Tag: மெனிங் சந்தை
Posted in இலங்கை செய்திகள்
மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை
Author: நலன் விரும்பி Published Date: 26/04/2021 Leave a Comment on மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை
மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், மரக்கறி
வகைகளின் விலை அதிகரிக்க மாட்டாது என்று பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை எடுத்துச் செல்லும் விவசாயிகள் தமது உற்பத்திகளை மெனிங் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
,தனால், மெனிங் சந்தையில் மரக்கறி வகைகள் அதிகரித்து விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றாளர்கள் பதிவானதை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3
நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






