Author: நலன் விரும்பி
யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது கொலை வெறித் தாக்குதல்
யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது கொலை வெறித் தாக்குதல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாவற்குழியில் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான சமரச முயற்சிக்கு சென்ற சாவக்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராமநாதன் யோகேஸ்வரன் என்ற உறுப்பினர் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்தியால் வெட்டிப் படுகாயம் அடைந்த அவர் மீது கற்களாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு திருட்டு சம்பவங்களை உடனடியாக முறிடியத்த நடவடிக்கைக்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் தலைமை தாங்கியிருப்பதாக தெரிய வருகிறது.
நேற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 300 வீட்டுத்திட்டம் பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தை அடுத்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக தனியாக அவர் அங்கு சென்றிருக்கின்றார். சென்ற பின்னரேயே திட்டமிட்டு அவர் வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
அங்கு அவரின் தலைப்பகுதிக்கு கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு நின்றிருந்த சிலர் கற்களால் அவரின் தலையில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்திருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்
வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்
இலங்கை அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பவ இடத்தில ஒருவர்
பலியானார் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வெடிப்பு இடம்பெற்ற பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு
பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு
எதிர் வரும் திங்கட்கிழமை முதல் இலங்கையில் பிறவுண் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 115 ரூபாயாக விலை நிர்ணையிக்க படுகிறது
ஆளும் ஜனாதிபதி கோட்டபாய சீனி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,அதனால் இந்த விலை இவ்வாறு நிர்ணயிக்க படுகிறது
நாள் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய்களை சினி வியாபாரம் மூலம் கோட்டா பெற்று
கொள்கின்றார் என்ற தகவல் பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்
தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்
இலங்கை தெற்கு அதிவேகசாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!
போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்தே இந்தக் கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடித்தில்,
சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
உலகில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சிறிலங்க இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐ.நாவின் அறிக்கையொன்றில் உள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா. உள்நாட்டு மறுஆய்வு அறிக்கையின்படி, 2009 ஆண்டின் இறுதிப்பபோரின் போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும்,
காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.சிறிலங்கா இராணுவத்தினாரால் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் சிறிலங்கா இராணுவ மற்றும்
உளவுத்துறையிடமிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அகதிகளை, சந்திக்கவும், அவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிக்களை வேண்டுமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாளரிடம் கோரியுள்ளார்.
முன்னராக தமிழ்அகதிகளை நாடுகடத்த வேண்டாமென ஜேர்மன் வெளிவிகார அமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன
சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன
இலங்கை ஆளும் இனவாத அதிபர் கோட்டபாய சீனாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு
செல்லவுள்ளார் ,அங்குச செல்லும் இவர் இருநாடுகளும் இடையினாலான பாதுகாப்பு மற்றும்
,பொருளாதாரம் ,அபிவிருத்தி போன்ற விடயங்களில் பேசுவார் என எதிர்பார்க்க படுகிறது
இவரது இந்த திடீர் பயணம் இந்தியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்
பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்
இலங்கையில் ஊந்துருளியினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால் அதனை செலுத்துபவர்கள் தீவிர
கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டனர்,விதிமுறைகளை மீறி செலுத்தி சென்ற சுமார் 4511
வண்டிகள் பொலிசாரினால் பறிமுதல் செய்ய பட்டதுடன் அதனை செலுத்தி சென்ற சாரதிகள்
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்
கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கணவன் தனது மனைவியை அடித்து ,வெட்டி கொன்ற பின்னர் தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துளளர்
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,ஒருவர்
மேற்கொண்ட தவறான முடிவினால் மூன்று பிள்ளைகள் தற்பொழுது அனாதையாகியுள்ளன
,மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்
டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை
அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த
காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையில் ஆளும் கோட்டாவின் சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது
போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்
போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்
சிறை சாலைக்குள் துவாய் ஒன்றுக்குள் மறைத்து போதைவஸ்து கடத்த முயன்ற பெண் ஒருவர்
கைது செய்ய பட்டுள்ளார் ,கவால்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது
இடம்பெற்றுள்ளது
கைதானவர் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்
தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்
தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்
இலங்கை நுவரெலியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது லொறி வண்டி
மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள்
பலியாகினர் ,லொறி சாரதி தப்பி ஓடியுள்ளார் ,நாள் தோறும் இலங்கை வீதி விபத்தில் சிக்கி நான்கிற்கு
மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்
யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்
யாழில் தொடர்ந்து அதைகரித்து செல்லும் கொரனோ நோயின் தொற்றினை அடுத்து அந்த பகுதி விரைவில் முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதுவரை 264 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,சீனாவிற்கு மூன்று தீவுகளை வழங்கிய நிலையில்
அங்கு பெரும் நகர்வு ஒன்றினை நடத்திட சீனா முயல்கிறது ,அதற்கு ஒத்திசைவாக கொரனோ என
காரணம் காட்டி மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நிகழ்வில் சிங்கள படைகள் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை-இராணுவம் குவிப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு
ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும்
இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார்
இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்
இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் புற்று நோயினால் நாள் தோறும் முப்பத்தி எட்டு பேர் பலியாகிவருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட புற்று நோய் நோயாளர்கள் நாட்டில் உள்ளனர் எனவும் ,இவர்கள்
தமது நோயினை தடுக்க வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் 45 ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து வருவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்
மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்
மன்னர் மாவட்ட அருள்தந்து ராஜப்பு ஜோசப் அவர்கள் மரணமடைந்துள்ளார் ,இவர் பாதிக்க பட்ட தமிழ் மக்களின்
அரசியல் மீட்சிக்காக தனது குரலை ஓங்கி ஒலித்தவர் என்பதும் ,இறுதி போரில் சிங்கள படைகளினால்
140 ஆயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்டனர் என்பதும் சர்வதேசம் வரை எடுத்து சென்றவர்
என்பதுடன் ,பாதிக்க பட்ட தமிழ் மக்களுக்குரிய தீர்வு கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தவர்
அவ்விதமான சிறந்த மனிதரை இழந்து தமிழர்தேசம் தவிக்கிறது
15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை
15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சராக விளங்கிய ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு பாரிய நிதி
மோசடியில் ஈடுபடடர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .,இதனை அடுத்து தற்பொழுது அவர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
ஆளும் கோட்டபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளது
இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர்களை இலக்கு வைத்து இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண்
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண்
நிகழ்விடம்: St John’s Church Parish Hall, 52 Yarra St, Heidleberg VIC. 3084
காலம்: 18/04/2021 Sunday 6PM – 8PM
நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு
நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற
நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும்
நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெறும் இடம்: St John’s Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084
காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
பிற்குறிப்பு: நாட்டுப்பற்றாளர் நிகழ்வில் ஆண்டுதோறும் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் அல்லது தனிநபர்கள் விரைவில் மேற்கூறிய இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்
- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு
தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!
தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!
ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது.
தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற முழக்கத்துடன், ஈழத்தமிழ் மக்கள் தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்கும் வகையில்,
பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
கனேடிய நேரம் மாலை 6 மணிக்கு இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கருத்தரங்கில், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி,
தமிழ்நாட்டில் இருந்து மத்ராஸ் பல்கலைக்கழக பொருளியில் பேராசிரியர் கலாநிதி நாகநாதன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
ZOOM செயலி மூலம் ( Meeting ID: 875 9167 2409 ) இடம்பெறுகின்ற இக்கருத்தரங்கில் அனைத்த தமிழ்உறவுகளையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா
ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா
ஹரித” தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது.
விவசாய துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும்.
விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்தில் இருந்துவந்த உயர் விவசாய
தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும்.
இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்களினால் “ஹரித” இணையத்தளமும் (www.harithatv.com) கருப்பொருள் பாடலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மரக் கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.
டயலொக் அலைவரிசை என் 16 மற்றும் பியோ டிவி அலைவரிசையின் 09 ஊடாக ஹரித தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள் பார்வையிட முடியும்.
மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
, மேல் மாகாண ஆளுநர் மாசல் எப் த எயாபோஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் அமைச்சர்கள் தூதுவர்கள்,
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







