Posted in சினிமா

நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
அஜித்


நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து

பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப்

ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின்

அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு

நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்

    Posted in சினிமா

    திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

    திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

    திருமணம் குறித்து மனம்திறந்த ‘பீஸ்ட்’ பட நாயகி
    பூஜா ஹெக்டே


    தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

    பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

    தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்

    இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது: “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம்

    செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல.

    வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால்

    அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்” என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

      இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

      இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற

      வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்

      அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன

      இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

      மீட்க பட்டுள்ளது

      இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

        இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

        நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி

        இரண்டு பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்


        மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

          இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

          இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி

          வழங்கியுள்ளது
          நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          ,இவ்வேளை
          இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            இராணுவ முகாமை வீடியோ பிடித்த இருவர் கைது

            இராணுவ முகாமை வீடியோ பிடித்த இருவர் கைது

            விட்ட்டோரியாஇராணுவ முகாமை டிரோன் கமரா மூலம் வீடியோ பிடித்த இருவர் கைது செய்ய

            பட்டுள்ளனர்


            அந்த முகாம் அருகில் உள்ள கொட்டல் ஒன்றில் தங்கி இருந்து இந்த நாசகார வேளையில் ஈடுபட்டுள்ளனர்

            குறித்த இருவரும் கைது செய்ய பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,டிரோன்

            உடைந்து இராணுவ முகாமின் கூரை மீது வீழ்ந்துள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              போராட்டத்த்தில் மரணமான டீச்சர்

              கடந்த 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டத்தின்போது

              சுகயீனமுற்று மரணமடைந்த தெனியாய மத்திய கல்லூரியின் ஆசிரியைக்கு, மட்டக்களப்பில்

              நேற்று (13) மாலை 6.30 மணியளவில், இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

              மரணமடைந்த ஆசிரியை ஏ. டி. வருணிகா அசங்காவின் உருவப்படத்துக்கு மலர்வைத்து, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

              இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா

              ருபேஷன் தலைமையில், மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.

              தனது உடல் சுகயீனத்தையும் பொருட்படுத்தாது, அனைத்து ஆசிரியர் அதிபர்களுக்காகவும்

              போராடிய வேளையில் மரணித்த ஆசிரியையின் ஆத்மா சாந்தி வேண்டி இரண்டு நிமிட மெளன

              அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த கவலையையும் சங்கத்தின் சார்பாக இதன்போது தெரிவித்தனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

                கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

                மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை

                சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன.

                குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது.

                குறித்த யுவதியும், இளைஞன் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.

                இந்த நிலையில் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து

                கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்

                பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த

                கடலில் மிதந்த மனித சடலம்

                நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

                எனினும் எவரும் மீட்கப்படவில்லை.

                சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

                இந்த நிலையில் நேற்று (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக

                கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

                எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.

                  Posted in Uncategorized

                  மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்

                  மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்

                  பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கிரண், தனது மகனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                  மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்
                  ராஜ்கிரண்


                  கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படம் என் ராசாவின் மனசிலே. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்

                  படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகர் ராஜ்கிரண். இப்படத்தில் இவர் தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது பல காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

                  தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

                  ராஜ்கிரண்

                  இதற்கிடையில் நடிகர் ராஜ்கிரண், லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்.

                  மேலும், 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில்

                  கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

                    Posted in சினிமா

                    குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா

                    குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா

                    பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தையை பிரிந்து தவிப்பதாக பதிவு செய்து இருக்கிறார்.

                    குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா
                    சமந்தா


                    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆன்மீக சுற்றுப்பயணம்

                    செய்து வந்த சமந்தா, சமீபத்தில் வீடு திரும்பினார். சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த அவர், மழையில் சிக்கிக்கொண்டார்.

                    இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள

                    சமந்தா, அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஐதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படம்.

                    சமந்தா

                    சோகமாக இருக்கும் ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் “நான் ஒருநாள் இல்லை… என் சோகமான முதல் குழந்தை” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாஷ் தனது சகோதரி சாஷாவை விட மிகவும்

                    சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் தங்கள் அம்மாவை

                    சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது’ என்று பதிவு செய்து இருக்கிறார்

                      Posted in சினிமா

                      நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா

                      நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா

                      பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகைக்கு உதவி இருக்கிறார்.

                      நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா
                      சமந்தா


                      தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கும்

                      செலவிட்டு வருகிறார். ஏழை சிறுமிகளுக்கு கல்வி கற்கவும் உதவி வருகிறார். சமீபத்தில் நடிகர்

                      பவன் கல்யாண் கூட சமந்தாவிடம் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டினார்.

                      சமந்தாவிடம் உதவி பெற்றவர்களில் ஒரு நடிகையும் இருக்கிறார். அந்த நடிகையின் பெயர் தேஜஸ்வி மாதிவாடா. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்

                      பங்கேற்றும் பிரபலமானார். தேஜஸ்வி மாதிவாடா கூறும்போது, “சிறுவயதிலேயே தாயை இழந்து

                      தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.

                      சமந்தா
                      சமந்தா – தேஜஸ்வி மாதிவாடா

                      இந்நிலையில் எனக்கு ‘டிபி’ நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள

                      பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்” என்று தெரிவித்துள்ளார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

                        யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

                        யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் இருந்து 81 எம் எம் எறிகணை ஒன்று மீட்க பட்டுள்ளது

                        மேற்படி விடயம் குறித்து இராணுவத்தினருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த எறிகணையை மீட்டனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

                          250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

                          இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்

                          இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்

                          ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது

                          ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,


                          அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்

                          கருத்துரைத்துள்ளனர்

                            Posted in Uncategorized

                            இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                            இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு

                            விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                            மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

                            பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                            இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால்

                            பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள

                            தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

                              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

                              இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல

                              நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்

                              கொதிப்பில் உறைந்துள்ளனர்

                              இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு

                              இடம்பெற்றுள்ளது


                              ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                                இலங்கை கிளிநொச்சி பகுதியில் மீண்டும் கொரனோ நோயானது அதிகரித்து வருவதாக

                                தெரிவிக்க பட்டுள்ளது


                                கடந்த தினம் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய மறுத்து மக்கள் செல்வதும் ,சுகாதார கேட்டின்

                                ஊடாகவும் இந்த


                                பரவல் இடம்பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                                  சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்

                                  ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்

                                  அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

                                  சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்

                                  இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

                                  கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று

                                  விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

                                    Posted in Uncategorized

                                    கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி

                                    கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி

                                    கிளிநொச்சி பகுதியில் உள்ள பிரபல புடவை கடை ஒன்றுக்குள் வேகமாக வந்த டிப்பர் வண்டி

                                    ஒன்று புகுந்தது

                                    இதனால் அந்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது எனினும் இதில் உயிர் சேதங்கள்

                                    ஏற்படவில்லை
                                    மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      Posted in சினிமா

                                      கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை

                                      கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை

                                      பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார்.

                                      லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே… ரைசா வில்சன்
                                      ரைசா வில்சன்


                                      பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான

                                      இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.

                                      பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர்

                                      விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

                                      இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ

                                      உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

                                      ரைசா வில்சன்

                                      இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால்

                                      அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.

                                        Posted in சினிமா

                                        38 வயதில் திருமணம் செய்த நடிகை

                                        38 வயதில் திருமணம் செய்த நடிகை

                                        தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

                                        38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை
                                        கணவருடன் நடிகை சந்திரா லட்சுமண்


                                        தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமண்.

                                        மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

                                        சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

                                        சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை

                                        காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமண் தெரிவித்தார்.

                                        சந்திரா

                                        இந்த நிலையில் சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து

                                        கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.