Posted in இலங்கை செய்திகள்

விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலமுல்ல – லெனகல வீதியின் நாவலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லெனகல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வர்நாத்தின் மேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிகேபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபுகல ரஜவக வீதியில் டிப்பர் வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலாங்கொடை, மகுனமலை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

    உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

    மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

    சிலாபம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாச சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

    மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குறித்த கட்டிடத்தில் இருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதால் நேற்று (25) பிற்பகல் குறித்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையின் படுக்கையில் இரண்டு தனித்தனி துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

    ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      தமிழக மீனவர்கள்
      Posted in இலங்கை செய்திகள்

      தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

      தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

      இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

      நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த மாதம் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

      இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்தாண்டு காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

      ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

      விடுவிக்கப்பட்ட 55 மீனவர்கள்

      எஸ். நிதர்ஷன்

      இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

      நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த மாதம் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

      இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்தாண்டு காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

      ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

      பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
      Posted in இலங்கை செய்திகள்

      மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

      மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

      மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக 2,147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

      இதற்கமைவாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுள் 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி

      , உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்; மற்றும் மட்டக்களப்பு மாவட்ட

      பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (25) இடம்பெற்றது.

      மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது

      இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச

      செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
      கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச

      செயலகத்திற்கு 21 பேரும், வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.
      பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது

      பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்த நிலையத்திலேயே அவர்ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

        பைசர்
        Posted in இலங்கை செய்திகள்

        16 – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் பைசர் இரண்டாவது டோஸ்

        16 – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் பைசர் இரண்டாவது டோஸ்

        பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

        இதுதொடர்பாக இன்று (25) தெரிவிக்கையில் ,

        பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பொதுவாக முதல் டோஸைப் பெற்று 4 வாரங்களுக்குள் வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தடுப்பூசி நிபுணர்

        குழுவின் பரிந்துரையின்படி, 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸை வழங்கப்படுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.

        இந்த வயதிற்கு உடபட்டவர்களுக்கு, முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களின் இரண்டாவது டோஸைப் பெற்றுக் கொள்ளும் காலம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் இன்று முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள

        முடியும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வகை இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருந்தபோதிலும், மூன்று மாதம் நிறைவடைந்திருந்தால் அவர்கள்

        பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு போதுமான பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

        உலகெங்கிலும் ஓமிக்ரோன் திரிபு காரணமாக கொவிட் 19 இன் புதிய அலை உருவாகி வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இலங்கையும்

        பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் அனைவரையும் வலியுறுத்தினார்.

        அத்துடன், சிலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு 6 – 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களின் செயல்திறன் மற்றும்

        பாதுகாப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அவர்கள் கண்டிப்பாக மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்

        Posted in இலங்கை செய்திகள்

        நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

        நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

        இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில்

        (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

        தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை

        அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

        கடத்த பட்ட ஆயுதங்கள்
        Posted in Uncategorized உலக செய்திகள்

        ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

        ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

        ஈரானுக்கும் அதன் எல்லையோர வழியாக கடத்த பட்ட அதி நவீன ஆயுதங்கள் ஈரான் போலீசார்

        நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது மீட்க பட்டுள்ளது

        இரண்டு வாகனங்கள் ஊடக மறைத்து எடுத்து வரப்பட்ட பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளது

        ,இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவ்வாறு

        கைதானவர்க்ளுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்குவது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

          தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

          தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது

          சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை

          சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

          அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது

            Posted in Uncategorized உலக செய்திகள்

            சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

            சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

            தென் சீன கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா விமான தாங்கி


            கப்பல் ஒன்றில் தரை இறங்க முற்பட்ட fc 35 ரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது

            இதன் பொழுது அதில் இருந்த விமானி உலங்கு வானூர்தி மூலம் காப்பாற்ற பட்டுள்ளார்

            அதே கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்

            குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            நடிகர் திலீப்
            Posted in சினிமா

            மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம்

            மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம்

            சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

            மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க
            10 நாள் அவகாசம் – கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
            நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றம்

            நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர் திலீப் தற்போது விசாரணை

            அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

            திலீப் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று 2-வது நாளாக கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திலீப் நேரில் ஆஜரானார்.

