Tag: பிரகாஷ் ராஜ்
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்
பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ் ராஜ், தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.
தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
பிரகாஷ் ராஜ்
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்
திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தேர்தலில் தோல்வி… பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
பிரகாஷ் ராஜ்
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை
வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி உள்ளார். தனது தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதுபோல் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் தங்கள்
பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு போட்டியாக புதிய நடிகர் சங்கத்தை தொடங்கும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரகாஷ் ராஜ்
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “என் பக்கம் நின்ற அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களை கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம்” என்றார்.
தேர்தலில் மோகன்பாபு அடியாட்களுடன் உறுப்பினர்களை அடித்து அச்சுறுத்தினார். எனவே தேர்தல் காணொலி பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு பிரகாஷ்ராஜ் கடிதம் எழுதி உள்ளார்.
பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்
பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது.
பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்
பிரகாஷ் ராஜ்
தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர்
இந்நிலையில், தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஹேமா, ஜீவிதா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர்.
இதனால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது. அதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடி போட்டி நடக்க இருக்கிறது.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை தற்போது அறிவித்து உள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத் தலைவராகவும், ஹேமா
மற்றும் பேனர்ஜி துணைத் தலைவர்களாகவும், ஜீவிதா பொதுச் செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.






