Author: நலன் விரும்பி
கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் கொரனோ நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி
ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்
இவ்வாறு தப்பி ஓடிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,
மேலும் இவர் சென்ற பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என நம்ப படுகிறது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் நோயினால் நாள்தோறும் அதிக அளவிலான
மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை
கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை
இன்று இலங்கையில் வெசாக் தினம் என்பதால் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவின் பொது
மன்னிப்பின் கீழ் 240 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் ஈடுபட்ட நபர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
என்பது இங்கே குறிப்பிட தக்கது
தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது
தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்
தோறும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்
இவ்வாறு பரவும் நோயினை கட்டு படுத்த தனிமை படுத்தல் ,கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளன
இவ்வேளை அந்த விதிகளை பின்பற்றாது உலாவிய சுமார் 636 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
பல, விழிப்புணவு பிரச்சாரங்களை அரசு செய்து வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்
செய்து உலாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க நடிகை சமந்தா விருப்பம்
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால்
இத்தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
ரன்பீர் கபூர்
சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் நடிகை சமந்தா, தற்போது இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார்.
அப்போது நடிகை சமந்தாவிடம், பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக
தெரிவித்தார். நடிகை சமந்தா இதுவரை பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க நடிகை சமந்தா விருப்பம்
மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்
மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2,
சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு
திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட
படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது.
மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் என்மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதைவைத்து நிறைய பேர்
என்னை தொடர்ந்து அவதூறு செய்தார்கள். தலையும் வாலும் இல்லாமல் எந்த ஆதாரமும்
இல்லாமல் வந்த கிசுகிசுக்களால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன்.
தாங்க முடியாத அளவு வேதனையும் இருந்தது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கொடுத்தும் அதை நிறுத்தவில்லை.
அதனால் என் மீதான கிசுகிசுகளுக்கு விளக்கம் சொல்வதை நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு எதிரான கிசுகிசுக்கள் குறைந்துள்ளன”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் மகிழ்ச்சியே – சுருதிஹாசன்
அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் மகிழ்ச்சியே – சுருதிஹாசன்
அப்பாவும், அம்மாவும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே – சுருதிஹாசன்
கமல்ஹாசன், சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து
பெற்று பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழப் பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத
இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
அவர்கள் எனக்கும், எனது தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான்
அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கம். அம்மா நலமுடன் இருக்கிறார்.
எங்கள் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்து இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே ரொம்ப நல்லவர்கள்.
ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை. அவர்கள் இருவரும்
சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள்”. இவ்வாறு சுருதிஹாசன் கூறி உள்ளார்
நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.
நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா
ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார்.
ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கையில்
ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது அளித்துள்ள பேட்டியில்
கூறும்போது, “நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட
முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.
அந்த வீடியோவை வைத்து சமூக வலைத்தளத்தில் என்னை கேவலமாக அவதூறும், கேலியும் செய்ததை தாங்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.
ராதிகா ஆப்தே
ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை.
படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர்.
சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன்.
அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’’ என்றார்.
கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ
கொரனோவை வெல்ல இதை பண்ணுங்க – மருத்துவர் – வீடியோ
கொரோனா ஆரம்பத்தில் ஒரு கடும் போக்கான நிர்வாகி போலப் பயப்பீதியைபீதியை உருவாக்கி
இருப்பினும் கால ஓட்டத்தில் கழுதை தேய்ந்து … ஆனது போல நையாண்டிப்பாடல்களும் tiktok
க்களும் என்று அதன் பலவீனமான பக்கங்களும் மக்கள் மனநிலையில் காற்றுப்போன கடுப்போன
கடும் போக்கான நிர்வாகி போலப் பயமின்றி
நாளை நம் சமுகம் கொரோனா வை வெல்லும்…
ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்
ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்
இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
நுவரெலியா ,இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் உள்ளது எனவும்
,இவ்வேளை இங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை
திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை
இலங்கை கிழக்கு மாகாணம் திருமலை பகுதியில் கடலுக்கு சென்ற மூவர் காணாமல்
போயுள்ளனர் .,பெரும் புயல் வீசி கொண்டுள்ள
இவ்வேளையில் இவர்கள் காணாமல் போயுள்ளது
குடும்பத்தினரை கண்ணீரில் உறைய வைத்துள்ளது
கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்ட
கால பகுதியில் இந்த் சம்பவம்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது
வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது
இலங்கை பத்தரமுல்லையில் வீடொன்றுக்குள் புகுந்து சுமார் 30.6 மில்லியன் ரூபாய்களை
கொள்ளையடித்து சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு
கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு
இலங்கையில் கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,243 ஆக
உயர்வடைந்துள்ளது
அரசு தெரிவிக்கும் எண்ணிக்ககையை விட உயிரிழப்பு இரு மடங்கு அதிகம் என மக்கள் மத்தியில்
பேச படுகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை செல்லாதீர்கள் – அமெரிக்கா தனது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தமது நாட்டு
மக்களை செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது
இதே போன்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட
தக்கது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 745 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர் முக கவசம் ,மற்றும் எல்லை தாண்டி பயணித்தமை தொடர்பில் கைது செய்ய பட்டுள்ளனர்
இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்
இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள்
அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸும் zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன
இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது
தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது
பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது
பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாளை எதுவித பயணிகள் போக்குவரத்து ரயிலும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே
திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.
நன்றி சொன்ன காஜல் அகர்வால்… கோபப்பட்ட அனுஷ்கா
நன்றி சொன்ன காஜல் அகர்வால்… கோபப்பட்ட அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் அனுஷ்காவின் ரசிகர்கள், காஜல் அகர்வால் மீது கோபப்பட்டு வருகிறார்கள்.
நன்றி சொன்ன காஜல் அகர்வால்… கோபப்பட்ட அனுஷ்கா ரசிகர்கள்
அனுஷ்கா – காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி
திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல்
ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
காஜல் அகர்வாலின் பதிவு
காஜலின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா.
காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த ட்வீட்டுக்கு காஜல் 7
மாதங்கள் கழித்து இப்போது தான் பதில் அளித்திருக்கிறார். இதை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் காஜல் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்
படம் எதிர்பார்த்ததை விட அளவுக்கதிகமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
ரம்யா கிருஷ்ணன்
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சலார் படத்தில்
பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது ஜோதிகா
தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது
26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்
26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்
முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார்.
முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்… 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்
ரஜினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் முத்து. இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக நடித்திருந்தவர் சரத்பாபு.
முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜெயராம் தானாம். ரஜினிகாந்த்தை கைநீட்டி அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
ரஜினி – ஜெயராம்
முத்து படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்று பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசியுள்ளார் ஜெயராம்.
இலங்கைக்கு விரைவில் பெயர் மற்றம் – சை லங்கா
இலங்கைக்கு விரைவில் பெயர் மற்றம் – சை லங்கா
இலங்கையை குத்தகைக்கு எடுத்துள்ளது சீனா அரசு ,ஆளும் கோமாளிகள் அரசுகளான மகிந்த ,கோட்டா சகோதரர் ஆட்சியில் சீனா இலங்கைக்குள் புகுந்து விளையாடுகிறது
இவர்கள் இலங்கையை சீனாவுக்கு விலைக்கு விற்று விட்டார்கள் ,தற்போது தமிழ் மொழி காணாமல்
போயுள்ளது ,அது தவிர சிங்கள மக்கள் கூட இந்த நிலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிக்டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
அதில் விரைவில் இலங்கை chai lanka என பெயர் மாற்ற படும் என அவர்களே தெரிவித்துள்ளனர்
,அவ்வாறு எனின் விரைவில் சிறிலங்கா காணாமல் போய், சை லங்கா உருவாக போகிறது







