Author: நலன் விரும்பி
பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து
பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து
ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.
15 பேர் சென்ற இப்பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த
நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய
அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை
அமைப்பதற்கு வழிவகுத்தது அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.
குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.
மாலை 3 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும் இடம்
பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 ஜனவரி28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை
காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான
கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்..
துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை
துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சுகாதார நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.
இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
உக்கிரேனின் இராணுவ வளாகத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பத்து பேர் படுகொலை செய்ய பட்டனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த சூட்டு படுகொலை சம்பவத்திற்குரிய காரணம் தெரியவில்லை
சந்தேக நபர் கைது செய்ய பட்டு விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் செயலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம்
உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.
ராஷ்மிகா மந்தனா
ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார்.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் செயலை சாடி
வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அந்த குழந்தைக்கு எதாவது கொடுத்திருக்கிலாம் என்றும் பதிவு செய்து வருத்தமடைந்திருக்கிறார்கள்.
டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை
டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை
கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.
.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்
விஜய் ஆண்டனி
‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி
மகிமா நம்பியார் – நந்திதா ஸ்வேதா – ரம்யா நம்பீசன்
அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன்
படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து,
‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்
ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு
ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு
இலங்கை மகாவலி ஆற்றங்கரை ஓரமாக பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,குறித்த பெண்ணின் சடலத்தின் அருகில் இருந்த கைப்பையில் இருந்த்து 15 ஆயிரம் ரூபாய்கள் பணமும் மீட்க பட்டுள்ளது
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது
சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது
இலங்கை கட்டுவதை பகுதியில் சீமெந்தினை அதிக விலைக்கு விற்ற முதியவர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது
அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு
அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு
இலங்கை பாணந்துறை பகுதியில் பயணித்து கொண்டிருந்த அம்புலன்ஸ் ஒன்றின் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
எனினும் அதில் இருந்து சாரதி தப்பித்துள்ளார்
இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்
காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்
2016 ஆம் ஆண்டு இலக்கம் 17 கீழான காணாமற்போனோர் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெறுகிறது.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுரப்பட்ட பின்னர் 2009 ஆண்டுக்குப்பின்னர் காணாமற்போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழுவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தவொரு முறைப்பாடு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைப்பாடுகளை ஆராய்வதற்குத் தீர்மானித்தது.
இதற்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைவாக, நீதி அமைச்சர் அலி சப்ரியின் பங்கேற்பில் வடமாகாணத்தில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும்,; நடமாடும் சேவைகள் மூலம் மக்களைத் தெளிவூட்டுவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக வடமாகாணத்தை தெரிவு செய்து தீர்வு வழங்க முன்வந்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட அவர் காணாமல் போனோர் உட்பட ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு என்ற இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் இன்று 27 ஆரம்பமாகவுள்ளது.
நடமாடும் சேவை நாளை வரை இங்கு நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தனது பிரச்சினைகளை இங்கு முன்வைக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய மகா வித்தியாலத்திலும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
இதில் சட்ட உதவி ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபை, கடன் சபைகள் திணைக்களம், சமுதாய சார் சீர் திருத்த திணைக்களம் ,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயக பணியகம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், மாகாண காணிகள் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு, தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவகங்களின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்
சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்
சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும்
தந்திரோபாயப் படை’ அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் பிரஜைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஜனவரி 26) தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை வீரர்கள் 194 பேர் சிறைச்சாலை சேவையில் இணைவு
பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறுவோரின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார்.
‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194 பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் “இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தமது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
“ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை முறியடிக்கவும், மேலும் வெளிப்படையான அணுகுமுறையில் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் இவர்கள் துணை நிற்பார்கள் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை அவர் விளக்கினார்.
புதிதாக வெளியேறிய இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “உங்கள் உள்ளார்ந்த ஒழுக்கம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற்றுள்ளீர்கள், எனவே சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் உங்கள் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
“இந்தக் கைதிகள், அவர்களின் சிறைக் காலத்தை முடித்து மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னராக பயனுள்ள நபர்களாக மாற்றுவதில் உங்கள் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.
வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளருக்கு ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ படையின் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கப்பட்டதுடன், பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் காட்சிகள், அணிவகுப்பு மற்றும் நான்கு மாத பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் துசித உடுவர, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) சுனில் கொடித்துவக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் (தொழில்துறை மற்றும் அபிவிருத்தி) மாலின் லியனகே, சிறைச்சாலைகள் பயிற்சி பணிப்பாளர் சேனக பல்லேதன்ன, SPEAT படையின் கட்டளை அதிகாரி சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தனிமையில் இருந்து மூதாட்டி கொலை
தனிமையில் இருந்து மூதாட்டி கொலை
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய ´சுலைமான் செய்யது புஹாரி´ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது தாயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் குறித்த மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
விளாடிமிர் புடினின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் என்பதை உறுதி செய்வதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு
வெண்டி ஷெர்மன், விளாடிமிர் புடின்
அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்த அதன் அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி நடுப்பகுதியில் உக்ரைனுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த புடின் தயாராக இருக்கிறார் என்பதை அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இறுதி முடிவை எடுத்தாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் நாங்கள் நிச்சயமாக பார்க்கிறோம். ஒருவேளை அது இப்போது இருக்கலாம் அல்லது பிப்ரவரி நடுப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதற்கு எதிராக மாஸ்கோவை எச்சரிக்கும் வகையில், இந்த மாத தொடக்கத்தில் வியன்னாவில் தனது ரஷ்ய கூட்டாளியை சந்தித்த ஷெர்மன், புடின் நடவடிக்கைகளால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்
ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்
ஜோ பைடன்
வாஷிங்டன் :
சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. ஆனாலும் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷியாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
உக்ரைன் தன் எல்லைகளை ஒருபுறம் ரஷியாவோடும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கிறது.
இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது. ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.
உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இருநாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஜனாதிபதி ஜோ பைடனிடம் உக்ரைன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது ஒரு பத்திரிகையாளர் “உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷிய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜோ பைடன் “ஆம், உக்ரைனுக்குள் ரஷியா ஊடுருவினால் நிச்சயமாக புதின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “ரஷியா, உக்ரைன் மீது படையெடுத்தால் அது, 2-ம் உலக போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷியா எதிர்கொள்ளவேண்டி வரும். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை, அமைதியான சூழலை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை எங்கள் நாடு ஆதரிக்கும்’’ எனவும் கூறினார்.
ரசிகர்களை ஏமாற்றிய விஷால்
ரசிகர்களை ஏமாற்றிய விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.
ரசிகர்களை ஏமாற்றிய விஷால்
விஷால்
விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில்
விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின்
படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகவில்லை.
விஷால்
கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மகனை களமிறக்கும் ஷங்கர்
மகனை களமிறக்கும் ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார்.
மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்
ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே இவரது மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
ஷங்கர்
டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அர்ஜித் தற்போது நடிகராக களமிறங்க உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது
அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு
அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு
தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு
சுனில் தர்ஷன், சுந்தர் பிச்சை
மும்பை:
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த திரைப்படம் யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் பலமுறை அவர் புகார் தெரிவித்தும் அதை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, வெளியிடவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யூடியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இந்தி திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியதாக சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார்.
காப்புரிமை சட்டத்தை மீறி யூடியூப்பில் திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் ஊழியர்கள் ஐந்து பேர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது
செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை
செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை
எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதியின் பேச்சு,பா.ஜ.க.வின் உண்மையான முகம் மற்றும் குணத்தை காட்டுவதாக சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
தடி மற்றும் செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை
ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காணொலி மூலம் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கான்பூர் பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி, கித்வாய் நகர் தொகுதியில் காணொலி மூலம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
இந்த நேரத்தில், கொடுங்கோலர்கள், ஒருபுறம் பேசுபவர்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள், அவர்களை தடி மற்றும் செருப்பால் அடி, ஆனால் சுட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் எல்லாவற்றையும் கையாள்வேன்.இவ்வாறு தமது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.
அவரது பேச்சை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோவை ஆதரவாளர் ஒருவர் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பினார். இது தற்போது வைரலாகி வருகிறது. அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரை தாக்கி, பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி பேசியதாக கூறப்படுகிறது.
அவரது பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் உண்மையான முகமும் குணமும் இதுதான். இது குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதாகவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேஹா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

















