Author: நலன் விரும்பி
தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்
தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என லிந்துலை பிரதேச
பொது வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ அதிகாரியின் சங்கத்தின் நுவரெலியா கிளையின் தலைவருமான ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
நாளைத் தளர்த்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று (20) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்ககளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த தொற்று பரவலினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஆகவே நாளை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் வழமை போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தால் தொற்று பரவலினை கட்டுப்படுத்த முடியாது
போய்விடும். இதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும். ஆகவே அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்கு வருகை தருவதாக இருந்தால் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வர வேண்டும்.
அதுவும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும். இதன்போது தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகருக்கோ, பயணமோ செல்லக்கூடாது. ஆபத்து
இன்னமும் எம்மை விட்டு நீங்கவில்லை. ஆகவே நீங்கள் வெளியில் போய் வந்த பின் நன்றாக குளித்து விட்டு உரிய சுகாதார பொறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இவர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த கடல் ஆமைகள் டொல்பின் நடந்தது என்ன
உயிரிழந்த கடல் ஆமைகள் டொல்பின் நடந்தது என்ன
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த இரண்டு கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பினும் நேற்று (19) கரையொதிங்கியுள்ள.
கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதங்கிய டொல்பின்
கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்றுவட்ட
உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்
மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்
நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பலர் கண்டி மாத்தளை மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜத் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 12
பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ட்ரோன் கமராக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 143 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்
மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா
மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா
நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா
மோகன்லால், மீனா
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக
அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது
அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை
மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் டாப்சி, நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
டாப்சி
இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து
வருகிறது. அவர்கள் இருவருக்கும் போட்டியாக, தற்போது நடிகை டாப்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார்.
இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம். அவர் நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து
அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது.
டாப்சி
இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரேணி ஸ்குருவாலா
தயாரித்துள்ளார். இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ்,
தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்
திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால்
வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா
பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச்
சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்
வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்
பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில்
முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பகுதியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
கொழும்புக்கு ஒரு சட்டம், கிழக்குக்கு ஒரு சட்டமா? என்றும் வினவியுள்ளனர்.
சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்
சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்
பிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம்
மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிறக்கும் போதே அங்கவீனமுற்றிருந்த அந்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் அன்டிஜன் பரிசோதனையில், அச்சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் ரேபிட் அன்டிஜன் பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டன. அவ்விருவருக்கும் எவ்விதமான அறிகுறிகளும் காண்பிக்கவில்லை என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிசாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இதுதொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது. வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை
அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..
காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்
காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்
பொலிசாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உய
ர் பொவிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடக
பேச்சாளர், வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளன. 28
மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் போலிசார் கைப்பற்றி
உள்ளார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்
விளையாடி அசத்திய யோகி பாபு
விளையாடி அசத்திய யோகி பாபு
காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு
யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட்
விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்
இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா.
தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில்
கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.
விசித்ரா
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ராவின் புகைப்படம்
ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி
உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி
உலகில் சீன சக்தி வாய்ந்த பொருளாதார பலமிக்க நாடக மாற்றம் பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்
இவரது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகள் முடுக்கி விட பட்டன
இவ்வாறான நிலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது
அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்
அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்
யாழ். மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை .எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ,சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர்,முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன.ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.
சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 1,754 குடும்பங்களைச் சேர்ந்த 5,613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,668 ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் 63 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை நல்லூர் அரசடி பகுதி தனிமைபடுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை
மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளது
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பொதுவில் முதல் மன்னார் வரையான பகுதிகள் பாதிக்க படும் வலையங்களாக அறிவிக்க பட்டுள்ளது
போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது
போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது
இலங்கை களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஐம்பது கிலோ போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளார்
இவர் நீண்ட காலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
இலங்கையில்; இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது கண்காணிப்பு பணி தீவிரமாக்க பட்டுள்ளது
இவ்வேளை நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் எந்த குற்ற சாட்டில் கடந்த தினம்
மட்டும் 1,281 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு வண. தேரர்கள் இதை போதிக்க தேவையில்லை.
1999ம் ஆண்டில் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது கடும் சொந்த உழைப்பினால் நான் தேடிப்பெற்ற பெறுமதியான சொத்துக்களையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன்.
நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு வழிக்காட்ட பெரிய மதத்தலைவர் என்று எவருமில்லை.
ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் பொது மக்களுக்காக அர்ப்பணியுங்கள். ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.
கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பணம் இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை,” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவா-இல்லை”.
தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும். இந்நாடு உருப்படும். நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை போற்றி வணங்குவார்கள்.







