Author: நலன் விரும்பி
கோவிலில் நடிகை சினேகா கணவருடன் சாமி தரிசனம்
கோவிலில் நடிகை சினேகா கணவருடன் சாமி தரிசனம்
பழனி கோவிலில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பழனி கோவிலில் நடிகை சினேகா கணவருடன் சாமி தரிசனம்
பழனி கோவிலில் நடிகை சினேகா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த காட்சி.
பழனி மலைக்கோவிலுக்கு நடிகை சினேகா தனது கணவரும், நடிகருமான பிரசன்னா மற்றும்
தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை
சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதியிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த சினேகாவுடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருப்பது போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
சரத்குமார்
நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன
பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா,
தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது ராஜு,
அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகிய 7 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய திருப்பு முனையான இந்த டாஸ்க்கிற்காக சரத்குமார் சூட்கேசுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றிருக்கிறார். அந்த சூட்கேசில் ரூ. 3,00,000 பணம்
உள்ளது என்றும், இதை எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று சரத்குமார் சொல்லுகிறார்.
இது போட்டியாளர்களிடையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. யார் பணப் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே செல்வார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விழுந்து மண்ணை கும்பிட்டு பதவியேற்ற அதிபர்
விழுந்து மண்ணை கும்பிட்டு பதவியேற்ற அதிபர்
புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது.
தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் .
சிறந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் செம்மொழிக்குரலோன், பண்டாரவன்னியன் விருது மற்றும் கம்பீரக்குரலோன் போன்ற இன்னுமின்னும் பற்பல விருதுகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்
டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.
இளைஞர்களின் திறன்கள், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தரவுகளைக் கொண்ட தரவுத்தளமாகப் பயன்படுத்தக்கூடிய ‘டிஜிட்டல் அடையாள அட்டை’
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகம் தமித விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் அடையாள அட்டையானது, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரவு வங்கியாக பயன்படுத்தப்படுவதோடு, இளைஞர்களுக்கு
நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். .
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறித்த ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ ஒரு தகவல் தொழில்நுட்பக் கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (03) இடம்பெற்றது.
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று
எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும், கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.
எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் இதன்மூலம் வெற்றிகொள்ள வேண்டும்.
எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.
ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் வழிகாட்டலில், நிதி அமைச்சரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.
தங்கு தடைகளற்ற உங்களது நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார்
அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் நீக்கப்பட்டார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தார்
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது
மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.
4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு
இ.போ.ச பஸ் – ரயில் சேவைகள் அதிகரிப்பு
அரச ஊழியர்கள் வழமைப்போன்று கடமைக்கு சமூகம் அளிப்பதாலும், பாடசாலைகள் மீண்டும்
திறக்கப்பட்டதினாலும் இன்று (தொடக்கம் சேவையில் ஈடுப்படும் இ.போ.ச பஸ் மற்றும் அலுவலக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர்
பண்டுக்க சுவர்ண ஹங்ஷ இதுதொடர்பாக தெரிவிக்கையில், 5,000 க்கு மேற்பட்ட பஸ்கள் நாளாந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரகுமான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?
ஏ.ஆர்.ரகுமான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?
ஏ.ஆர்.ரகுமானுடைய மகளின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்று செய்தி வெளியானது
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்தது… ஏ.ஆர்.ரகுமான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?
ஏ.ஆர்.ரகுமான் – மகள் கதீஜா
இந்திய சினிமாவையே தன்னுடைய இசையின் மூலம் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார் நாயகனாக அறியப்படும் இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல்,
விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என
இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கும் ஆடியோ இன்ஜினியர்
ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த டிசம்பர் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
வாய்ப்புக்காக இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்
துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார்.
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, நீண்ட சிகிச்சை எடுத்து திரும்பினார். இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் யாஷிகா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
தனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குநர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்கள். இன்னும் சில இயக்குநர்கள் தவறான
காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கேட்டார்கள். ஆனால், நான் அதையெல்லாம்
ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பசில் இந்தியா பயணம்
பசில் இந்தியா பயணம்
புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்தியாவுக்கு மீண்டும்
விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று பெசில் ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் ,
எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய்த்தூள் பூசிய தந்தை
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
6 வயதுடைய சிறுவனும் 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.
அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
வங்கியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.
வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான அந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா
மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த
செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின்
ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?
கோட்டா விசேட கூட்டம் – நடக்க போவது என்ன ..?
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று
நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோரும் பங்கேற்று, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுப்படுத்துவர்.
இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு புத்தாண்டுக்கு முன்னரே, அமெரரிக்கவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, 2022 புத்தாண்டு தினத்தன்று நாடு திரும்பினார். அவரும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்பார்.
இன்றைய விசேட அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வது தொடர்பில் மட்டுமே விரிவாக ஆராயப்படும்
முடங்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை இலங்கைக்கு இல்லையென்பதில் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் உறுதியாக இருக்கிறார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டுமென அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அரசாங்கம் அங்கு செல்லக்கூடாதென அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக அமைச்சர் சி.பி ரத்நாயக்க கூறினார். ” சர்வதே நாணய நிதியம், எங்கள் மீது விதிக்க விரும்பும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஆனால், குறைந்தபட்சம் நாங்கள் ஒரு உரையாடலையாவது ஆரம்பிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிப்பதும் மக்களுக்கு உதவாது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டுமென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் இருக்கும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ரூ.1 கோடி வரையில் சேவை வரி செலுத்தவில்லை என அவர்மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திரைப்பட
தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷாலின் நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே
இந்த புகார் கூறப்பட்டு இருந்தது. நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர் சேவை வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரிகள்.
கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2018 வரையில் சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் விஷால் நேரில் ஆஜராகி தன்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம்
அளிக்கவில்லை. வழக்கு இதையடுத்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரித்துறை
அதிகாரிகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
எனவே குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர அவசியம் இல்லை என வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கூறியதாவது ரூ.500 அபராதம் சேவை வரி அதிகாரிகள் 10
முறை சம்மன் அனுப்பியும் விஷால் வேண்டும் என்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
வழக்கு தொடர்ந்த பிறகே சேவை வரி தொடர்பான விவரங்களை விஷால் அதிகாரிகளிடம்
தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டின் மீதான தன்மை குறைவாகவே உள்ளதால்
வெறும் ரூ.500 அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை
காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்
கணவருடன் காஜல் அகர்வால்
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால்,
அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர்
கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?
கிளிநொச்சியில் எரிந்த கடை – சதி முயற்சியா ..?
கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள்
விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம்
காரணமாக கோடிக்கனக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.
மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11
மணியளவில முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.
கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி
வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி கடும் போக்கின் உச்சமாக காணப்படுகிறது
,நாளாந்தம் விலைவாசி எகிறிக்கொண்டே போகிறது ,மக்கள் பொறுமை இழந்து செல்கின்றனர் ,
இது ஆளும் கோட்டாவுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை
தொடுக்கும் நிலை ஏற்படும் என விமல் வீரவன்சா எச்சரித்ததுள்ளார்



















