ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் எரியும் விமானங்கள் டாங்கிகள் ,வெடித்த உச்சகட்ட யுத்தம் ,


மீண்டும் உக்கிரமான கடலரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மீண்டும் உக்கிரமான கடலரிப்பு

மீண்டும் உக்கிரமான கடலரிப்பு

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் மீண்டும் மிகவும் உக்கிரமான கடலரிப்பு இடம் பெற்று வருகின்றது.

மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டிடங்களும் தென்னை மரங்களும் மீன் வாடிகளும் மையவாடியும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்

வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவரது கணவர் அமில சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது,

குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றில் மூன்று சிசுக்களுடன் உயிரிழந்த பெண்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.

30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.

தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.

இந்த சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,

கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல.

உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன.

இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது

சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியதுடன் பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 58 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 26 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

பெண் ஒருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீ்டு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.

24 சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

பெண்கள் 4 பேருக்கும் பிணை வழங்கப்பட்டதுடன், ஆண்கள் 20 பேருக்கும் எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
Posted in இலங்கை செய்திகள்

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

மன்னார், தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.

குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.

மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு நேற்று (04) வழங்கி வைத்தனர்.

அதேநேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10% குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரால்
மோதி மக்கள் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர் .

மக்களுக்குள் வேகமாக காரில் எழுத் சென்ற நபர் மோதி தகத்தலை நடத்தினார் .

இந்த தாக்குதல் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

காரல் தகைய நபர் ,கத்தியால் மக்களை துரத்தி வெட்டியுள்ளார் .
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசாரை அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் .

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்

மேற்குக்கரை ஜெனின்பகுதியில் அப்பாவி மக்கள் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி ,
மக்களை சுட்டு கொன்று காய படுத்தி இந வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது .

அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,பால்ஸ்தீன போராளிகள் அமைப்பான கமாஸ் தெரிவித்துள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து காச பகுதிகளை இலக்கு வைத்து,
இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறு நடத்தினால் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தலாம் ,
என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் புரிந்து வரும் வலிந்து தாக்குதலுக்கு,
தக்க பதிலடியாக இது பார்க்க படுகிறது .

அமெரிக்காவில் துப்பாககி சூடு 11 பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .

இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .

விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இஸ்ரேலுக்குள் வெடித்த சண்டை 2 பேர் பலி 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் தப்பி ஓடும் மக்கள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் தப்பி ஓடும் மக்கள்

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் ஹிஸ்புல்லா


பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
Posted in உலக செய்திகள்

பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை

பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .

இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .

பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .

அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

உக்ரைன் கிழக்கு எல்லை பகுதியில் ரஷ்யா இராணுவம்,
லட்சம் படைகளை திடீரென குவித்துள்ளதால்
பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்ரைன் கிழக்கு முன்னரங்கமாக விளங்கும் இரண்டு பாரிய ,
லைமன்-குபியன்ஸ்க் மற்றும் பாக்முட் முனைகளுக்கு அனுப்பியுள்ளது.

பக்மூட்டை முற்றாக மீட்டு விட்ட்டால் ,உக்ரைன் பல முக்கிய நகரங்களுக்கான ,
விநியோக வழி தடை படும் ,அதனால் அந்த பகுதியை மீட்டெடு விட ரஷ்யா துடிக்கிறது .

கடந்த ஐந்து நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
ஆனால் தாமே வெற்றி நாயகர்கள் என உக்ரைன் மார் தட்டி வந்தது .

தற்போது லட்சம் படைகள் ,முக்கிய ஏவுகணை ,மோட்டார் ,பீரங்கி ,
வான் தாக்குதல் ,வான் தடுப்பு படைகள் என ,முக்கிய படையணிகள் குவிக்க பட்டுள்ளதால் ,பீதியில் உக்ரைன் உறைந்துள்ளது

உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு

எவ்வேளையும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
இப்பொழுது வாக்னர் படை காலத்தில் இல்லை .

ரஷ்யா அரச இராணுவம் தனது வீரத்தை கண்ணபிக்க வேண்டிய நேரம் .
ஆகையால் தாக்குதல் அதி பயங்கரமாக இருக்க போகிறது .

ஏவுகணை மழைக்குள் தொடராக உக்ரைன் குளிக்க போவதை ,
இந்த முக்கிய படையணி குவிப்பு தெளிவாக காண்பிக்கிறது .
வேட்டை திருவிழா நாக்கை போகிறது ,ஆயுத தாருங்கள் என்ற
ஜெலன்ஸியின் ஒப்பாரி சத்தம் ஒலிக்க போகிறது .

அதை காது கொடுத்து கேட்குமா ,
நேட்டோ என்பதே கேள்வியாக உள்ளது .

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
Posted in இலங்கை செய்திகள்

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது

அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜூன் மாதம் 28ம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள

வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நாணயம் சிக்கி குழ​ந்தை உயிரிழப்பு

நாணயம் சிக்கி குழ​ந்தை உயிரிழப்பு

இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை ( 03) தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சகோதரர்கள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ​​மூத்த பிள்ளை தனது சகோதரி வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாணயம் சிக்கி குழ​ந்தை உயிரிழப்பு

மேலும் குறிப்பிட்ட குழந்தையை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

டெங்கு நோய் நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் சதேவ்மினியை காப்பாற்றியிருக்கலாம் என அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் உயிரிழந்த சிறுமியின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லம்பிட்டிய, வென்னவத்தை 102/19 என்ற முகவரியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.