            இந்த நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடையே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை போலீசார் கைது செய்தனர். நடிகை கடத்தல் தொடர்பாக சுனியுடன் திலீப் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

            இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளில் சிலர்

            மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

            இதை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் புதிய சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்புக்கு

            மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள நடிகை கடத்தல் வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

              பிக்பாஸ் அல்டிமே
              Posted in சினிமா

              சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

              சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

              பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அடுத்த போட்டியாளர் பற்றிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

              சோதனைகளை சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?
              பிக்பாஸ் அல்டிமேட்


              பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன்

              பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.

              பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும்

              ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.

              ஜூலி

              அதன்படி நேற்று முதல் போட்டியாளராக சினேகன் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

              தற்போது பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் பேசப்பட்ட ஜூலி, 2வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல இருப்பதாக புரமோ வெளியாகியுள்ளது.

                Posted in உலக செய்திகள்

                பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்

                பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்

                பிரிட்டன் ஆளும் பிரதமர் British Prime Minister Boris Johnson’s கொரனோ லொக் டவுன் காலத்தில்
                நூறு பேரை அழைத்து பார்டி நடத்தினார்

                மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டன் மெட்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                விசாரணை முடிவில் நீதி துறை மூலம் ஆளும் பிரதமர் சிறை செல்வாரா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                  பேருந்துகளில் நின்று பயணித்தால்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

                  பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

                  பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான

                  பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

                  அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

                  இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து

                  பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

                  பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும்

                  கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

                  இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் குறிப்பிட்டார்.

                    தயா மாஸ்டர்
                    Posted in இலங்கை செய்திகள்

                    தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

                    தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

                    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து

                    விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

                    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.

                    இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

                    குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

                    2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப்

                    புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

                    வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

                    வழக்கில் தயாமாஸ்டர் மற்றும் அவர் சார்பாக சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

                    குறித்த வழக்கில் தயாமாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

                    அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

                    அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

                      மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

                      இலங்கை கோமகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 23 ஊழியர்களுக்கு பரவி வரும்


                      கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      இதனால் அந்த வைத்தியசாலையில் பர பரப்பு ஏற்பட்டுள்ளதுடன் ,பணியாளர்களுக்கும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

                      தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரிப்பு வேகமாக பரவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

                        இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

                        இலங்கையில் திடிரென எலி காய்ச்சலினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது


                        கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல்

                        வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

                          கஞ்சா
                          Posted in இலங்கை செய்திகள்

                          சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

                          சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

                          இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்

                          பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

                          இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக

                          விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

                          கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                          போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த

                          நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..

                            Posted in இலங்கை செய்திகள்

                            நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

                            நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

                            2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                            இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                            இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

                            இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

                            இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

                            அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

                            இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு

                            ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற

                            ரீதியில் இழப்பீடு தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்

                              விமான நிலையம்
                              Posted in Uncategorized

                              அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு

                              அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு

                              துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் திடீரென அடித்து பூட்ட பட்டுள்ளது

                              அதிக சினோ பொழிவு இடம்பெற்று வருவதால் இந்த விமான நிலையம் தற்காலிகமாக பூட்ட பட்டுள்ளது

                              இதனால் பயணிகள் பெரிதும் அவதியில் சிக்கினர்

                                Posted in சினிமா

                                திரிஷாவுக்கு இது முதல்

                                திரிஷாவுக்கு இது முதல்

                                தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

                                திரிஷாவுக்கு இது முதல் முறை!
                                திரிஷா


                                சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து

                                வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

                                திரிஷா
                                திரிஷா

                                இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

                                காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு

                                தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.