மோடி புட்டீன் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்

மோடி புட்டீன் திடீர் பேச்சு

மோடி புட்டீன் திடீர் பேச்சு

ரஷ்யா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மற்றும் இந்திய பிரதமர்,
நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர் .

சீனா ஷாங்காய் ,மற்றும் உக்ரைன் கள நிலவரங்கள் தொடர்பாக பேச பட்டுள்ளது .


இதில் என்ன விடயம் முக்கியமாக பேச பட்டது என்பதை இந்தியா வெளிப்படுத்தவில்லை

உக்ரைன் போர் முனையில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில் ,
இந்தியாவுடன் ரஷ்யா பேசியுள்ளது முக்கிய விடயமாக பார்க்க படுகிறது .

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

பிரான்சில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் ,
பொலிஸாரால் கொலை செய்ய பட்டதை அடுத்து ,பிரான்ஸ் தழுவிய ,
நிலையில் வன்முறை ,கலவரமாக மாறியது .

இது இஸ்லாமிய வெறுப்பை காண்பிப்பதற்காக ,
பிரான்ஸ் அரசினால் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதை போல ,
துருக்கிய அதிபர் முழங்கியுள்ளார் .

பிரான்ஸ் கலவரம் இஸ்லாமிய வெறுப்பு என துருக்கி ஆவேசம்

இந்த இஸ்லாமிய வெறுப்பை ஓரம் கட்டி ,கலவரத்தை நிறுத்தி ,
இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என ,
ஆவர் வேண்டுதல் விடுத்தார் .

ஒரு இனத்தின் மீதான வெறுப்பு ,மதவெறியாக மாற்றம் பெற்று ,
கலவரமாக்க பட்டு ,அழித்தொழிக்கும் நகர்வு ,அல்லது முடக்கும் நகர்வுக்கு ,
ஓப்பன் ஒன்றாக இது மாற்றம் பெறுகிறது .

காலனித்துவ அடக்குமுறை ஆட்சி அதிகாரத்தை ,
பிரான்சு தொடர்ந்து பின்பற்றி வருவதை ,இந்த விடயம் ,
காண்பித்துள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது .

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு


ஈரான் ஏவுகணை சோதனை இராணுவம் குவிப்பு

வெடுக்குநாறியில் அட்டகாசம் ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது
Posted in இலங்கை செய்திகள்

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.

இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு

இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.

இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு அமைய முகப்புத்தகத்தில் இந்த இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு

தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகவும், தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தவும் என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.

அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது.

அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவதை காண்கின்றோம்.

முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுகின்றோம்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம்.

அந்த அடிப்படையில் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பௌத்தமயமாக்கலை செய்வது தான்.

அதனை நியாயமான முறையில் பதிவேற்றியிருந்தேன். உண்மையில் நாங்கள் பௌத்த மத்திற்கோ, அதன் இனத்திற்கோ எதிரானவர்கள் இல்லை.

பௌத்தம் போதிக்கும் சிந்தனைகளை சிங்களவர் பின்பற்றி இருந்தாலே தமிழர் தாயகத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாது என்பது எங்களுடைய கருத்து.

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு

தேவையற்ற விதத்தில் சைவ ஆலயத்தில் பௌத்த மதத்தை சேர்க்க வேண்டிய தேவை என்ன..? சைவ ஆலயங்களில் சரியான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

இங்கு ஏன் இந்த அமைப்பு? எதற்கு வந்து தாகசர்ந்தி, சாப்பாடு வழங்குவதாக செயற்படுவது. திட்டமிட்டு பௌத்தமயமாக்கலுக்கும், விகாரைகளை கட்டுவதற்குமான செயற்பாடுகளை நகர்த்துவதற்கே.

இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியை பின்புலமாக கொண்டு மிக விரைவாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தான் இது தீவிரமாக நடைபெறுகிறது. பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது. பொலிசாரின் வாக்குமூலத்திலும் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

வவுனியா, குருமன்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் தாகசாந்தி நிலையத்தில் இந்த அமைப்பின் பதாதை அனுமதி பெறாது தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தின் உப செயலாளர் அதனை அகற்றியிருந்தார்.

