Tag: கொழும்பில் அதிகரிக்கும்
கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்
கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்
இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி, மஞ்சுளா திலகரத்ன, மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்தம் சுமார் 120 தொழுநோய்கள் பதிவாகின்றன.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மொரட்டுவையில் 51 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உள்ளதாகவும் மஞ்சுளா திலகரத்ன தெரிவித்தார்
- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகைby நிருபர் காவலன்
- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழைby நிருபர் காவலன்
- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானைby நிருபர் காவலன்
- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்by நிருபர் காவலன்
- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்by நிருபர் காவலன்













