Tag: இம்ரான்
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஜனாதிபதி
அந்த அரசாங்கத்தை இடைநீக்கம் செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தை ஆளும் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும், பிரதமர்
ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கானை விடுதலை செய்யக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரது கட்சி பல நாட்களாக பேரணிகளை நடத்தி
வருகிறது. மேலும், வரும் நாட்களில் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளது.
கூட்டாட்சி அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்ற ஷெரீப்பின் ஆலோசனையில் ஜனாதிபதி
ஆசிப் அலி சர்தாரி கையெழுத்திட்டதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஷெரீஃபின் அலுவலக அறிக்கையின்படி, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் மாகாண அரசு தோல்வியடைந்துவிட்டது என்று அந்த அறிவுரை கூறியது.
அவசர காலங்களில் மாகாண அரசின் சில அல்லது அனைத்துப் பணிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள அரசியலமைப்பு
அனுமதிக்கிறது, ஆனால் அந்த மாகாணம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதை ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிடவில்லை.
கானின் நெருங்கிய உதவியாளரும், பிடிஐ செய்தித் தொடர்பாளருமான சுல்பிகார் புகாரி, இது ஒரு “கேலிக்கூத்தான முடிவு” என்று கூறி, கைபர்
பக்துன்க்வாவில்தான் நாட்டின் “சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசாங்கம்” உள்ளது என்றும் கூறினார்.
இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை
இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை
by நிருபர் காவலன் - செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி
by நிருபர் காவலன் - சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்
by நிருபர் காவலன் - சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன்
கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்
கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது
செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அவரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த
பாதுகாப்புத் துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ஷ அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கோவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது. கைது
செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர் பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தமது ஆதரவாளர்கள் என்பதற்காக
குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்
பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்
பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக
விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு
எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு
ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான்,
விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்