அவர் பொலிசாரின் துணையுடன் மிரட்டப்பட்டு ஆலயநிர்வாக அனுமதி இல்லாமல் மீளவும் பதாதைகளை கட்டியுள்ளார்கள். நந்திக் கொடிகள் காணப்பட்ட இடத்தில் வீதிக்குரிய இடம் எனக் கூறி அப் பதாதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.

வவுனியாவில் வெடிவைத்தகல்லை ஆக்கிரமித்து கச்சல்சமனங்குளம் என்ற பெயரில் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை கட்டப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் பௌத்த வல்வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பௌத்தமயமாக்கலை செய்ய இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வவுனியாவில் பல நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அமைப்பின் ஊடக ஐக்கிய தேசிய கட்சி பௌத்த மயமாக்கலை செய்ய முயல்கிறது. இதனை அனுமதிக்க மாட்டாம். அனுமதிக்கவும் முடியாது. நான் போட்ட பதிவு தொடர்பில் சவாலுக்கு உட்படுத்துகின்றோம்.

முடியுமானால் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தை கையாளுங்கள். அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

பௌத்தமயமாக்கலுக்கு நாம் ஒரு போதும் துணை போக மாட்டோம் என்பதை பொறுப்பான இயக்கம் என்ற அடிப்படையில் பதிவு செய்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை

கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை

சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மூன்று ரவுடிகள் கைது

யாழில் மூன்று ரவுடிகள் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி

இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த 2 இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

யாழில் மூன்று ரவுடிகள் கைது

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.

நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே (03) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
Posted in சமையல் சமையல் cook

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65

கடை சுவையியல் உள்ள முட்டை 65 வாய்க்கு சுவையாக இப்படி செஞ்சி சாப்பிடுங்க .விரைவாக மிக சுலபமாக ,நம்ம வீட்டில் ,கடை தரத்தில்,
சுட சுட செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க

முட்டை 65 செய்வது எப்படி ..? egg recipe in tamil
முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?

இந்த முட்டை 65 செய்திட, 5 முட்டை வேக வைத்து எடுத்த ,
அண்ட் முட்டை வெள்ளை கருவை துண்டுகளாக வெட்டி எடுத்திருங்க .

மஞ்சள் கரு எடுக்க கூடாது
இப்போ இது கூடவே கால் கப் மைதா மா ,கால் கப் சோளம் மா ,கால் கப் கடலை மா ,தேவையான அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,ஓர் கரண்டி மிளகாய் .

தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,ஒருகரண்டு கரம் மசாலா ,கால் கரண்டி மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,ஒருகரண்டி சீராக தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் .

அப்புறம் கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் ,
உருண்டை துண்டுகளாக இப்படி பொரிந்து நன்றாக எடுத்து கொள்ளுங்க

நன்றாக பொரித்து எடுத்த பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை ,
எண்ணெயில் மெல்லிதாக பொரித்து எடுத்து ,அதன் மேல போட்டு ,
வாய்க்கு சுவையாக சாப்பிடுங்க அம்புடுட் தாங்க வேலை .

