Posted in இலங்கை செய்திகள்

காதலர்கள் சடலம் காட்டுக்குள் இருந்து மீட்பு

காதலர்கள் சடலம் காட்டுக்குள் இருந்து மீட்பு

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக கட்டப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று (17) முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

26 வயதுடைய இளைஞன் ஒருவரும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் வீட்டிற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பழக்கமான குறித்த யுவதியை காண திக்வெல்ல பிரதேசத்தில் இருந்து குறித்த இளைஞன் வந்துள்ளான்.

பின்னர் யுவதியின் வீட்டிற்கு அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை யுவதியின் வீட்டார் கண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இருவரும் வீட்டிற்கு அருகில் சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கருவாப்பட்டை தோட்டத்தை நோக்கி ஓடியுள்ள நிலையில் இவ்வாறு மின்சார வேலியில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய குற்றவியல் பிரிவு மற்றும் கொலொன்ன பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை

    ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை

    அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஓட்டோக்களுக்கும மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பான பணிப்புரை, 2017இல் வெளியிடப்பட்டது. ஆனால் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை.

    இதையடுத்து, இந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க போக்குவரத்து அமைச்சுன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மீற்றர் பொருத்துவதற்கு, ஜனவரி முதல் ஜூன் வரை சலுகை காலம் வழங்க உள்ளதாகவும், ஜூன் 01க்கு பிறகு மீற்றர் இல்லாமல் இயங்கும் ஓட்டோக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

      Posted in Uncategorized

      முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

      முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

      முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

      நேற்று (16) மாலை, தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றை துப்புரவு செய்யும் போது, வெடிபொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு

      விரைந்த விசேட அதிரடிப்படையினர், கிணற்றை சுத்தம் செய்பவர்களை தொடர்ச்சியாக துப்புரவு செய்யுமாறு கூறியுள்ளார்கள்.

      கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

      இதன் போது, கிணற்றில் இருந்து 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

      இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

        Posted in Uncategorized

        பருத்தித்துறையை வந்தடைந்தத பேரணி

        பருத்தித்துறையை வந்தடைந்தத பேரணி

        மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி, முல்லைத்தீவில், இன்று காலை ஆரம்பித்த படகு பேரணி, பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

        முல்லைத்தீவு – கள்ளப்பாடு கடற்கரையில், இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் படகு பேரணி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.

        நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் பேரணியாக பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தனர்.

        இதன் பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

          Posted in Uncategorized

          பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன்

          பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன்

          தன்னை கடித்த நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில், இன்று (17) இடம்பெற்றுள்ளது.

          இந்நிலையில், குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

          குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்த போது, பாம்பு கடிக்கு இலக்கானார்.

          இதையடுத்து, குறித்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்துக் கொண்டு, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

          இதன்போதே, சிறுவனை கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது.

            Posted in Uncategorized

            இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

            இலங்கையில் சூ சுவாமி – ஆப்பு வைத்தார்

            தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஒக்டோபர்,13 மாலை ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.

            படைத்தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த பாதுகாப்பு செயலமர்வில் “21 ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு” தொடர்பாக கலாநிதி. சுவாமி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

            21ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பானது குறிக்கோள்கள், முன்னுரிமைகள், மூலோபாயம் மற்றும் வள அணிதிரட்டல் எனும் நான்கு பரிமாணங்களிலும் மாற்றமடைந்துள்ள விதம் குறித்து கலாநிதி.சுவாமி இதன்போது எடுத்துரைத்தார். இந்த மாற்றங்கள் முற்றிலும் ட்ரோன்கள்,

            ரோபோக்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் கணினிகள் போன்ற இலத்திரனியல் மற்றும் சைபர் தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகளால் உருவானவை என்று அவர் குறிப்பிட்டார்.

            மேலும் இந்த யுகத்தில், போர் என்பது வெறுமெனே ஆயுத பயன்பாடு மற்றும் படைப்பலத்தை சார்ந்து இருக்கப்போவதில்லை, மாறாக இணைய வளங்களை பயன்படுத்தல் (ஒன்லைன் டொமைன்) ட்ரோன் கருவிகளின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரயோகம் ஆகியவற்றில் சார்ந்திருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

            பாதுகாப்பு அமைச்சின் நந்தமித்ர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த பாதுகாப்பு செயலமர்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு ) தலைமையில் இடம்பெற்றது.

            இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட “தி ரோட் டு நந்திக்கடால்”, “கோட்டாபய” ஆகிய இரண்டு புத்தகங்கள் நினைவுப் பரிசாக கலாநிதி. சுவாமியிடம் வழங்கப்பட்டது.

            இந்த அமர்வு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹான் குணரத்ன தொகுத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ர்.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையின் மூன்றாவது தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              இலங்கையின் மூன்றாவது தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              தீகவாபி ரஜமஹா விஹாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள பக்தர்களின் ஓய்வு மண்டப அறைக்கான அடிக்கல் ஒக்டோபர், 15 சுபவேளையில் பௌத்த சமய ஆராதணைகளின் பின்னர் பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க

              அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) நட்டப்பட்டது.

              உத்தேச திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவாறு மரங்களால் சூழப்பட்ட இரம்யமான சூழலைக் கொண்ட பக்தர்களுக்கான ஓய்வு மண்டபம் (விஷ்ராம ஷாலா) இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துவம் மற்றும் ஆளணியைக் கொண்டு 2022ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

              இந்த விஜயத்தின்போது, தூபி வளாகத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, தாமரை பொய்கை, புனித தந்ததாது மனை, மர நடுகை மற்றும் நிலப்பயன்பாடு என்பன தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் கேட்டறிந்து கொண்டார்.

              துரித கதியில் இடம்பெற்றுவரும் நிர்மாணப்பணிகள் காரணமாக தூபி கட்டுமானம் இன்று வரை மூன்றாவது அடித்தள சுற்றுவட்டத்தை அண்மித்து சுமார் 17 அடி உயரத்தை எட்டியுள்ளது


              இதன்போது ஊடகங்களுக்கு பதிலளித்த ஜெனரல் குணரத்ன, வரலாற்று சிறப்புமிக்க இந்த தூபியின் முன்னைய மகிமை இன்னும் 18 மாதங்களுக்குள் மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்த

              அதேவேளை, பண்டைய அரசர்களால் ஸ்தூபியை புதுப்பிக்க அவ்வப்போது தொடங்கப்பட்ட பல முயற்சிகளை நினைவுகூர்ந்தார். இந்த தூபி வழக்கத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

              ” வரலாற்று சிறப்பு மிக்க இந்த தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவு பூர்த்தியானத்தின் பின்னர் , 275 அடி உயரம் கொண்ட நாட்டின் மூன்றாவது பெரிய தூபியாக காட்சியளிக்கும் ” என்று அவர் மேலும் கூறினார்.

              அத்தோடு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘சந்தஹிரு சேய’ தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட பின்னர் இதற்காக பயன்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் உபகரணங்கள் என்பன தீகவாபி தூபியின் புனர்நிர்மாணப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

              தூபியின் நிர்மாணப்பணிகளை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், கற்களைக்கொண்டமைந்த நடைபாதை வளாகத்தை (சலபதல மலுவ) நிறைவு செய்வதற்கான திட்டங்களும் முன்னெடுக்கபடவுள்ளன என்றும் ஜெனரல் குணரத்ன கூறினார்.

              தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள், இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புரவலர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் தீகவாபிய அருண நிதியத்தின் முன்னெடுக்கப்படவுள்ளதால் இதற்காக அரச நிதி எதுவும் பயன்படுத்தப் படமாட்டாது.

              தீகவாபி ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி மகாஓய சோபித தேரரின் வழிகாட்டுதல்களுடன் தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

              ‘தீகவாபி தூபி’ புனரமைப்பு திட்டத்திற்கு, நாட்டின் பிரதமரும், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் 2020 நவம்பர் 11ம் திகதி மங்களகரமான முறையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

              இந்நிகழ்வில், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி மகாஓய சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்கள், புத்த சாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர் பேராசிரியர் கபில குணவர்தன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீஎம்எல் பண்டாரநாயக்க, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லமா ஹேவகே (ஓய்வு), தொல்பொருள் திணைக்களத்தில் தொல்பொருளியல் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார பிராந்திய முப்படை அதிகாரிகள், கட்டிடக் கலைஞர்கள், தொல்பொருளியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டன

              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது

              துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது

              திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

              குறித்த நபரிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              இதனையடுத்து குறித்த துப்பாக்கிகளை தயாரிக்கும் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் இரண்டு, துப்பாக்கி தயாரிக்கும் இயந்திரங்கள் இரண்டு மற்றும் மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                Posted in இலங்கை செய்திகள்

                இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்

                இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்

                எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை

                கடனாகப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறிப்பாக பெற்றோல் மற்றும்

                டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி கூறினார்.

                  Posted in சினிமா

                  கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்

                  கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்

                  கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.

                  கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்
                  இருதய நோய்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  கொரோனா நோய் (கோவிட் 19) கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன உறுப்பாகும்.

                  கொரோனா கிருமியானது நம் உடலில் உள்ள ஆஞ்சியோ டென்சின், கன்வெற்டிங் என்சைம் என்று அழைக்கப்படும் ரிசிப்டர் மூலம் நம் உடல் உறுப்புகளுக்குள் செல்கிறது. நம் உடலில் உள்ள பல உறுப்புகளை போல இருதயத்திலும் இந்த ஆஞ்சியோ டென்சின் கன்வெற்டிங் என்சைம் ஏற்பி அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கோவிட் 19 கிருமியினால் எளிதாக நமது இருதய தசையை தாக்க முடிகிறது.

                  நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டதை போல இருதயத்தில் உள்ள மூன்றடுக்கு தசையினுள் ஒன்றின் பெயர் தான் மயோகார்டியம். கொரோனா வைரஸ் கிருமியானது இருதய தசையை பாதிக்கிறது. இந்த மயோகார்டைடில் என்று அழைக்கப்படும் நோயை இருதயத்திற்கென்றே உரிய ரத்த பரிசோதனை மூலம் நம்மால் அறிய முடிகிறது.

                  கொரோனா நோயினால் வரும் இருதய தசை வீக்கம் மற்றும் தசை செயல் இழப்பு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.

                  இருதய தசையில் ஏற்படும் பாதிப்பினால் இருதய துடிப்பின் அளவு குறையும். அவ்வாறு குறையும் போது இருதயத்தால் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்தத்தை கொடுக்க இயலாத நிலை ஏற்படும். இதனால் நுரையீரலில் நீர் புகுந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் ரத்த கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வரும்.

                  எனவே கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதயம் மற்றும் ரத்த பக்க விளைவுகளில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.

                  இவ்வாறு கால்வின் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கால்வின் டேவிட்சிங் கூறினார்.

                    Posted in சினிமா

                    தனுஷ் படத்தில் பிகில் பட நடிகை

                    தனுஷ் படத்தில் பிகில் பட நடிகை

                    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

                    தனுஷ் படத்தில் இணைந்த பிகில் பட நடிகை
                    தனுஷ்
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.

                    தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

                    ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

                    நானே வருவேன்
                    தனுஷ் – செல்வராகவன் – இந்துஜா

                    இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      Posted in சினிமா

                      தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு

                      தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு

                      தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

                      தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
                      பிரகாஷ் ராஜ்


                      தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை

                      வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி உள்ளார். தனது தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

                      இதுபோல் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் தங்கள்

                      பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு போட்டியாக புதிய நடிகர் சங்கத்தை தொடங்கும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                      பிரகாஷ் ராஜ்

                      இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “என் பக்கம் நின்ற அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களை கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம்” என்றார்.

                      தேர்தலில் மோகன்பாபு அடியாட்களுடன் உறுப்பினர்களை அடித்து அச்சுறுத்தினார். எனவே தேர்தல் காணொலி பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு பிரகாஷ்ராஜ் கடிதம் எழுதி உள்ளார்.

