Posted in இலங்கை செய்திகள்

ஜூன் 7 ம் திகதிவரை கட்டு பாடு நீடிப்பு – வாகனங்களில் செல்ல தடை

ஜூன் 7 ம் திகதிவரை கட்டு பாடு நீடிப்பு – வாகனங்களில் செல்ல தடை

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து புதிய கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன .


இதனை அடுத்து விதிக்க பட்ட பயண கட்டுப்பாடு எதிர்வ்ரும் மதம் ஏழாம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது

மேலும் பொருட்கள் கொள்வனவு செய்திட அருகில் உள்ள கடைகளிற்கு மட்டுமே செல்ல முடியும்

,வாகனங்களில் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

    பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

    பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.


    இனிவரும் காலங்களில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புகளை

    பின்வரும் முகவரி ஊடாக மேற்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

    Tamils Coordinating Committee (UK)
    Kingfisher House
    Restmor Way,
    Hackbridge, Surrey
    SM6 7AH

    நன்றி

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்-மனோ கணேசன்

      தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்

      மனோ கணேசன்

      தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு

      விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து பார்த்தால், தமிழ் மொழியை புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது.

      சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பை கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழி சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி,

      திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த “சட்டமா” குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீன தூதரகமா? இலங்கை அரசா?

      எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழி போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக

      நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

      சீன நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்படுவது பற்றி தனது டுவீடர் தளத்தில் பதிவு செய்துள்ள மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

      தமிழ் மொழியை தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர் பலகைகளும் இந்நாட்டில் உள்ளன.

      நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கி கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளை பற்றி அப்போது சீன தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்து கூறினார்.

      இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீன தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்க போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிக

      கவனமாக இருக்க வேண்டும் என கூறினேன். சீன தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

      தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது என சீன தூதரகம் எனக்கு

      அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

      இன்று யோசித்து பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழை புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகிறது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

      கடந்த அரசாங்கத்தில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடி பொறுப்பில் இருந்த போது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன்.

      நாட்டில் எங்காவது பெயர் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி

      கொடுத்தேன். நாட்டில் மொழித்துறைக்கு பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

      பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

      அதேபோல், அரச நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலை படிபடியாக மேம்படுத்தினேன்.

      இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர

      மக்களுக்கு தெரியவில்லை. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் யார் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

      இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்பீக்கள் ஆகியோருக்குதான் வெளிச்சம். இந்த அரசாங்க எம்பீக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் என தெரியுமோ என எனக்கு பெரும் சந்தேகமாக உள்ளது.

      இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்த போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய

      வேண்டி வரும். இந்நாட்டு அரசியலமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர் பலகைகளில் கறுப்பு வண்ண தாரை பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்தவேண்டிவரும்.

        Posted in இலங்கை செய்திகள்

        மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

        மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

        வெலிகம பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மற்றொரு நபரைத் தாக்கும்போது அதனைக் கண்டுங்காணாததுபோல வேடிக்கைப் பார்த்த இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        வெலிகம பிரதேசத்தில் வைத்து பஸ் சாரதி ஒருவர் அங்கிருந்த மற்றொரு நபரை இரவில் கடுமையாகத் தாக்கியிருந்த நிலையில்,

        சம்பவ இடத்திலிருந்த இரு பொலிஸார் அதனை வேடிக்கைப் பார்த்ததோடு, தாக்குதலை தடுக்கத் தவறியமைத் தொடர்பான சிசிடீவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

        இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தில்

        தாக்குதலை மேற்கொண்ட குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

        மேலும் இச்சம்பவம் நடைபெற்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமாக இருந்தால், அதனைத்

        தடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. தாக்குதலுக்குள்ளாகும் நபரைக் காப்பாற்ற வேண்டியதும், தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளியை கைது செய்வதும் பொலிஸாரின் பொறுப்பு என்றார்.

        எனவே தாக்குதலைத் தடுக்கத் தவறியப் பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றில்

        முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.

        சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.

        கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து

        திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.

        அதற்கமைய, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் பொன்சேகா, கட்சியின் பொதுச் செயலாளர்

        ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர்

        ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளனர்.

        Posted in Uncategorized

        தருமபுரம் வைத்தியசாலை காணி அபகரிப்பு

        தருமபுரம் வைத்தியசாலை காணி அபகரிப்பு


        அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, கிளிநொச்சி – தருமபுரம் பிரதேச வைத்தியசாலையின்

        காணியை, தனியார் இருவர் அடாத்தாகப் பிடித்துள்ளதாக, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில், இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

        தருமபுரம் பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினரால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

        வைத்தியசாலையிக்கு அருகில் குடியிருக்கும் குடும்பமொன்று, வைத்தியசாலையின் காணியை உரிமை கோரிய போது,

        நீதிமன்றத்தாலும் பிரதேச செயலகத்தாலும் அரை ஏக்கர் காணி ஏற்கெனவே வழங்கப்பட்டு, பிரச்சினை தீர்க்கப்பட்டது.

