Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பற்றி கொள்ள

விதிக்க பட்ட நிகழ்கால விதிகளை கடைபிடிக்க மறுத்த சுமார் 149 பேர் காவல்துரையினரால்

கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது என தெறிவிக்க பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்

    மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்

    இலங்கையில் தன்னுடைய மகனின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொணட டசினுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் ,

    மாணவர்களுடன் போதை பொருள் பாவித்து கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த டீச்சர் மற்றும் அதில்

    கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

    இந்த நிகழ்வை நடத்தியவர் சர்வதேச பாடசாலை ஒன்றின் முக்கிய டீச்சர் என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்

      பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்

      திருமலையில் உள்ள அணைத்து பாடசாலைகளும் அடித்து மூட படுகிறது ,கொரனோவின்

      பரவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிட பட்டுளள்து

      இதனால் மாணவர் குஷியில் உறைந்துள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை

        ரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை

        தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், மரக்கறி

        வகைகளின் விலை அதிகரிக்க மாட்டாது என்று பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.

        தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை எடுத்துச் செல்லும் விவசாயிகள் தமது உற்பத்திகளை மெனிங் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

        ,தனால், மெனிங் சந்தையில் மரக்கறி வகைகள் அதிகரித்து விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

        கொவிட் தொற்றாளர்கள் பதிவானதை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3

        நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          5,000 ரூபா பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்

          5,000 ரூபா கொடுப்பனவு : இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்

          5000 ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனைப் பெற தகுதி பெற்றும் இதுவரை அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு

          முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

          ஐயாயிரம் ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு 25 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

          சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்

          உள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

            Posted in Uncategorized

            இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

            இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

            இலங்கையில் ஆளும் சகோதர ஆட்சியில் நடத்த பட்ட தமிழ் இன படு கொலைக்கு தீர்வு இதுவரை

            கிட்டவில்லை ,மேற்படி இனப்படுகொலை தொடர்பாக ஐநா மன்றில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

            உள் நாட்டுக்குள் நீதிக்குழுவை அமைத்து அதன் மூலம் பாதிக்க பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவதுடன் குற்றவாளிகள் தண்டிக்க படுவர் என்ற இலங்கையின் பசப்பு வார்த்தைகள்

            பொய்யாகி போன நிலையில் தற்போது ஐநாவின் விசேட விசாரணை ஆணைய குழு ஒன்று இலங்கைக்குள் நுழையவுள்ளது

            இதில் புலனாய்வாளர்களும் உள்ளடங்க படுகின்றனர்

            ஆறு மாத்திற்கு மேலாக இலங்கையில் தங்கி நின்று இவர்களினால் திரட்ட படும் தரவுகள் ,மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள செல்வார்கள்

            இதனால் இவர்கள் நுழைய முன்னர் முள்ளி வாய்க்கால் பகுதி எங்கும் உருமாற்றம் செய்யு நகர்வில் சிங்கள உளவாளிகள் ஈடுபட்டுள்ளனர்

            அதாவது தடயங்கள் அழிக்கும் தீவிர நகர்வில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் ,செய்மதி புகைப்படங்கள்;

            ஊடக இவற்றை முக்கிய நாடுகள் சில அவதானித்துள்ளதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன

            விசாரணை குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் தடயத்தை வழங்கும் என அடித்து கூற படுகிறது

            இறுதிப்போர்
            இறுதிப்போர்
              Posted in Uncategorized

              முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் photo

              முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம்

              முல்லைத்தீவு வட்டு வாகல் பாலத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்தில்

              ஒருவர் பலியானார் மேலும் ஒருவர் படுகாயமடைந்த்துள்ளார்

              காணி ஒன்றுக்குள் இருந்த குண்டே இவ்வித வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

              தமிழர் பகுதிகளில் மீளவும் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாக சிங்கள இராணுவம்

              பரப்புரை புரிந்து வரும் இவ்வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

              குண்டு வெடிப்பு
              குண்டு வெடிப்பு
              குண்டு வெடிப்பு
              குண்டு வெடிப்பு
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்

                இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்

                இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் இவ்வேளையில் வெளி நாடுகளில்

                இருந்து உல்லாச பாயணிகள் அதிகம் நுழைந்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது

                பல நாடுகள் இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் நாட்டவர்களை தமது நாடுகளுக்குள் நுழைவதற்கு

                தடை விதித்துள்ளன

                அவ்விதம் இருந்தும் இலங்கைக்கு இவ்விதம் உல்லாச பாயணிகள் வருகை வழமை போன்ற

                நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்க படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

                  டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

                  இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6,389 ஆக உயந்துள்ளது

                  நிகழ் காலத்தில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்களையு இந்த கணக்கில் இலங்கை அரசு இனைத்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது

                  இவ்விதம் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களை டெங்கு நோயின் தாக்குதலில் இறந்தார்கள் என

                  சடலங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                    யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                    இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற இளம் கர்ப்பிணி தன்னை

                    தானே தீமூட்டி கொண்டார் என தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

                    எனினும் இவரது மரணத்தில் சநதேகம் இருப்பதால் அவரது கணவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                    இவரே மனைவியை எரியூட்டி இருக்லகலாம் என சந்தேகிக்க படுவதால் போலீசாரை தொடர்ந்து

                    விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                      Posted in Uncategorized

                      ஆயுதங்களுடன் 22 பேர் கைது – தொடரும் விசாரணை

                      ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை

                      இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                      கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

                      கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                      மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                      ,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

                        அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

                        இலங்கை திருகோணமலை குச்சவெளி பகுதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவ சடலமாக மீட்க பட்டுள்ளார்


                        இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்

                        இந்த படுகொலைகாண காரணம் உடாண்டியாக தெரியவரவில்லை

                        கோட்டா ஆட்சியில் நாள்தோறும் இவ்வாறான மர்ம படுகொலைகள் நாடெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                          இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                          வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கிய விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” இன்று

                          சனிக்கிழமை இரண்டாவது நாளினை எட்டியுள்ளது. பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான இந்நடைப்பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

                          பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும்

                          அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

                          தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

                          இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை www.lifttheban.uk இந்த இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                          தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக

                          இருக்கின்ற நிலையில், இத்தடையினை நீக்கக் கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ்உறவுகள் வெளிப்படுத்தும் வகையில் எனும் இணையத்தளம் செயற்படத் தொடங்கியுள்ளது.

                          நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமது தொகுதி

                          பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

                          இது தொடர்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடங்கியுள்ள இந்த நடைப்பயணமானது பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தினை வந்தடையவுள்ளது.

                          தாம் முன்னெடுத்துள்ள இந்நடைப்பயணத்திற்கான ஆதரவினை தெரிவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் குறித்த இணையத்தளத்துக்கு சென்று தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்துவே தமது வேண்டுகோளாக இருக்கின்றது என இந்நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

                          https://youtu.be/mLCJ_bpSY3o
                          பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

                            பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி
                            நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

                            (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

                            பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

                            இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

                            விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, மனித

                            உரிமைகள் அமைப்பின் ஆளுநர் எ.ஜே. மொஹமட் பாய்ஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ். சந்திரசேகரம் ஆகியோருடன் பல உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.

                            இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும் போது,

                            எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்குப் புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.


                            இதனை அரசாங்கத்தினால் மற்றும் செய்துவிட முடியாது எனவும் இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையினரே வழங்கி வருகின்றனர் என்றும் அந்த வகையில் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

                            எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

                            Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

                            உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி கல்வி அறிவாகும். எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்தத் துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த

                            அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                            அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி, பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                            வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
                            சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன்

                            ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புவது விசேட அம்சமாகும்.