இப்படி நாள் தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
  • பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
    பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு சுவையான அழகான கொழுக்கட்டை 200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைரெடி இதுபோல நலம் செய்து சாப்பிடுங்க உறவுகளே
  • நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
    நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் அடுப்பு நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சாம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள். தேவையான பொருட்கள் சுட்ட கத்தரிக்காய் சம்பல் ரெடி
  • மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
    மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி கடை சுவையில் உங்க வீட்டில் இது போல செய்முறையில் செய்து பாருங்க . சின்ன குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .அம்புட்டு சுவையான மொறு மொறு கோவை வுருண்டை பொரியல். மொறு மொறு கோவா உருண்டை தேவையான பொருட்கள் கோவா 500 கிராம், குடமிளகாய் ( capsicum) 1வெங்காயம் 100gமிளகாய்த்தூள், பூண்டு 1, உப்புத்தூள், கோதுமை மா,corn…
  • கோழி வறுவல் Chicken Recipe in Tamil
    கோழி வறுவல் Chicken Recipe in Tamil கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க . இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா கடுகு சேர்த்துட்டு, கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா அரை கப்…
  • கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
    கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் . இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் . கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே அரை கப் அளவுக்கு ரவை , கூடவே ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ,அரை டீஸ்பூன்…
  • கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
    கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft . பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள் அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ஒரு டீஸ்பூன்…
  • இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
    இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing. சோயா மீட், முட்டை போட்டு வறுங்க சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது. இந்த காணொளியை பாருங்க ,சிறுவர்கள் முதல் பெரியவள்…
  • Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
    Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம். ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா ரெண்டு எடுத்துக்கோங்க. தோள வடிவா சிவி நடுவுல உள்ள விதியை எடுத்து இருங்க.இப்போ பல் இருக்க…
  • இட்லி இந்த trickல try பண்ணுங்க
    இட்லிஇந்த trickல try பண்ணுங்க இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும். நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு வெந்தயம் போட்டு ஊற வைத்து விடுங்கள். வீட்டில இட்லி இப்படி செஞ்சு பாருங்க இது கூடவே…
  • கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
    கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ அதே கப்ல ரெண்டு கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு வெல்லம் நல்லா கரஞ்சிட்டு…
ஈரான் கப்பலில் புதிய ஏவுகணை இஸ்ரேலை அழிப்போம் மிரட்டல்
Posted in உளவு செய்திகள்

ஈரான் கப்பலில் புதிய ஏவுகணை இஸ்ரேலை அழிப்போம் மிரட்டல்

ஈரான் கப்பலில் புதிய ஏவுகணை இஸ்ரேலை அழிப்போம் மிரட்டல்

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு


இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .

இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்

வீழ்ந்த யுத்த விமானம் விமானி மரணம்

வடக்கு வெனிசுலாவில் அதி உயர் சண்டை விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .


நாட்டின் சுதந்திர தினத்திற்கு அணி வகுப்பில் கலந்து கொள்வதற்காக ,
பயிற்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இதன் பொழுது சம்பவ இடத்திலேயே விமானி பலியாகியுள்ளார் .
சிதைவடைந்த விமான பாகங்கள் மீட்க பட்டு வருகின்றன .

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,
இந்த விபத்து இடம்பெற்று இருக்க கூடும் என கருதப்படுகிறது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன .

இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்

இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்

இஸ்ரேல் தாக்குதல், எரியும் பலஸ்தீனம் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
போர் வெடிக்கும் அபாயம் ,


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது

பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை ஞாயிற்றுக்கிழமை (02) நடத்தினார்.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

பிரபாகரனின் மரணம் தொடர்பில் தனக்குத் தெரியாது

அக்கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இறுதி யுத்த காலத்தில் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராகவே நானிருந்தேன் என்றார்.

அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு
Posted in இலங்கை செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இத் தினங்களில் ஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளனர்.

நாசாவிலிருந்து இலங்கை வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு

இது குறித்து களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்திற்குரிய கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் புவியியல் அம்சங்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.”

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, சிங்களத்தில் இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும்” தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி
Posted in இலங்கை செய்திகள்

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி

புத்தளம் – நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் இன்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை – இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் பாட்டன், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்துவந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே அவர் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பாட்டனும் பேரனும் நீரில் மூழ்கி பலி

எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, ஸ்தல விசாரணையை மேற்கொண்டதுடன், நுரைச்சோலை பொலிஸாரும் உறவினர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த இரண்டு சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலி முக திடலில் மோசமான உணவு
Posted in இலங்கை செய்திகள்

காலி முக திடலில் மோசமான உணவு

காலி முக திடலில் மோசமான உணவு

மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை

துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்தார்.

இதன்படி காலி முகத்திடல் சதுக்கத்தில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் சதுக்கம் கொழும்பு நகரின் மிகப்பெரிய வெற்று இடமாகும் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதி.

காலி முக திடலில் மோசமான உணவு

இதனால், தினமும் ஏராளமானோர் இங்கு வந்து ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சி செய்யவும் வருகின்றனர்.