        இந்நிலையில், தற்போது அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, காணிகளின் எல்லையை நகர்த்தி,

        வைத்தியசாலையின் காணியை அடாத்தாகப் பிடிப்பதுடன், வைத்தியசாலையின் காணியில் காணப்பட்ட தென்னைகளில்

        இருந்த தேங்காய்களையும் பிடுங்கி எடுப்பதாக, வைத்தியசாலை நிர்வாகத்தினர், தங்களது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

        தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

        கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான

        குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு

        விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

        Posted in இலங்கை செய்திகள்

        கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

        கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

        இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

        கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்றைய (23) தினம் ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி

        வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

        இதற்கமைவாக இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

        நேற்று மேலும் 2950 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2945 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன்

        சம்பந்தப்பட்டவர்கள் என்றும் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

        Posted in Uncategorized

        நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

        நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

        நாட்டை முற்றாக முடக்கி அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

        கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது.

        அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

        வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வெல்லமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

        நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் வெட்டுபவர்கள் ஆவர். நாட்டை முற்றாக அடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

        கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

        இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக

        அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்

          Posted in இலங்கை செய்திகள்

          ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம்

          ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம்

          நாட்டில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா வைரசு

          நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

          சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக

          பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் திருமதி.பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

          ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக

          மாற்றப்படுவதையடுத்து 3 500 கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

          சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா நோய் சிகிச்சை சேவை

          தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதே போன்று இவர்களுக்கு கொரோனா வைரசு தொற்று தடுப்பூசியும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

            நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

            காலி, களுத்துறை, கேகாலை , நுவரரெலியா மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு

            மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

            இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு

            நிறுவனம் தெரிவித்துள்ளது.

              Posted in சினிமா

              திரிஷா எடுத்த அதிரடி முடிவு

              திரிஷா எடுத்த அதிரடி முடிவு

              தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

              தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன.

              இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

              திரிஷா

              இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம்.

              ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல்

              முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.

                Posted in சினிமா

                உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு – உணவளிக்கும் பிக்பாஸ் ஆரவ்

                உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு – உணவளிக்கும் பிக்பாஸ் ஆரவ்

                கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில்

                சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.

                தற்போது ராஜபீமா, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு

                காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

                இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்த ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன.

                இத்தகைய சமயத்தில் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுவோம். நானும்

                என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ள ஆரவ், தெரு நாய்க்கு உணவளிக்கும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

                  Posted in சினிமா

                  ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – இயக்குனர் புகழாரம்

                  ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – இயக்குனர் புகழாரம்

                  மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’

                  படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா

                  கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்துள்ளார்.

                  இந்நிலையில், ‘சண்டக்காரி’ படத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது: “மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள்.

                  தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு

                  இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.

                  உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை.

                  சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு

                  படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்.

                    Posted in சினிமா

                    100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

                    100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

                    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா,

                    எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

                    இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

                    கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை

                    கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

                    ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ

                    பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO

                      லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO

                      லண்டன் கென்சிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்றைய தினம் பாலஸ்தீன சார்பு பல்லாயிரக்கணக்கான

                      ஆர்ப்பாட்டக்காரர்கள்’இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’என்று கோஷமிட்டு இஸ்ரேலிய கொடியை

                      எரித்தார்கள்.இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்

                      கலந்துகொண்டார்கள்.

                      செய்தி பகிர்வு -ஈழம் ரஞ்சன்

                        Posted in Uncategorized

                        காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

                        காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

                        இலங்கை பளை தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் காணாமல் போயிருந்தார்
                        இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

                        இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது கடத்தி படு கொலை செய்யபட்டாரா என்பது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                        இறந்தவர் 47 வயதுடைய பொ – வனயா என அடையாளம் காண பட்டுள்ளார்

                        கோட்டாவின் ஆட்சியில் நாள் தோறும் இவ்வாறான மர்ம மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்

                          மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்

                          இலங்கை கொட்டகால பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 17

                          தொழிலார்கள் மீது மின்னல் தாக்கியது இதில் 17 பேர் பலத்த மின்னல் தாக்குதலுக்கு உள்ளன

                          நிலையில் மருத்துவம மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை

                            சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை

                            இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ

                            நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                            இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்


                            இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த நோயானது பரவியுள்ள நிலையில்

                            ,மகிந்த கோட்டாவுக்கும் தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்

                              கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்

                              இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளன .இதுவரை இந்த தகத்தலில் சிக்கி சுமார் 1,178 பேர் பலியாகியுள்ளனர் ,


                              நோயினை கட்டுப் படுத்த தனிமை படுத்தல் சட்டங்கள் விதிக்க பட்டுள்ள போதும் குறித்த

                              நோயினை கட்டுப்படுத்த முடியாது இலங்கை திணறி வருகிறது ,நோயாளர்களினால் மருத்துவ மனை நிரம்பி வழிகிறது