கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
Posted in இலங்கை செய்திகள்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை.

இந்த பாதிப்புக்கு அனோனிச்சியா காங்கினிடா என்று பெயர். இது மிகவும் அரிய வகை நோயாகும். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் கூறுகையில்,

“அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.


ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்” என்று கூறுகிறது.

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி

வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட
மாணவிகளுக்கு காப்போம் நிறுவனம் நிதியுதவி வழங்கி வைப்பு!

அபு அலா –

தந்தையிழந்து மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று யாழ்.
பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட முள்ளிவாய்கால் –
உடையார்கட்டு பிரதேசத்தைச் இரு மாணவிகளின் உயர்படிப்பை கஷ்டமின்றி
தொடர்வதற்கு இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளது.

இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்
கு.பிரதீப்கரன் (திலீப்) உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்கால் – உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள சு . சங்கவி மற்றும் த. கிந்துஜா என்ற இரு மாணவிகளின் இல்லம்தேடிச் சென்று தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் முதற்கட்டமாக இந்த நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பிரதி அதிபர் கு.சுதாகரன்,
வடகிழக்கு கலைப்பிரிவு மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் த.
யதுர்சனன் மற்றும் காப்போம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடர்பெய்து வரும் மழையால் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா- டெஸ்போட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடான டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

.யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.

தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின்

பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட
வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.

என்னோடு வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

கவிதைக்குள் உன்னை நான் வரைய வா – என்
கனவுக்குள் என்றும் நீ மலர வா
இதயத்தை என்றும் திறக்க வா – என்
இதயத்தில் என்றும் இருக்க வா

உனக்காக என்றும் நான் வாடவோ – உன்
உயிரோடு என்றும் நான் கூடவோ
பிறந்தாயே நீ தானே எனக்காக – இந்த
பிரளயத்தை பிளக்க வா துணையாக ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-11-2022

https://www.youtube.com/watch?v=1sOvAMCME48
ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியாவின் Veretye air force base பகுதியில் தரித்து நின்ற நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மீது நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில், இரண்டு சம்பவ இடத்தில எரிந்து அழிந்துள்ளதுடன் ,மேலும் இரண்டு பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் ,பெரும் சேதங்களை தமது இராணுவம் ஏற்படுத்தியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரேன் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா நாட்டுக்குள்ளும் ,உக்கிரேன் தொடர்ந்து வருகிறது .

தொடரும் முடிவில்லா போரினால், ரசியா ,உக்கிரேன் இரு தரப்பிற்கும், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து - கொதிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா இருதரப்பு து புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர் .

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ,ஆயுத மற்றும் பொருளாதார வர்த்தகம் ,செழிப்புற்று விளங்கும் ஒப்பந்தமாக இவை உள்ளன .

உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,ரசியா ஈரானுடன் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தான் தலைநகர் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

மேலும்பலர் படு காயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் தலைநகர் பகுதியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி தலிபான்கள் ஆட்சி அமைத்தான் பின்னர் பலநூறு பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்ததது

இலங்கைக்கு அமெரிக்கா அரசு பாரிய கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது .

அவ்விதமான அன்பளிப்பு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது .

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றிருந்த விசேட குழுவினர் குறித்த கப்பலை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர் .

பல நாட்களின் பயணத்தின் பின்னர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி

கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு

தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா

யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா

யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .வடபகுதிக்கு பயணிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளாராம் .

மக்களின் பிரச்னைகளிற்கு தீர்வு கண்டு, அதன் ஊடாக தேர்தலில் வெற்றிவாய்ப்பை பேணும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை

கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை

வடக்கு மக்களுக்கான நீதி அமைச்சின் நடமாடும் சேவை திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளிநொச்சியில் நேற்று (01) நடைபெற்றது.

கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச வரவேற்கப்பட்டார்..

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து அகதிகளாக சென்று, மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்

நீதியமைச்சினால் விசேட
நடமாடும் சேவை வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று (02) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு

இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :

  • பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
  • பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
Posted in சமையல் cook

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி இட்லி செய்தா 10 இட்லி ஒன்றாக சாப்பிடலாம் .அப்புறம் என்ன செய்து சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் தரமான சுவையில் ,அடுத்தே வீடே வீடு தேடி வரும் சுவையோ சுவையில் செய்து அசத்துங்க மக்களே .

இட்லி குருமா செய்வது எப்படி .

அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் ,சோம்பு ,கராம்பு ,பட்டை ,அன்னாசி பூ ,வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .


வெங்காயம் வதங்கிய பின்னர், தக்காளி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க ..

நன்றாக வதங்கிய பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி வந்த பின்ன ,அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு, தண்ணி சேர்த்து அரைத்து கொள்ளுங்க .

அதே கடாயில எண்ணை ஊற்றி, சோம்பு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அதன் பின்னர் தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்க .


அப்புறமாக அரை கரண்டி மஞ்சள், மல்லி தூள் , கார தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .
இது கூடவே அரைத்த மாசாலாவை போட்டு வதக்கி வாங்க .

தேவையான அளவு தண்ணி ஊற்றி நன்றாக கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,கொத்த மல்லி இலை போட்டு இறக்கி கொள்ளுங்க .
இப்போ சூடான சுவையான குருமா ரெடியாடிச்சு .

இதனை இட்லி கூட இந்த குருமாவை போடு ஒரு புடி புடிச்சு பாருங்க .செமை சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க .வேலை .

அப்புறம் என்ன இன்றே வீட்டில சமைத்து பாருங்க மக்களே .

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க
Posted in சமையல் cook

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா வீட்டில இதுபோல செய்து பாருங்க , சுவையோ சுவை அம்புட்டு தரமான பிரியாணி தோற்கும் வகையில் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம் .

இந்த வெள்ளை குஸ்கா செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன

300 கிராம் அரசி ,நன்றாக கழுவி அதனை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க.

வெள்ளை குஸ்கா செய்திட தேவையான பொருட்கள்

ஒரு கரண்டி இஞ்சி பூண்டு ,பட்டை ,கராம்பு ,ஏலக்காய் ,

ஒரு அன்னாசி பூ ,ஒரு பிரியாணி இலை ,ஒரு தக்காளி ,
பச்சை மிளகாய் ,இரண்டு கரண்டி புளிச்ச தயிர் ,
இரண்டு வெங்காயம் ,முந்திரி பருப்பு ,கொத்தமல்லி
,ஒரு கைபிடி அளவு புதினா ,உப்பு .

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

வெள்ளை குஸ்கா செய்முறை .

குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் ,நெய் விட்டு ,மசாலா பொருட்களை வதக்கி எடுங்க .


மலசா பொருட்கள் யாவும் வதங்கிய பின்னர், ஊற வைத்த பசுமதி அரிசியை போட்டு நன்றாக் கலந்து விடுங்க .


அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் அரிசியுடன் சேர்த்து வேக வைத்திடுங்க. அவ்வளவு தாங்க வேலை .

இப்போ அருமையான சூப்பரான வெள்ளை வெள்ளை குஸ்கா ரெடியாடிச்சு .

இப்போ சுட சுட சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் இப்படி செய்து அசத்துங்க .

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளையடித்த முற்றும் துறந்த பிக்கு சிக்கினார்

கொள்ளையடித்த முற்றும் துறந்த பிக்கு சிக்கினார்


இலங்கையில் திலினி பிரியாமாலியின் பின்னால், உள்ளமுக்கிய முதலைகள் தொடராக சிக்கிய வண்ணம் உள்ளனர் .

இவர்கள் யாவரும் தமது கள்ள பணத்தை வெள்ளை பணம் ஆக்கும் நகர்வில் ஈடுபட்டனர் .


பல கோடி ரூபாய்களை பங்கு சந்தை வர்த்தகம் என்ற போர்வையில் ,முறைகேடாக பயன் படுத்தி கொள்ளையடித்து வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது .


தற்போது முற்றும் துறந்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டு ,விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .

மூன்று பில்லியன் ரூபாய்களை, திலினி பிரியாமாலினி சுருட்டியுள்ளார் .
இவரது பின்புலத்தில் மகிந்தா மனைவி உள்ளிட்டவரக்ள் சிக்கியுள்ளதால் ,,அரசியலில் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .

இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்

இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவி வருமுன் சீரற்ற கால் நிலை காரணமாக ,கண்டி, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா , இரத்தினபுரி,பதுளை, கேகாலை, குருநாகல், ஆகிய பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .


தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் பிறிதொரு இடத்திற்கு நகர்ந்த வண்ணம் உள்ளனர்.

சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |
Posted in சமையல் cook

சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |

சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |

வாய்க்கு சுவையான இலகுவான முறையில், கொஞ்ச பொருளுடன் சிக்கன் குழம்பு இப்படி செய்து பாருங்க ,வீடே மணக்கும் .

வீட்டில் உள்ள பொருள்களுடன் ,ஆடம்பரம் இல்லாது ,சுலபமாக இப்படி சிக்கன் குழம்பு ,சுவையாக செய்து பாருங்க மக்களே .

சிக்கன் குழம்பு செய்வது எப்படி ..?

சுவையான சிக்கன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

சிக்கன் ,எண்ணெய் ,வெங்காயம் ,பச்சைமிளகாய் ,சீரகம் ,( சோம்பு ) பூண்டு ,கடுகு தண்ணி .இந்த பொருள்களை வைத்து இபப்டி சிக்கன் குழம்பு செய்திடலாம் .

வீட்டில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி செய்முறை விளக்கம் .

சிக்கனை சிறிதாக வெட்டி, நீரில் கழுவி வைத்திடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து ( சட்டி ) இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .

சுவையாக சிக்கன் குழம்பு இப்படி செய்ங்க | CHICKEN KULAMBU |CHICKEN RECIPE |சிக்கன் குழம்பு |

எண்ணெய் சூடானதும் ,கடுகு ,சோம்பு போட்டு வதங்கி கொள்ளுங்க .அப்புறமா பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் பச்சை வாசம் போனதும் ,பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி வதக்கி வாங்க .

அதன் பின்னர் கழுவி வைத்த சிக்கனை காடயில போட்டு கலக்கி, ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்திடுங்க .

அதன் பின்னர் தண்ணி சேர்த்து மறுபடி 5 நிமிடம் வேக வைத்திருங்க .சிக்கன் வேகியதும் தூள் ,பூண்டு ,உப்பு போட்டு , மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .

அவவ்ளவு தாங்க, சுவையான சிக்கன் குழம்பு ரெடியாடிச்சு .இதனை இப்போ ( சாதம் )சோறு கூட சேர்த்து சாப்பிட்டு கொள்ளுங்க .

ஆடம்பரம் இல்லாது ,வீட்டில் உள்ள பொருள்களுடன், சுலபமாக செய்திட இந்த சிக்கன் கறி செமையாக இருக்கும் மக்களே .

சிக்கன் கறி செய்வது எப்படி | sikkan kulampu seivathu eppadi
சுவையான சிக்கன் குழம்பு | suviyaana chikkan kulampu
யாழ்பாணத்து சிக்கன் குழம்பு | yaalpaanthu sikkan kulampu
இந்தியா முறையில் சிக்கன் குழம்பு | iNdiya muraiyil cikkan kulampu
இலங்கை கார சிக்கன் குழம்பு | ilankai kaara sikkan kulampu

HICKEN GRAVY CHICKEN KULAMBU CHICKEN CURRY சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி CHICKEN RECIPE

https://www.youtube.com/watch?v=iqYc1ouIES8