Posted in உலக செய்திகள்

ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

வட கிழக்கு சிரியாவில் கிளர்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய

வான் வழி தாக்குதலில் சிக்கி 200 கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயுதங்களுடன்

சென்று கொண்டிருந்த 24 வண்டிகளும் தாக்கி அழிக்க பட்டுள்ளன

தொடர்ந்து கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Russian airstrikes
Russian airstrikes
Posted in Uncategorized

இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

இந்தியா டில்லியில் இருந்து கொங்கொங் நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்த

49 பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளது

இதேவேளை லண்டன் இந்திய விமான சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளதுடன் ,சிவப்பு பட்டியலில் இந்தியா பயணம் பதிய பெற்றுள்ளது

நிகழ்கால நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது ,இதனால் பயணிகள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர்

    Posted in சினிமா

    நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா

    நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா

    திரௌபதி, டூ லேட், மண்டேலா ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷீலா, நடுக்கடலில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் திரௌபதி#

    . இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.

    ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நேரடியாக டிவியில் வெளியான யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்திலும் ஷீலா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகை ஷீலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஷீலா

    நடுக்கடலில் ஒருவருடன் மாலையுடன் இருக்கிறார் நடிகை ஷீலா. இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்துக்

    கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    நடுக்கடலில் திருமணம்
    நடுக்கடலில் திருமணம்
      Posted in சினிமா

      விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

      விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

      தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

      விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்
      விவேக்


      சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக்.

      இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன.

      நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      விவேக்

      அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத

      இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார்.

      அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

        Posted in சினிமா

        கொரோனா ஊசி விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு

        கொரோனா ஊசி விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு

        சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

        கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

        நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

        கொரோனா தடுப்பூசி

        இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

        தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

        இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

        அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

        கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

        இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

          Posted in Uncategorized

          உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

          உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

          உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில்,

          தற்பொழுது உக்கிரேன் எல்லை பகுதியில் ரசியாவின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

          இந்த திடீர் இராணுவ குவிப்பால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

          உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்துள்ளது ,அமெரிக்கா,ஐரோப்பாவின்

          செயலினால் சீற்றம் உற்ற ரசியா இந்த படைக் குவிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

          Russian military
          Russian military
            Posted in உளவு செய்திகள்

            300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

            300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

            Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,

            இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்

            இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த

            தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

            தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

            சுட்டுக்கொலை
            சுட்டுசுட்டுக்கொலைக்கொலை
            Posted in Uncategorized

            பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு

            பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு

            பிலிப்பைன்சில் வீசி வரும் பலத்த புயலினால் இதுவரை ஒருவர் மரணமாகியுள்ள்ளார் ,மேலும் ஒருவர ஒரு

            லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப் பெயர்ந்துள்ளனர்
            மேலும் 121 மைல் வேகத்தில் வீசி வரும் புயல் காரணமாக பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன

            மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் துரிதமாக

            இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிரிழப்பு தொடர்பிலான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை

            புயல்
            புயல்
              Posted in உலக செய்திகள்

              கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

              கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

              இந்தியாவில் வழமைக்கு மாறாக கொரனோ நோயானது அதிகமாக பரவி வருவதால் தற்போது

              ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படுகிறது ,இதனால் மக்கள் வெளியில்நடமாட முடியாத நிலையில் முடக்க படுகின்றனர்

              சமீப நாட்களில் மரண எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இந்த ஊரடந்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

              இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

                Posted in உளவு செய்திகள்

                அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்

                அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்

                ஈராக்கில் உள்ள Al-Balad விமான தளம் மீது எட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதில் அமெரிக்கா

                இராணுவத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

                மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேறும் வரை அவர்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள்

                தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,ஈரானின் தயாரிப்பு ஏவுகணைகள் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                பாரிய ரயில் விபத்து 97 பேர் காயம் – பலர் மரணம்