மதச் செயல்பாடுகள் தவிர, அதன் அழகைப் பாதுகாக்கும் நோக்கில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு அந்த பகுதியை வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இங்கு வருபவர்களுக்கு உணவு விற்கும் வகையில், கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா

பறி போகும் உக்ரைன் தகர்க்கும் ரஷ்யா

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

ரஸ்யா இராணுவத்தின் பின்தள ஆயுத ,படைகள் விநியோக தளமாகா விளங்கும் மாலிடப்போலில் ரஷ்யா படைகளின் மிக முக்கிய ஆயுதசேமிப்பு ,
கூடம் ஒன்று வெடித்து சிதறி எரிகிறது .

இந்த ஆயுத கூடத்தில் இருந்து பெரும் த்தம் கேட்டதாக ,
உள்ளூர் வாசிகள் தெரிவித்து ,சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

மேலும் உக்ரைன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய
ஏவுகணை தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டடங்கள் எரிந்து இடிந்து வீழ்ந்துள்ளது,டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்

இரு தரப்பும் பரஸ்பர ஏவுகணை ,வான்வழி தாக்குதலைகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .


குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

வேகமாக ஆயுதங்களை வழங்கும் படி ஜெலன்ஸி புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ,இந்த ஆயுத வளங்கள் ஊடகாவே இழந்த பகுதிகளை மீட்டு ,ரஸ்யாவுக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்த முடியும் என அவர் முழங்கியுள்ளார் .

வெற்றியாளர்கள் தாமெனவே முழங்கும் உக்ரைன் ,இதுவரை ரஸ்யா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க முடியாது தினறிய வண்ணம் உள்ளது ,


முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுத உதவி ,இராணுவ ஆலோசனை ,அவர்கள் படைகள் நேரடியா உக்ரைன் களமுனையில் நின்று வழிகட்டுகின்ற பொழுதும் .

உக்ரைன் திடீர் தாக்குதல் எரியும் ரஷ்யா ஆயுத கூடம்


ரஸ்யாவை வெற்றி கொள்ள முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது .

ரஷ்யா பலத்த தோல்விகளை சந்தித்து விட்டது என்கின்ற மேற்கு ஊடகங்கள்;
செய்திகளை சார்பு நிலையோடு வெளியிட்ட வண்ணம் உள்ளன ,

ஆனால் அவர்கள் மேற்படி கேள்விகளுக்கு பதில் தர மறுத்து உறங்குவதில்,
இருந்தே புரிகிறது அல்லவா ,பலமானவர் யார் என்பது .

அமெரிக்கா தேர்தலில் பின்னர் ஜலன்ஸி கைவிடப்பட்டு ,
நாட்டிடை விட்டு ஓடும் நிலை ஏற்படலாம் என்பதையே களமுனை நகர்வுகள்
காண்பிக்கின்றன .

நடு வானில் மோதிய இரு விமானங்கள்
Posted in உலக செய்திகள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

கொலம்பிய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக கொலம்பிய அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்தனர்.

பயிற்சிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு கொலம்பிய விமானப்படை விமானங்கள், மத்திய கொலம்பியாவில் சனிக்கிழமையன்று நடுவானில் மோதியதாதில் ,இந்த துயரம் இடம்பெற்றுள்ளது .

நடு வானில் மோதிய இரு விமானங்கள்

இந்த விமானத்தை ஓட்டில் சென்ற இரண்டு விமானிகளும் பலியாகியுள்ளனர் .

இந்த மோதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இறுதியில் வைரலாக பரவியது. ஒரு ஜெட் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதிய பிறகு தீப்பிடித்து எரிவதை அண்ட் காணொளி
காட்டுகிறது.

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

தமிழகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இவர், அதே

பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த நிதீஷ்குமார் (15), சமத்துவபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.

அங்கிருந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் வீதி ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

இவர்கள் பின்னாலே மற்றொரு வாகனத்தில் வந்த குப்புசாமி (58), அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும், இதனை கண்டதும் அதிர்ந்தனர். உடனே அந்த சிறுவர்களை காப்பற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்தனர்.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதில் இதில் அபினேஷ், நிதீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இருப்பினும் விக்னேஷை காப்பாற்ற இயலவில்லை.

அதுமட்டுமின்றி சிறுவர்களை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த குப்புசாமி, அசோக் குமார், சரவணன் ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த ராசிபுரம் பொலிஸார், தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி எல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண்கள் இருவரும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

சம்பவம் தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் வினவிய போது, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.