Posted in சினிமா

விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார்.

விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் – விஜய்


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்

    ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்

    இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    கோவிட் நோயானது மக்களை மிரட்டி கொன்று குவித்து வரும் நிலையில் இவ்வாறான

    விபத்துக்களில் அதிக மக்கள் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்

      ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்

      இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 71 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      இரண்டாம் அலையாக பெருகி வரும்இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்களது

      எண்ணிகையில் இது இரண்டாம் நிலையிற் எட்டி பிடித்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ

        தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ

        இலங்கை தெஹிவளை மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்று கொரனோ தொற்றுக்கு

        உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,தொற்றுக்கு உள்ளான சிங்கம் மீள செயல் நிலைக்கு திரும்பி விடும் என தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது

          சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது

          பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது

          இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

          நேற்றைய (21) தினம் பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக்

          கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

          இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை

          பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முதல் நாடு பூராகவும் விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

          இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்

          கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்

          பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இ​டமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

          உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியம், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

          பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வாதவிவாதத்தில் கலந்து​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு​ சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர்,

          ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது எழுத்தியதற்காக, கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல, பிள்ளைகளுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும் என்றும் கோரிநின்றார்.

          தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்

          மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிணையில் விடுக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

          Posted in Uncategorized

          அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்

          அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ,அந்த மக்களை

          அதில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகள் எடுத்துவர படுகின்றன

          மேற்படி மருந்துகள் கப்பலில்; ஏற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          வயலுக்குள்ள இருந்து ஆணின் சடலம் மீட்பு

          வயலுக்குள்ள இருந்து ஆணின் சடலம் மீட்பு

          அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து இன்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

          சடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் மீட்கப்பட்டுள்ளதுடன் இறைச்சி கடை சார்ந்த கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே உயிரிழந்தவராவார்.

          சடலமாக மீட்கப்பட்டவர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

          இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            காவல்துறை வேட்டை 396 பேர் கைது

            காவல்துறை வேட்டை 396 பேர் கைது

            இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து பலத்த சட்டங்கள் அறிமுமுக படுத்த பட்டுள்ளன

            இதில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


            கைதானவர்கள் முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

              அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

              அவுஸ்ரேலியா நாட்டில் வசித்து வந்த ஜானேஷ் பிரசாத் என்பவர் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்ற பொழுது சீரற்ற கால நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார்

              டீசல் மெக்கானிக்கராக பணி பிரிந்து வந்த அவர் அன்று பணியில் ,இயந்திரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளார்

              தனது கணவர் இன்று சீரற்ற காலநிலையால் வேலைக்கு சென்றதன் விளைவால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்

              15 வருடகால திருமண வாழ்வு இந்த திடீர் கணவர் மரணத்தால் பறிபோயுள்ளது ,கலகலப்பாக

              பேசும் இவர் ,கடின உழைப்பாளி அவ்வாறான ஒருவரை இழந்து தாம் வேதனையில் தவிப்பதாக பாரியார் தெரிவித்துளளார்

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

                இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

                கடன் அட்டைகள் தொடர்பான பண மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                இந்த சந்தேக நபர்களினால் போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி ஒன்லைன் ஊடாக

                பல்வேறு பொருட்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

                ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சுமார் ரூ.7 இலட்சத்து 87 ஆயிரம் நிதி மோசடி இடம்பெற்றமை

                தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  Posted in Uncategorized

                  ஒரே நாளில் 52 பேர் கொரனோவால் மரணம் – இறப்பை மறைக்கும் அரசு

                  ஒரே நாளில் 52 பேர் கொரனோவால் மரணம் – இறப்பை மறைக்கும் அரசு

                  இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயில்சிக்கி பலநூறு மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்


                  இவ்விதம் கடந்த தின ஒரே நாளில் ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                  எனினும் இவர்கள் கூறும் இறப்பை விட இருமடங்கு அதிகம் என மக்கள் மத்தியில் பேச படுகிறது

                    Posted in சினிமா

                    நான் வாங்கிக்கவே மாட்டேன் – வித்யா பாலன்

                    நான் வாங்கிக்கவே மாட்டேன் – வித்யா பாலன்

                    சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

                    ”ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும்

                    பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும்.

                    வித்யா பாலன்

                    நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர். எனக்கு சமைக்க தெரியாது. சிறிய வயதில் இருந்தே எனது அம்மா, ஒழுங்கா சமையலை கற்றுக்கொள் என்று சொல்வார்கள். நான் காதில்

                    வாங்கிக்கவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக்கொள்வேன். இல்லையென்றால்

                    சமையல் செய்ய தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்.’

                    Posted in சினிமா

                    ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்

                    ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்

                    நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ரேஷ்மா தனது மகன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

                    ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்
                    ரேஷ்மா


                    விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட்

                    அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

                    இந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இசையமைத்து தனது தாய் ரேஷ்மாவிற்கு வாழ்த்து கூறுகிறார்.

                    இதற்கு ரேஷ்மா, “அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான்

                    பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்கவேணும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

                    Posted in சினிமா

                    பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்

                    பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்

                    ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

                    பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்
                    பாட்ஷா படத்தில் ரஜினி


                    ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் சின்னத்திரை தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் ‛இன் த நேம் ஆப் காட் என் தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார். பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் முத்துகுமார் எழுதி இயக்கியுள்ளார்.

                    சுரேஷ் கிருஷ்ணா
                    பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா

                    வெப்சீரிஸ் குறித்து அவர் கூறுகையில், ‛‛காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள

                    , சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வரமுடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்,” என்றார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

                    சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

                    இலங்கையில் விதிக்க பட்ட தடைகள் சற்று தளர்த்த பட்டுள்ளன ,இவ்வேளை மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது

                    விதிகளை கடைபிடித்து மதுபானத்தை கொள்வனவு செய்திட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                    மேற்படி செய்தியால் குடி மகன்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்

                      Posted in Uncategorized

                      நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்

                      நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்

                      நுவரெலியா பகுதியில் நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்ற நிலையில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                      விசேட இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

                        உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

                        =மழை நிலைமை:

                        கொழும்பிலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையானகடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        காற்று :
                        நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து

                        ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

                        அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                        கடல் நிலை:
                        காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்

                        காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                          Posted in Uncategorized

                          இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்

                          இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்

                          தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு;அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.

                          இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும்

                          பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

                          இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
                          வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                          மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
                          மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
                          கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.

                          பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது

                          எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
                          இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.

                          சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.

                          இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.

                          சிகை அழங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

                          உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            தனிமை படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

                            தனிமை படுத்தல்விதிகளை மீறிய 844 பேர் கைது

                            இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 844 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            இவர்கள் யாவரும் முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர்


                            நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவதை காணமுடிகிறது