                        Posted in சினிமா

                        பிஸியான நடிகை – கலக்கிறாங்க

                        பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.சாக்‌ஷி அகர்வால்தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம்

                        வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
                        சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சாக்‌ஷியுடன், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

                        சாக்ஷி அகர்வால்

                        சாக்ஷி அகர்வால் – சுந்தர் சி
                        இப்படம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, ‘அரண்மனை 3 படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இயக்குனர் சுந்தர்.சி திறமையானவர். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது.

                        ஒரு படத்தை இயக்கி நடிப்பது மிகவும் கடினமான விஷயம். அதை சுந்தர்.சி மிகவும் திறமையாக கையாண்டார். மேலும் படத்தில் நிறைய நடிகர்கள். அவர்களை ஒருங்கிணைத்து நன்றாக வேலை

                        வாங்கினார். இவருடைய படங்களில் நடிகைகளை அழகாக காண்பிப்பார். அதுபோல் என்னை மிகவும் அழகாக காண்பித்து இருக்கிறார். சரியாக திட்டமிட்டு படத்தை அழகாக

                        முடித்திருக்கிறார். தற்போது தியேட்டரில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்’ என்றார்.

                        Posted in Uncategorized

                        மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

                        மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி

                        நாளை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

                        ஆரம்ப நேரம் :- காலை 7.00 மணி
                        ஆரம்ப இடம் :- முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை.
                        நிறைவு இடம் :- பருத்தித்துறை கடற்கரை

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்

                        இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்

                        இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ரசியாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல் மற்றும் ,ஒரு யுத்த கப்பல் என்பன வந்தடைந்துள்ளன

                        நாடுகளுக்கு இடையிலான கடற்படை பாதுகாப்பு மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபடவே மேற்படி கப்பல்கள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

                          சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

                          இலங்கையில் சிங்கள காவல்துறை சிப்பாய்கள் இருவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக

                          வெட்டியுள்ளார் ,இவரது இந்த வெட்டு தாக்குதலில் சிக்கி படுக்கையமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          மேற்படி குற்ற செயலை புரிந்த அப்பர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

                            120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

                            எத்தனையோ சாதனையாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தன் சாதனையைத் தானே முறித்து புதிய சாதனை படைக்க விரும்பும் பெண் சுசேதா சதிஷ். பதினோராம் வகுப்பு படிக்கும் பதினாறே வயது நிரம்பிய சிறு பெண் சாதனைப் பட்டியலோ மிகப்பெரியது. இதுவரை கின்னஸ் உலக சாதனை உட்பட மூன்று உலக சாதனைகள் படைத்தவர். சென்ற ஆண்டில் உலகின் சிறந்த சிறுமி (குளோபல் சைல்ட் ப்ராடிஜி அவார்டு) என்ற விருது பெற்றிருக்கிறார்.

                            படிப்பு, இசை இரண்டிலும் தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் சுசேதா நடனமும் கற்றவர். தன் இசையால் உலகை நிறைத்துவிடத் துடிக்கும் வேகமும் விவேகமும் நிறைந்த சிறுமி. இறைவன் கருணையும், பெற்றோரின் ஒத்துழைப்பும் முயற்சியும் சுசேதாவின் கடின உழைப்போடு சேரும் பொழுது உலகம் வியக்கும் அற்புதங்கள் தொடர்கின்றன. தேசபக்தியோடு இந்தியாவை நேசிக்கும் துபாயில் வசிக்கும் பெண். தன் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

                            என் தாத்தா சேலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார்கள். அப்பாவும் அங்கே படித்தவர்கள் தான். நான் பிறந்தது இந்தியாவில். வளர்ந்தது படிப்பது எல்லாம் துபாயில். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு இந்தியா வந்துவிடுவோம். இந்தியாவில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விட இந்தியா வர நான் விரும்புவதற்கு முக்கியக் காரணம் என் வழிகாட்டியாக ஆசானாக நினைக்கும் பின்னணி இசைப் பாடகி பி சுசிலா அம்மாவைப் பார்ப்பதற்குத் தான். சென்னை வந்தவுடன் அவர்களைத் தான் பார்ப்போம்.

                            இந்தியாவிலும் பாடியிருக்கிறேன். இந்தியாவுக்காகவும் பாடியிருக்கிறேன். இந்த கரோனா நோய்த்தொற்று காலத்தில் எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதில் வருத்தம் தான். என்றாலும், இந்த நேரத்தை புதிய சாதனை படைப்பதற்கான பயிற்சி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி.

                            மூன்று வயதில் எனக்குப் பாடுவதைக் கேட்டவுடன் திரும்பப் பாடவருகிறது என்று என் பெற்றோர் கர்நாடக இசை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். சில வருடங்களில் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வதற்கும் ஆரம்பித்தேன். ஹிந்துஸ்தானியில் என் குரு சுஜாதா ஹரிஷ்குமார் மற்றும் ஹரிப்ரசாத் ஆவர். தற்பொழுது, ஆஷா மேனன் அவர்களிடம் கர்நாடக இசை கற்றுக் கொண்டும் பயிற்சி பெற்றும் வருகிறேன்.

                            மூன்று வயதில் முதன்முதலில் மேடையேறிப் பாடினேன். ஒரு மெல்லிசைக் கச்சேரி. அந்த வயதில் பயமோ பாடியதன் முக்கியத்துவமோ எதுவும் பெரிதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தது பாடினேன் அவ்வளவு தான். ஆனால், மறக்க முடியாத அனுபவம் முதன்முதலில் பி சுசீலா அம்மா பாடிய மேடையில் அவர்களோடு அவர்களுடன் பாடினேன் என்பது. அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்போது எனக்கு ஒன்பது வயது. துபாயில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சிக்கு சுசிலா அம்மா வந்திருந்தார்கள். அன்றைக்குத்தான் அவர்களை நான் பார்த்தேன். அதே மேடையில் பாடுவதற்கு எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்.

                            இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சாதனை முயற்சி ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆண்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் நூற்றி இருபது மொழிகளில் தொடர்ந்து பாடியதற்காக இந்த கின்னஸ் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே முப்பது இந்திய மொழிகள், தொண்ணூறு வெளிநாட்டு மொழிகள். இதற்கு ஏழு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆயிற்று. இந்தியத் துணைதூதரகத்தில் நடைபெற்ற என்னுடைய இந்த முயற்சியை இந்தியப் பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் இருவருக்கும் சமர்பித்தேன்.

                            பாடுவதற்கு நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். எந்த மொழியானாலும் அதிலே உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை ஆய்வு செய்வதற்கென்று தனி குழுவை நியமித்திருப்பார்கள். அவர்கள் நாம் அந்த மொழியில் சரியாகப் பாடியிருக்கிறோம் என்று நிபுணர்களைக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே நம்முடைய சாதனையை அங்கீகரிப்பார்கள். அப்படியான அங்கீகாரம் கிடைத்த நேரத்தில் என்னுடைய கடின உழைப்புக்கு வெகுமதி கிடைத்துவிட்டதாக நாம் சாதித்திருக்கிறோம் என்பதாக ஆனந்தம் ஏற்பட்டது.

                            2018-ஆம் வருடம் நூற்றி இரண்டு மொழிகளில் ஆறு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் பாடினேன். ஒரு நிகழ்ச்சியில் அதிக மொழிகளில் பாடியதற்காக மியாமியில் இயங்கும் அமெரிக்க அமைப்பு உலக சாதனை என்று அங்கீகாரம் தந்தது. அதோடு அதிக நேரம் பாடிய சிறுமி என்றும் மற்றொரு அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதனால் எனக்கு இரண்டு உலக சாதனை செய்ததற்கான மதிப்பு வழங்கப்பட்டது.

                            132 மொழிகளில் பாடுவதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எல்லா மொழிகளையும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. பாடுவதற்கென்று ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் இசையை நாம் சரியாக உள்வாங்கி கொண்டால் போதும். நம்முடைய நாட்டில் பல மொழிகள் பேசுகிறோம் என்பதால் இதைப் புரிந்து கொள்வது சுலபம். மலையாளம் பேசுவதற்கும் தெலுங்கு பேசுவதற்கும் தமிழ் பேசுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறோமே. ஒவ்வொரு மொழிக்கும் உள்ள ரிதம் அந்த மொழி பேசும் பொழுது பிடிபடும் அது போலத் தான் பாட்டிலும். அதோடு இது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று என் பெற்றோர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது உண்மையும் கூட.

                            தொடர்ந்து இசை சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அவற்றுள் மூன்று முக்கியமானவை. இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பின் பொழுது தேசிய ஒற்றுமைக்கான சின்னம் என்று பிரதமர் அறிவித்த பொழுது ஒற்றுமைக்கான கீதம் என்று இருபத்தியொன்பது இந்திய மொழிகளில் பாடி அதனை பிரதமருக்கு அனுப்பினேன். சென்ற ஆண்டில் கரோனா விழிப்புணர்வுப் பாடல் இருபத்திரண்டு இந்தியா மொழிகளில் பாடி வெளியிட்டோம். இந்த ஆண்டில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு பாடல் நான்கு மொழிகளில் வெளியிட்டோம். இவையெல்லாம் இந்த கொள்ளை நோய் காலத்தில் எனக்கு மிகுந்த மனநிறைவு தந்த பணிகள்

                            ஆம். அப்பொழுது எனக்கு எட்டு வயது. கலாம் ஐயா துபாய்க்கு ஒரு புத்தக கண்காட்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இருக்காது? எங்களுக்கும் அந்த ஆவல் இருந்தது. அவர்களைப் பார்ப்பதற்காக இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என்ன காரணத்தாலோ ஐயா வருவது தாமதமாகி விட்டது. மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது.

                            பார்ப்பதற்காக விண்ணப்பம் செய்து காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு நேரமின்மையால் கிடைக்கவில்லை. எனக்கும் தான். ஐயா புறப்படும்பொழுது என்னுடைய அப்பா கலாம் ஐயா வணக்கம் என்று தமிழில் உரக்கச் சொன்னார்கள். ஐயா புயல் வேகத்தில் திரும்பிப் பார்த்து எங்களை அழைத்தார்கள். அப்பா என் குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொன்னவுடன் ஐயா என்னை அருகில் அழைத்துப் பேசியதோடு என் தலையில் கை வைத்து சில நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி நின்றுவிட்டார்கள். மனதில் இன்னதென்று சொல்ல இயலாத மறக்க முடியாத அனுபவமாக அந்த நிகழ்வு இருந்தது. கலாம் அவர்களின் ஆசி எனக்குக் கிடைத்தது வரம் என்றே கருதுகிறேன்.

                            இன்னும் நிறைய மொழிகளில் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் சென்று பாட வேண்டும். இசையின் நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கின்னஸ் சாதனையை நானே முறியடித்து உலகின் அத்தனை மொழிகளிலும் பாட வேண்டும்

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி

                              கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி

                              மீகஹவத்த தெல்கொட பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

                              குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றும் லொறி ஒன்றிலும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              இதில், முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

                              உயிரிழந்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

                              விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                Posted in Uncategorized

                                கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்

                                கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்

                                இலங்கையில் கொட்டவிண்நிழல் ஆட்சியில் பல இனவாத காட்சிகள் உருவாக்க பட்டு அவை தமிழருக்கு எதிராக திசை திருப்ப பட்டுள்ளன

                                அந்த காட்சிகள் யாவும் இவர்கள் வழங்கும் நிதி உதவியில் பயணிக்கின்றன

                                அவ்வாறான இனவெறி கொண்ட அத்துரெலிய ரதன தேரரை அந்த கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது

                                  Posted in Uncategorized

                                  பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

                                  பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

                                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிரத்தை அடுத்து தற்போது மேலும் பயண தடை நீடிக்க பட்டுள்ளது

                                  இந்த தடையானது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது ,கோட்டபாயவுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்ட தக்கது