                பாரிய ரயில் விபத்து 97 பேர் காயம் – பலர் மரணம்

                எகிப்தில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் சிக்கி 97 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் சிலர் பலியாகியுள்ளனர்

                எனினும் இந்த விபத்தில் ஏற்பட்ட முழுமையான மரண விபரம் மற்றும் காயமடைந்தவர்கள் விபரம் வெளியாகவில்லை

                ஐம்பதுக்கு மேற்பட்ட ஆம்புலன்சில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

                கடந்த விபத்தில் இருபது பேர் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது ,விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                ரயில் விபத்து
                ரயில் விபத்து
                Posted in Uncategorized

                பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

                பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

                ஈரானின் தெற்கு பகுதியில் இன்று இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இந்த நில அதிர்வின் தாக்குதல் பதிவு 5.9 ஆக பதிந்துள்ளது

                பாதிக்க பட்ட பகுதிகள் நோக்கி மருத்துவ குழுக்கள் அனுப்ப பட்டுள்ளன

                இதுவரை ஐவர் காயமடந்துள்ளனர் எனவும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

                நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலேயே ஈரானின் அணு உலை உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                இதற்கும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை

                  Posted in மருத்துவம்

                  சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                  சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                  பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

                  பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில்

                  கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

                  மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை

                  கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.

                  சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

                  அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது.

                  அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

                  இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம்

                  கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.

                    Posted in சினிமா

                    அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

                    அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

                    நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்

                    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு

                    தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

                    இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விவேக்கின் மனைவி

                    அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

                    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய,

                    மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும்,

                    ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

                    நடிகர் விவேக் மனைவி
                    நடிகர் விவேக் மனைவி
                      Posted in சினிமா

                      நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

                      நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

                      பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                      நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு
                      யோகி பாபு
                      வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு

                      படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார்.

                      ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

                      பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி

                      கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

                      இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால்

                      அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார்.

                      யோகி பாபு

                      இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார்.

                      சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார்.

                      பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா,

                      பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள்.

                      இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது

                        Posted in சினிமா

                        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

                        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

                        தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

                        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா
                        நயன்தாரா


                        மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும்,

                        அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

                        தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200

                        கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

                        மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

                        இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

                        னால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

                        இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                          Posted in Uncategorized

                          ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                          ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                          Tarawih பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென நுழைந்த ஆயுத

                          தாரி தாக்குதலை நடத்தினார் .இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

                          இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை


                          தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in Uncategorized

                            கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள் photo

                            கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

                            அவுஸ்ரேலியா Fraser கடற்கரை பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை

                            வழிமறித்த நாய்கள் அவனை கடித்து குதறியது ,பலத்த காயங்களுக்கு உள்ளான அவனை

                            உலங்குவானூர்தியில் வந்த மருத்துவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்

                            மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            கடித்து குதறிய நாய்கள்
                            கடித்து குதறிய நாய்கள்
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                              2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                              பிரிட்டனுக்குள் கப்பல் ஒன்றின் மூலம் எடுத்துவரப் பட்ட 22 கொண்டனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              மேற்படி கொண்டெனருக்குள் உடுப்புகள் ,கைபேசிகள் ,மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அடக்க பட்டுள்ளன

                              இவை மோசடியான முறையில் உள்வாங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த

                              துரித விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                              கொண்டனர் மீட்பு
                              கொண்டனர் மீட்பு
                                Posted in Uncategorized

                                பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                                பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                                பிரிட்டன் westbound carriageway, வேக சாலையில் பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் 17

                                வயது வாலிபன் ஒருவர் காவல் துறையினரால் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
                                5 முதல் 7 ஆம் இலக்க சந்தியில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது

                                இந்த விபத்தை கண்ணுற்றவர்கள் யாரவது இருந்தால் தமக்கு தெரிவிக்கும் படி மக்கள் உதவியைபோலீசார் நாடியுள்ளனர்

                                தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது