடம்பெறு வந்த நீதி விசாரணைகளில் இந்த அதிரடி தீர்ப்பு

வழங்க பட்டுள்ளது ,பேஸ்புக் தற்பொழுது பெரும் அடாவடிகளில்

ஈடுபட்டு வருவதாக பயனாளர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

காவல்துறை சிப்பாயை கடித்து குதறிய நாய் –

காவல்துறை சிப்பாயை கடித்து குத்திய நாய் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்

அவுஸ்ரேலியா அதிகாலை வேளை வீதியில் நாயுடன் சென்று

கொண்டிருந்த நபரை போலீசார் சோதனையிட முற்பட்ட பொழுது

,அந்த சோதனையில் ஈடுபட முயன்ற காவல்துறை ஊழியரை நாய் பாய்ந்து கடித்துள்ளது

பலத்த நாய் கடிக்கு உள்ளான ஊழியர் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,நபரும் ,நாயும் கைது செய்ய பட்டுள்ளனர்

Posted in Uncategorized

பாட்டியை குத்தி கொன்ற – 14 வயது சிறுமி

பாட்டியை குத்தி கொன்ற – 14 வயது சிறுமி

அமெரிக்காவில் அறுபத்தி ஐந்து வயதுடைய பாட்டியம்மாவை

பதின் நான்கு வயதுடைய சிறுமி கத்தியால் கோரமாக குத்தி கொன்றுள்ள பெரும் துயர் இடம் பெற்றுள்ளது

இந்த படுகொலையை புரிந்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்

,இவர் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் காணப் பட்டதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Posted in Uncategorized

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும்

பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்’ என்று

அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம்

ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.‌ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.