தீப்பிடித்து மூழ்கிய ஈரான் போர் கப்பல் – வீடியோ
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரானின் மிக பெரும் இராணுவ கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து ஓமான் வளைகுடாவில் மூழ்கியது
தீப்பிடித்த வேளை குறித்த கப்பலில் 400 இராணுவத்தினர் இருந்துள்ளனர் ,இதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஏனையவர்கள் காப்பாற்ற பட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க பட்டனர்
இயந்திர அறையில் ஏற்பட்ட தீயினால் மேற்படி கப்பல் 11 மணி நேரமாக எரிந்து கடலில் மூழ்கியுள்ளது ,மேலும் இதில் இருந்த இரண்டு உலங்குவானூர்திகளும் எரிந்து அழிந்துள்ளன
ஈரானிடம் உள்ள கப்பல்களில் மிக பெரும் துருப்புகாவி கப்பலாக உள்ளதுடன் ,சர்வதேச நடவடிக்கைக்கு முக்கிய பணியாற்றி வந்ததும் ,அதிக ஆயுத தளபாடங்களை காவி செல்லும் கப்பலாகவும் இது இருந்துள்ளது
அவ்விதமான கப்பல் இயந்திர அறையில் தீ பிடித்து மூழ்கியுள்ளது என்ற தகவல் .,இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு தாக்குதல் ஊடக இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது
- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்
- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு












