Tag: சிறுநீரக
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி ,பொலன்னருவாவில் சிறுவர் மருத்துவமனைக்கு வெளியே முதல் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது
இலங்கையில் சிறுவர் மருத்துவமனை
இலங்கையில் சிறுவர் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு புறநகர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிறுவர் சிறுநீரக மாற்று
அறுவை சிகிச்சை, பொலன்னருவா சீனா-இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனையில் வெற்றிகரமாக
நிறைவடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மருத்துவமனையின்படி, 15 வயது நோயாளிக்கு மே 7 ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறுநீரகத்தை அக்குழந்தையின் தந்தை தானமாக வழங்கியுள்ளார். குழந்தையும், தானம் செய்தவரும் தற்போது நலமாக குணமடைந்து வருவதுடன், நல்ல முன்னேற்றத்தையும் காட்டி வருகின்றனர்.
இலங்கையின் சுகாதாரத் துறை
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும், எதிர்கால தேசியத் தேவைகளுக்கு ஏற்ப சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை
வழங்க மருத்துவமனை தயாராக உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது என்றும் மருத்துவமனையின் இயக்குநரும், சிறப்பு மருத்துவருமான டாக்டர் தில்கா சரணசிங்க கூறினார்.
இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்
மேற்கொள்ளப்பட்டாலும், வெளிநாட்டு சிகிச்சையுடன் தொடர்புடைய அதிக நிதிச் சுமை பல இலங்கை குடும்பங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தச் சாதனை, இலங்கைக்குள்ளேயே குழந்தைகளுக்கான சிறப்பு சிறுநீரகப் பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், நோயாளிகள் விலையுயர்ந்த
சிகிச்சையை வெளிநாடுகளுக்கு நாட வேண்டிய தேவையைக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை குறித்த மேலதிக விவரங்களை வழங்கவும், மருத்துவமனையின் எதிர்கால அறுவை சிகிச்சைத் திட்டங்களை
கோடிட்டுக் காட்டவும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, பொலன்னருவ சீனா-இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனையுடன்
இணைந்து, மே 26, செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மருத்துவமனை அரங்கில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தும்.
இந்த சந்திப்பில் சிறப்பு மருத்துவர் தில்கா சரணசிங்க, குழந்தை சிறுநீரக சிறப்பு மருத்துவர் வேணுஜய பண்டார, இரத்த நாளத் திசு மற்றும்
இரத்தக்குழாய் மாற்று சிறப்பு மருத்துவர் மனுஜய கொடகண்டகே மற்றும் சிறப்பு மயக்கவியல் மருத்துவர் ஜீவக குலதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் வறுமையியல் வாடும் குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காண்பித்து ,சிறுநீரகத்தை பெற்று ,கள்ள சந்தையில் விற்று வந்த முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
150 லட்சம் அவரைக்கு ஒரு சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க இதை சாப்பிடுங்க
சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க இதை சாப்பிடுங்க
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும்
வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு சாலட்
வாழைத்தண்டு சாலட்
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – 50 கிராம்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 20 கிராம்,
மோர், கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி
, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.
இதையும் படிக்கலாம்…மூங்க் தால் பரோட்டா
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.
சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள்
இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.
பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது
வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை
வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன்
வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு
கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.
தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை
பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப்
பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
- அடிக்கடி காய்ச்சல் வரும்.
- கை, கால் வீக்கம் ஏற்படும்.
- பசியின்மை, வயிறு உப்புசம்
- இருமல், சளி, மூச்சுத்திணறல்
- தோல் வியாதி
- வயிற்றுப் போக்கு
- மன சோர்வு
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
- தசைப் பிடிப்பு
- இரத்த சோகை
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்
- அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
- சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை,
- பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
- உயர்ந்த இரத்த அழுத்தம்
- மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
- அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்..















