Tag: மன்னர்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்ரமா சிங்கா அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் ஆகியோருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் .
இவர் மிக முக்கியமான மதத் தலைவராக இலங்கையில் காணப்படுகின்றார் .
ஒரு சக்தி வாய்ந்த மதத் தலைவராக காணப்படும் இவருடன் இந்த நேரத்தில் ராணுவ விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் .
இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் அதற்கான நீதி விசாரணைகள் தேவை எனவும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுதுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தற்பொழுது ரணில் அரசுடன் ஆதரவு தெரிவித்து சுகபோகங்களை அனுபவித்து வருவதான குற்றச்சாட்டு ஒன்று மக்கள் சமூகத்தின் முன்னாள் வைக்கப்படுகின்றது .
அவ்வாறு அவர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டி இலங்கை இறையாண்மை கொண்ட நீதியின் சட்டத்தின் பால் உயிர் வாழ்கிறது என்பதே நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான மதத்தலைவர்கள் மிக முக்கியமான தலைவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திது வருகின்றார் .
தனது கட்சிக்கு ஆதரவைத் தேடும் பொருட்டு இவ்வாறான சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருவது இது அரசியல் ராஜதந்திர என தெரிவிக்க படுகிறது .
மக்களை கவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது .
அவரது ஆதரவு ஊடகங்கள் வாயிலாக இவர் என்ன செய்திகளை பரப்பி நாங்கள் இணக்கப்படும் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தப் போவதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காண முடிகின்றது.
15 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையிலும், தங்களுடைய விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் எடுக்கப்படாத போதும் ,இப்பொழுதும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

மன்னர் மரணம் மக்கள் கதறல்
மன்னர் மரணம் மக்கள் கதறல்
குவைத் மன்னர் மரணம் மக்கள் கதறல் ,செய்க் நவாப் அல் அகமது அல் சபா தனது 86 வயதில் இன்று (16)காலமானார். உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் இன்னும் மன்னராட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா இருந்தார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் குவைத் மன்னராக பொறுப்பேற்றார்.
வயது முதிர்வு காரணமாக செய்க் நவாப் அல் அகமது அல் சபா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து செய்க் நவாப் தனது பெரும்பாலான பொறுப்புகளை 2021ம் ஆண்டே பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
குவைத் மன்னர் காலமானார்
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்தநிலையில் வைத்தியசாலை வட்டாரங்கள் தரப்பில் செய்க் நவாப் நன்றாக உள்ளார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு எந்த மாதிரியான உடல்நல பிரச்சனை உள்ளது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை.இதையடுத்து சிகிச்சை முடிந்து மன்னர் செய்க் நவாப்
மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
செய்க் நவால் அல் அகமது அல் சபா குவைத் மன்னராக குறுகிய காலம் அதாவது 3 ஆண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார்.
தற்போது செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமான நிலையில் குவைத்தின் அடுத்த மன்னராக பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபா பொறுப்பேற்க உள்ளார்.
இவருக்கு வயது 83 ஆகும். இவர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்றி குவைத்தின் அதிகாரப்பூர்வ மன்னராக பட்டம் சூடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.