                            இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 140 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

                            இவற்றில் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி,
                            தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

                            நிகழ்வில் பங்கேற்ற அனைத்து அதிதிகளுக்கும், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த விரிவுரையாளர்களுக்கும் , இணை நிறுவனங்களுக்கும் விசேட

                            நினைவுச்சின்னங்கள் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

                            அமேசன் உயர் கல்வி

                            அமேசன் உயர் கல்வி
                              Posted in இலங்கை செய்திகள்

                              கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்

                              கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்

                              முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது

                              செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

                              அவரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த

                              பாதுகாப்புத் துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

                              2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ஷ அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கோவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது. கைது

                              செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர் பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தமது ஆதரவாளர்கள் என்பதற்காக

                              குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது

                                இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது

                                இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள்; எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது ,


                                மேலும் இந்த நோயினால் பலர் மரணமாகியுள்ள நிலையில் ,அந்த கிராமங்கள் தனிமை படுத்த பட்டு மக்கள் போக்குவரத்துக்கள் முடக்க பட்டுள்ளன

                                இதே நாளில் 880 பேருக்கு மேல புதிய நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் ,எமது நாட்டில் நோயின்

                                தாக்குதல் பாதிப்புஇல்லை என கூறி வந்த சிங்கள ஆளும் அரசு இப்பொழுது நோயானது

                                அதிகரித்து வருவதாக தெரிவித்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு

                                  ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு

                                  இலங்கை கம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள மிக பெரும் ஆறுகளை சுற்றி பறக்கும் கடற்படை

                                  அணி ஒன்று உருவாக்க பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு படுத்த பட்டுள்ளது

                                  இலங்கை கடல் படையின் புதிய பிரிவினரின் தயாரிப்பில் வடிவமைக்க பட்ட பறக்கும் படகுகள்

                                  மூலம் இந்த கண்காணிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன

                                  கம்பந்தோட்டை பகுதி சீனாவுக்கு தாரை வார்க்க பட்டதன் பின்னர் இந்த புதிய படையணி

                                  உருவாக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                  கடற்படை
                                  கடற்படை
                                    Posted in Uncategorized

                                    இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

                                    இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

                                    இலங்கையில் தேவலாயங்கள் மீது தொடராக நடத்த பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலின் பின் புலத்தில் செயல்

                                    பட்டார்கள் என்ற குற்ற சாட்டின் பேரில் இதுவரை 702 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                                    கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருவதாகவும் ,இந்த தாக்குதலில்

                                    படு கொலை செய்ய பட்ட மகளிற்குரிய நீதி நிலை நாட்ட படும் என அவர் சூளுரைத்துள்ளார்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

                                      பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

                                      இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தாயிரம் கிலோவுக்கு அதிக எடையுள்ள

                                      மஞ்சள் இலங்கை கடல் படையினர் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைபின் பொழுது பறி முதல் செய்ய பட்டுள்ளது

                                      மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில்

                                      மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே மேற்படி கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

                                      கடற்படை

                                      கடற்படை
                                      கடற்படை
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்

                                        நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்

                                        நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய அவை தலைவர் திருமதி சர்வேஸ்வரி தேவராஜா அவர்கள் 21 ஆம் திகதி இயற்கை எய்தியுள்ளார்

                                        இவரது இந்த துயர் செய்தி கேட்டு நாம் மிகவும் மன துயர் அடைகின்றோம்,தமிழ் கூறும் நல்லுலகம் இன்று 2010 இல் உருவாக்க பட்டதன் பின்பு அதன் அவை தலைவராக தற்போது

                                        பணியாற்றி கொண்டிருந்த இவர் காலமான செய்தி தமிழீழ மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

                                        புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழ் தேசியத்திற்காகவும் ,தமிழ் மகளிற்காகவும் குரல் கொடுத்து ,தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தில் அங்கத்தவராக இனைத்து

                                        ,அவைத் தலைவராகி பெரும் சாதனைகளை நிகழ்த்தி ,தன் அறப்பணியை நிலைநாட்டி அறம் வெல்ல துணை நின்ற இவரை இழந்து தமிழர் தேசமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேதனையில் துடிக்கிறது

                                        இவரது ஆறா துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்
                                        தகவல் – சமூக போராளி – நாகலிங்கம் -பாலச்சந்திரன் ( பிரான்ஸ் )

                                        நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம்
                                        நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம்