Author: நலன் விரும்பி
மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்
பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்
கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.
“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அந்த நாட்டு மக்களுக்கு அது எப்போதும் துணை நிற்கும் என்றார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.
மொத்தம் 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை இலங்கை தடுத்து வைத்துள்ளது, இவர்களில் 12 மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை விடுவிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் செயல்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று பாக்சி கூறினார்.
“திருகோணமலை எண்ணெய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகளை பார்த்தோம். இலங்கையுடனான எமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதி எரிசக்திப் பாதுகாப்பு” என்று அவர் கூறினார்.
“திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது.
லங்கா ஐ.ஓ.சி.யின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள பெரும்பாலான தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டமாக வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அலுவலகம் வியாழன் (6) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடன் வரியை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பெசில் ராஜபக்சே புதுடெல்லிக்கு சென்றதை பாக்சி குறிப்பிட்டார்.
“இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதில் தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அவர் இந்திய தரப்புக்கு விளக்கினார். இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கை நமது அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.
ராஜபக்ஷவின் பயணத்தின் போது, உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாக அவர் கூறினார். “மேலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாக்சி கூறினார்.
காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை
காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை
காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி
மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு
அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
மகேஷ் பாபு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில்
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில்
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாயில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
நயன்தாரா
நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில்
கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
நயன்தாரா துபாயில் இருந்த நாட்களில் நடிகை மெஹ்ரீன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
நடிகை மெஹ்ரீன், தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு
எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் சிலிண்டர் தட்டு பாடு மற்றும் வெடித்து சிதறி வந்த நிலையில் இருபது வீதமான
உணவகங்கள் தற்காலிகமா அடித்து மூட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டா ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
சீனாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட உரம் போலியான ,தரமற்ற முறையில் உள்ளவை
என கோரி குறித்த கப்பல் சீனாவுக்கு திருப்பி அனுப்ப பட்டது
மேற்படி விடயம் தொடர்பில் சர்ச்சைகள் முறுகல் எழுந்து வந்த நிலையில் தற்போது குறித்த
கப்பலுக்குரிய 6,7 மில்லியன் டொலரினை இலங்கை நாளை செலுத்த உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
காணமல்போன சிறுவர்கள் மீட்பு
காணமல்போன சிறுவர்கள் மீட்பு
2021 ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 முக்கிய பகுதிகளில் 16 மணித்தியால நீர் தடை
8 முக்கிய பகுதிகளில் 16 மணித்தியால நீர் தடை
வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கீழ்கண்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைபடும்.
கொழும்பு மாநகர சபை
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை
கோட்டே மாநகர சபை
கடுவலை மாநகர சபை
மஹரகம
பொரலஸ்கமுவ
கொலன்னாவ
கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேசங்கள்
10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்
10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்
எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு
தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு
வாழ்க்கை சுமைக்காக அரச ஊழியர்களை போன்று தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் ஒரே மாதிரியாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தனியார் துறைக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு அவசியம் கிடைக்க வேண்டும் என்று நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பிலான முதலாவது சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் ஆடை தொழில்துறை, பெருந்தோட்ட தொழில்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை நேரடியாக மற்றும் அலுவலக சேவை சட்டத்தில் உள்வாங்கும்
நிறுவனங்கள் அடங்கலாக அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார்களை அழைத்து அவர்களுடன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும்
நட்புறவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்
தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களமக்களிடம் அடிமட்டத்துக்கு இறங்கி பகிரங்கமாக, தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப்
பிரச்சினைகள் தீா்ந்து விடுமென யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியமளிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவா் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில், தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லவர்கள், எனது 40
வருடகால அரச சேவையில் அவர்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். கொடுத்த ஒரு விடயத்தை அவா்கள் சிறப்பாக செய்து தருவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்றும் மொழிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச
அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவலக கடிதங்களை அனுப்புகின்றார்கள்.
இம்மொழிப்பிரச்சினைக்கு அரசமட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க
வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம்தொட்டு தொடர்கிறது எனவும் தெரிவித்தார்.
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில்
கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
ஜனவரி 4ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட காணியில், வேலி அமைப்பதற்காக, சென்றிருந்த நபர், பாரிய குண்டுகளை கண்டுள்ளார். அதனை இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல
முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் நிறை கொண்டது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (05)
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
பிரபல நடிகையாக பல மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது மதுபான விளம்பர படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்
மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி
கொள்கின்றனர். சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள்
அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில்
மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தி உள்ளது. இளைஞர்களை நிதி அகர்வால் மது
அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த பதிவு பேசு பொருளாகியிருக்கிறது.
பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.
பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.
குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக
விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக
நெருங்கி பழகியவர்கள், தங்களை தாங்களாகவே சுய தனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது
யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்
யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து
சபைக்குச் சொந்தமான பஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பஸ்ஸை, இடைமறித்த
கும்பலொன்று பஸ்ஸின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
அதில, காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை , பருத்தித்துறை – திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது , நெல்லியடி புறாப்பொறுக்கி சந்தி பகுதியில் வைத்து இனம் தெரியாத கும்பல் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இன்று (04) புதன் கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் சாரதியால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு
தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா
மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக்
கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும்
புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது
வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார்.
மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில்
மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு
ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள்இ டெங்கு ஒழிப்பு செயலணிஇ உத்தியோகத்தர்கள்இ பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்
வைத்தியசாலை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில்
உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















