சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்

சீரற்ற வானிலையால் 5587 வீடுகள் சேதம்

மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளன.

56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது.

ஒருவரைக் காணவில்லை

அத்துடன், ஒருவரைக் காணவில்லை எனவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வாயா இந்த வாய்
Posted in உலக செய்திகள்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய் என்ற கேள்வியை அண்ணாமலை பேசிய பேச்சின் ஊடாக தெரியவந்துள்ளது .

நடந்து முடிந்த இந்தியா மக்களை தேர்தலில் தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40 தொகுதியில் இடம்பெற்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றி

சற்றும் எதிர்பார்த்த வெற்றியை நாம்தமிழர் பெற்று சாதனை படைத்துள்ளது .12 தொகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது .

இந்த தொகுதிகளில் காளியம்மாள் மற்றும் கார்த்திகா ஆகியோர் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் .

அதனை அடுத்து ஆறு தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன .

இதுவே நாம் தமிழருக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக பார்க்க படுகிறது .

எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு நாம் தமிழர் மிக பெரும் வெற்றியை பெற்று தமிழக சட்ட சபையில் ஆதிக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ

அரச பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்.

நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால்,

இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம் ,மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர்.

2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும்

வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து

நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலமொன்று முறையற்ற முறையிலும், முறைசாரா

முறையிலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சாதகமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துங்கள்.

இதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தலாம். இவை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டமூலத்தில் கட்டமைப்பு ரீதியான பலவீனம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இச்சட்டத்தின் மூலம் இந்தத் துறை தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அமைச்சர் கூடிய அதிகாரங்களைப் பெற்று, தடைகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாது போகிறது.

பனிப்பாளர் சபையை நியமித்துக் கொள்ளும் அதிகாரம் கூட அமைச்சருக்கு செல்கிறது. இதையெல்லாம் அமைச்சரால் கட்டுப்படுத்தவும் முடியும்.

எனவே, இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் மூலம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தியுள்ளனர்.

கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இங்கு தொடராக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை.

இது பாரபட்சமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்தின் மூலம் மின்சார சபையின் சொத்துக்களை மதிப்பிடும் முறை இங்கு குறிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான வளங்களைக் கொண்டுள்ளது.

இந்த பங்குகளுக்கு என்ன நடக்கும் என்பது இங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர் விரும்பியவாறு அரச வளங்களை விற்கும் போக்கு ஏற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே, கொள்முதல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நாட்டில் 220 இலட்சம் மக்கள் மீது அதிக மின் கட்டணத்தை சுமத்தி நடந்து வரும் இந்த சுரண்டல்களை நிறுத்த வேண்டும்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் முற்போக்கான திருத்தங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்

மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின் பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும்

ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை

வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது மாணவிகளின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கவும் மாதவிடாயின் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை

காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த மாணவர்

இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகையில் வயது வந்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கையில் தோட்டப் பாடசாலை தொகுதிக்கு சொந்தமான 07

தேசிய பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி

நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.

செனிட்டரி நப்கின் கொள்வனவு

சுகாதாரமானவை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வது மாணவிகளின் பொறுப்பாகும்.

மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

இது ரூ. இது 600.00 மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.

மற்றைய பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்
Posted in இலங்கை செய்திகள்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன் ,14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல் வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்களும் நண்பர்களாவர்.

9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயதுடைய சிறுவனின்ன வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இதயம் கனக்கும் வேளையிலே
இதயம் உன்னை தேடுகிறேன்
மழையாய் பொழியும் கண்ணீரால்
மலைமகள் உன்னால் வாடுகிறேன்

நெருங்கி உன்னை நேசிக்கையில்
நெஞ்சே இதயம் உடைக்கின்றாய்
வலிகளை தினம் எனக்களித்து
வாட ஏனோ வைக்கின்றாய்

அழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
அல்லும் பகலும் அழுகின்றேன்
தொழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
தொடராய் உன்னை தொழுகின்றேன்

விடை பெறு என்றேன் விரட்டுகிறாய்
விரிசலை ஏனோ விரிக்கின்றாய்
உறவை உடைக்க முனைவதாலோ
உள்ளமே என்னை உதைக்கின்றாய் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-06-2024

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு


இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

video

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின்

இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்

15 வயது மாணவன் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த

மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலை

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலை யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.

இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கள் குழு கூட்டத்தின் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடு தொடர்பில்

அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாக நேற்று (05) பிற்பகல் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,

பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்

மஹிந்தானந்த அளுத்கம, தனது தந்தையை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற

குணதிலக்க ராஜபக்ஷ

உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாக்குமூலத்தின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

யாழ் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞன் கைது

யாழ் இளைஞன் கைது


யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய

கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

திருகோணமலை நீதிமன்றம்

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,

விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்

பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள கஞ்சா பறிமுதல்

இதன்போது அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணை களுக்காக

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

என் செய்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் செய்வேன்

என் செய்வேன்

தொட்டு பேசிட வந்தால்
தொட முன் ஏன் முறைக்கின்றாய்
கட்டு கடங்கா காதலித்தால்
காதலை ஏன் வெறுக்கின்றாய்

முட்டி பேசிட வந்தால்
முன்னே வர மறுக்கின்றாய்
விட்டு விலகிட நினைத்தால்
விழுந்தேன் அழுகின்றாய்

தட்டி தழுவும் மழை துளியாய்
தரையில் ஏன் விழுகின்றாய்
கட்டி தழுவிட நினைத்தால்
கத்தி ஏன் முறைக்கின்றாய்

கட்டி தாலி தொழுதுவிடு
கரம் கூப்பி வேண்டுகிறாய்
இப்படி என்னை தண்டித்தால்
இதயமே என் செய்வேன் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-06-2024

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் ,முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
Posted in உலக செய்திகள்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம் இந்தியா தேர்தல் முடிவுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது மோடி கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார் .

காணொளியில் விபரம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு

என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீதிகளை புனரமைக்க நிதி
Posted in இலங்கை செய்திகள்

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும்

ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய

இராஜாங்க அமைச்சர்

வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் இருந்து சுமார் 12 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, கிராமிய வீதிகளையும்,

பாலங்களையும் அமைக்கின்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எமது அமைச்சின் ஊடாக சுமார் 65 சதவீதமான பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. எதிர்வரும் நாட்களில்

இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்து கிராமங்களுக்கு அவற்றின் பலனைக்கொண்டு சேர்ப்பதற்கு அவசியமான விடயங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறை

கடந்த வருடங்களில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதோடு மக்களின் வருமானத்தையும் உயர்த்தி, கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எனவே இவ்வாறு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரமும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும்.

மேலும், தற்போது நாட்டின் அதிகமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன.

எனவே வெள்ளத்தால் சேதமைடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க ஜனாதிபதி சுமார் 03 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கை

அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேப்படுத்துவதற்கான பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றோம்.

முக்கியமாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை வென்று, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்து மக்கள்

பாவனைக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

அதிகமான விபத்துகள் இடம்பெறும் வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் பணிகள் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு

நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.

அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக

நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.

முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார்.

மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார்.

இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”

என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.