Posted in சினிமா

சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

நடிகை சுருதிஹாசன் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு ஹசாரிகா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

சுருதிஹாசன் திருமணம்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சுருதிஹாசன்


நடிகை சுருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற

தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது

அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின்

புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். சுருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது.

இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது

எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

ஆக, திருமணம் குறித்து சுருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

    Posted in சினிமா

    அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் மகிழ்ச்சியே – சுருதிஹாசன்

    அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் மகிழ்ச்சியே – சுருதிஹாசன்

    அப்பாவும், அம்மாவும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

    அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே – சுருதிஹாசன்
    கமல்ஹாசன், சுருதிஹாசன்


    நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து

    பெற்று பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

    “என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழப் பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத

    இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    அவர்கள் எனக்கும், எனது தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான்

    அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கம். அம்மா நலமுடன் இருக்கிறார்.

    எங்கள் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்து இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே ரொம்ப நல்லவர்கள்.

    ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை. அவர்கள் இருவரும்

    சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள்”. இவ்வாறு சுருதிஹாசன் கூறி உள்ளார்

      Posted in சினிமா

      எனக்கு அது முக்கியம் இல்லை – சுருதிஹாசன்

      எனக்கு அது முக்கியம் இல்லை – சுருதிஹாசன்

      பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன், அது எனக்கு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார்.

      அது எனக்கு முக்கியம் இல்லை – சுருதிஹாசன்
      சுருதி ஹாசன்
      சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      “கொரோனா ஊரடங்கு நேரத்தை வீட்டு வேலை, சமையல், இசை என்று வீணாக்காமல் கழிக்கிறேன். கதை, கவிதையும் எழுதுகிறேன்

      . எனக்கு கனவு பாத்திரம் எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

      நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருக்கும்பட்சத்தில் வில்லியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

      இப்போது மீண்டும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததுள்ளது. எனது கையில் மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன்.

      சுருதி ஹாசன்

      இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. சினிமா, இசை இரண்டிலும் உற்சாகத்தோடு

      ஈடுபடுகிறேன். சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது முக்கியமான விஷயமும் இல்லை. சினிமா தொழிலாளர்கள் வேலை

      இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.”

      இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.