Author: நிருபர் காவலன்
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி துன்னாலை
இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் செல்வதற்கு கரணம் என்ன அறிந்து .
பாதுகாப்பான பாலியல் கல்வி முறையை இலங்கையில் மாணவர்களுக்கு வாழங்குவதன் ஊடாகவே ஒரு சண்டஹ்தியின் துன்பியல் வாழ்வியலை தடுக்க முடியும்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
,தம்புள்ளை ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வு
அவர் மேலும் சிலருடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரில் மூன்று வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம் ,சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்
ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள்
தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கேற்ப தெளிவான அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் வீச்சியுற்றுள்ள இலங்கையை மீள பழைய நிலைக்கு கட்டியெழுப்ப பலமுயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
அதனடிப்படையில் மக்களுக்கு ஆசை காட்டும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது .
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது
உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .
இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
தொடரும் போர்
ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு ,அஹுங்கல்ல மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவ மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயிற்றை துளைத்து பாய்ந்த குண்டு
வயற்றுப்பகுதியில் தோட்டாக்கள் தாக்கியதாகவும்,அதானல் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாகவே ,குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த நபரை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் ,காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்விதமான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
ஆனால் இந்த கொலைகளின் சூத்தரதரிகள் இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முட்டியாது திணறி வருகின்றனர் .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட். போராளிகள் இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய கோட்டையை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் .நடத்தினர்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் தாக்குதலில் பலியான நான்கு இராணுவ தளபதிகளும் 19 வயதுடையவர்கள் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வாமாக தெரிவித்துள்ளது .
பால்குடிகளை பிடித்து நடத்தும் போர் என்பதற்கு ,இந்த பிஞ்சுகள் பலிகள் காணமுடிகிறது .
போர் அனுபவம் அற்றவர்களுக்கு , தளபதி பதவி வழங்கி போர் முனைக்கு அனுப்பிய இஸ்ரேல் இராணுவத்தின் ,இந்த நிலை கண்டு அரபிய தேசம் ,அதன் போர் படைகள் சிரிக்கிறது .
உலக வல்லாதிக்க இராணுவமாக தம்மை அடையாளம் காண்பித்த இஸ்ரேல் படைகளுக்கு ,, ஹிஸ்புல்லா ,வழங்கும் நெருப்படியினால் நிலை குலைந்து போயுள்ளனர் .
நெதன்யாகுவின் போர் பசிக்கு அப்பாவி பிஞ்சுகள் காவு கொடுக்க படுகின்றனர் .
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .
மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஆட்டோ விபத்து
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் ,சுற்றவளைத்து தாக்கும் போர் படைகள்,வெடித்த உச்ச கட்ட போர் .
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய இராணுவத்தின் ஒவ்டா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கிய போர்படைகள் வெடிகுண்டு விமானங்களை பயனப்டுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன .
விமான தளம் பலத்த சேதம்
துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமான தளம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது .
இவ்வேளை அங்கு தரித்து நின்ற விமானகள் பாதுகாப்பு தேடி பறந்து ஓடியுள்ளன .
தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈராக்கிய போராளிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன .
ஆனால் இஸ்ரேல் இராணுவமய வளமையான பாணியில் ,ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளன .
எகிப்து எல்லையான ரபா வெளியான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில் ,மூன்று நாடுகளில் இருந்து ,இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
பலவீனமடை ந்துள்ள இஸ்ரேல் இராணுவம் தோல்விகளை மறைத்து தாமே வெற்றியாளர்கள் என கொண்டாடி வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்
இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .
இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு ,மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா, பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான
சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும் அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பூர்வீக காணிகளே அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை
இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது.
தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.
எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
O/L பரீட்சையில் முறைகேடு
O/L பரீட்சையில் முறைகேடு
O/L பரீட்சையில் முறைகேடு ,நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்கள்
பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கல்வியால்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய சிந்தனை ஊடாகவே ,இலங்கையில் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .
ஆனால் அதனை தவிர்த்து இலங்கை அரசு கல்வியால் கொள்கையில் சீரான மாற்றநகை ஏற்படுத்து மறுத்து வருவதால் இவ்விதமான குற்ற சத்துக்கள் மோசடிகள் முன்வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது ,ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திகிய விசேட சுற்று காவல் முற்றுகை தேடுதலில் இவ்விதமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வண்னம் உள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்விதமான குற்ற சத்துக்களின் அடிப்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருவது ,இலங்கை போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .
யாழில் வீடொன்று முற்றுகை
யாழில் வீடொன்று முற்றுகை
யாழில் வீடொன்று முற்றுகை ,யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள்
சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது.
இதன்போது நேற்று (09) வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை மற்றொருவர் மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறன்றனர்.
பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் ,முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிவிப்பு கட்சி தாவல் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெறுவதாக திகதி அறிவிக்க பட்ட நிலையில் ,கட்சி தாகவும் டீல்கள் அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறன கட்சி தாவும் காட்சிகளில் ஒன்றாகவே முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய பட்டுளளார் .
இலங்கையில் இவ்வாறு தேர்தல்கள் இடம் பெறும் காலங்களில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்க படும் டீல்கள் அடிப்படையில் பதவிகள் வழங்க படுகின்றன .
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி பயணிக்க ரணில் தள்ள பட்டுளளார்
.அதனால் .இந்த பேரம்பேச்சுக்களுக்கு ரணில் தயாராகி வருகிறார் என்பதை இவை காண்பிக்கின்றன .
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .
தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பாலஸ்தினம் போர்
இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .
அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்
சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
நில ஆக்கிரமிப்பில் இலங்கை
நில ஆக்கிரமிப்பில் இலங்கை
நில ஆக்கிரமிப்பில் இலங்கை ,மகாவலி அபிவிருத்தியின் பெயரில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தக் கோரி போராட்டம்.
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய் கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டமானது இன்று( வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகஜர் கையளிப்பு
போராட்டத்தில் ‘தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே’, ‘மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து’, ‘எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே’,
‘மகாவலி அபிவிருத்தி முல்லைத்தீவில் பௌத்த மயமாக்கலுக்கா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இலங்கை ஆளும் ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியில் கொண்டிருக்கும் ,தமிழர்களின் பூர்விக குடிகள் வசிக்கும் நில அபகரிப்புக்கு எதிராக மக்கள் நடத்துகின்ற்னர் .
வனஜீவராசிகளை ஏவி காணிகளை அபகரிப்பது , தமிழர்களை அச்சுறுத்தி பூர்விக மக்கள் வாழ்விடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவது என்கின்ற நடவடிக்கையில் சிங்களம் ஈடுபட்டுள்ளதை இவை காண்பிக்கின்றன என ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .
மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்
அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .
இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .
தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .
வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித கடத்தல் குழுவொன்று தற்போது இலங்கை இளைஞர்களை ரஷ்யாவுக்கு இராணுவ சேவைக்கு அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் முன் வரிசைப் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட மாட்டார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் மேலும் கோரிக்கை விடுக்கிறது.





































