உச்சஉல்லாசம் திணறியது மேம்பாலம்
Posted in இலங்கை செய்திகள்

உச்சஉல்லாசம் திணறியது மேம்பாலம்

உச்சஉல்லாசம் திணறியது மேம்பாலம்

உச்சஉல்லாசம் திணறியது மேம்பாலம் ,ஹோட்டல் அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காதலர்கள்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காதலர்கள் இருவர் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அறை எடுத்து தங்கிய காதலர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகியது.

மேலும், அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்றவர்கள், இதனை கவனித்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை நோக்கி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர்.

மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

இதனால் அந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் திணறியது.

ஆங்காங்கே வாகனங்கள் நகர முடியாமல் சிக்கி தவித்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த அறையை தட்டி, ஜன்னலை

மூட செய்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஒருவழியாக போக்குவரத்து சீரானது.

காதலர்களின் தனிப்பட்ட செயல்களை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக தளவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில், தனிப்பட்ட நேரங்களில் ஜன்னல் திரையை மூடாமல் கவனக்குறைவாக இருந்த காதலர்களை பலரும் கண்டித்து வருகின்றனர்.

கம்பளை நகரசபை SJB வசம்
Posted in இலங்கை செய்திகள்

கம்பளை நகரசபை SJB வசம்

கம்பளை நகரசபை SJB வசம்

கம்பளை நகரசபை SJB வசம் ,கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பெந்தோட்டை பிரதேச சபை மற்றும் கம்பளை நகர சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

பெந்தோட்டை பிரதேச சபை

தெற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று கூடிய பெந்தோட்டை பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அதிகாரத்தைப் பெற்றது. 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் தவிசாளர் பதவிக்கு திறந்த

வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரேமகுமார் விஜேவர்தன் 12 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அதே வேளையில், தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மெர்வின் பிரதீப் கொடித்துவக்கு 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

கம்பளை நகர சபை

கம்பளை நகர சபையிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இங்கு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு திறந்த தேர்தல் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர் 10 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இருக வீரரத்ன 19 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குச்சவெளி பிரதேச சபை

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் பதவி இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) வேட்பாளர் ஐ. முபாரக்கிற்கு சென்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) ஆதரவுடன் அவர் வெற்றிப் பெற்றார்.

திறந்த வாக்கெடுப்பில், அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC) வேட்பாளர் அப்துல் ரிஸானை எதிர்த்து போட்டியிட்டார்.

பண்டாரகம பிரதேச சபை

பண்டாரகம பிரதேச சபை இன்று (24) காலை 9.30 மணியளவில் மேல் மாகாண சபை ஆணையாளர் செல்வி சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் கூடியது.

இதன்போது தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பா அல்லது திறந்த வாக்கெடுப்பா என்பது தொடர்பாக உள்ளூராட்சி ஆணையருக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி (UPFA) தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனால் பதற்றமான சூழல் நிலவியது. உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

பின்னர் சபை மீண்டும் கூடிய போதும், தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து,

இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம்

இந்த முடிவு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“PIBA இன் இந்த நடவடிக்கை, போர் காரணமாக திட்டமிட்ட திகதியில் இஸ்ரேலுக்கு வர முடியாத வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக

இருக்கும். விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியது

மேலும், இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியதும் எந்தவித தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, அம்மான் விமான நிலையத்திலிருந்து புது டில்லி செல்ல திட்டமிட்ட விமானத்தில் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர், இது இந்திய

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 25 ஆம் திகதி புறப்பட உள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்புவதற்கு 20 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 5 பேர் ற்கனவே இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர் என்று நிமல் பண்டார தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

தூதுவர், “இந்த புதிய போக்கு குறித்து இஸ்ரேல் அரசின் இறுதி நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான முன்மொழியப்பட்ட சமாதான முயற்சி இஸ்ரேலின் வணிக நடவடிக்கைகளை வழக்கம்போல தொடர அனுமதிக்கும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர்

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர்

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தபிரதமர் ,ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூன் 23 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின்

அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும்

கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.

ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது

என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு

இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள்,

ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள்.

இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா,

பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி
Posted in இலங்கை செய்திகள்

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி

சபாநாயகரை சந்தித்தார் UNDP பிரதிநிதி ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா அவர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களுக்கும் இடையிலான

சந்திப்பொன்று அண்மையில் (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள்

இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence/ AI) யுகத்தில் மக்களும் திறன்களும்” என்பது மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான கருப்பொருளாக

அமைந்திருப்பதுடன், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இது ஆராய்கின்றது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை வலுவூட்டுவதே இந்த மனித அபிவிருத்தி

அறிக்கையின் பிரதான நோக்கம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை மேம்படுத்தும் திட்டத்தின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும், பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொது மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில்

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான

விழிப்புணர்வூட்டும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அசூசா கொபோடா அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் தெரிவித்தார்.

அதற்கமைய தற்போதைய புதிய அரசியல் மாற்றத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில்

பாராளுமன்றத்தில் ஆய்வு மையமொன்றை விரைவில் அமைக்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இங்கு தெரிவித்தார்.

செவ்வந்திக்கு நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

செவ்வந்திக்கு நடந்தது என்ன

செவ்வந்திக்கு நடந்தது என்ன

செவ்வந்திக்கு நடந்தது என்ன ,கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை .

என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (23) இரவு ‘டிவி தெரண’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த விஜயபால,

“எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதாக எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக பார்க்கும்போது,

இந்த சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.மேற்படி விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல் ,ஈரான் மீது மீளவும் ஈரானிய புரட்சி ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கட்டார் சிரியாவில் நடத்திய தாக்குதலை போன்று ,மேலும் மிக உக்கிரமான தாக்குதலை நடத்துவோம் என, புரட்சி படைகளின் தளபதி பிரிகாடியர் ஜெனரல் முகமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிதறிய ள்ள அமெரிக்கா விமானப்படை

கட்டாரில் உள்ள அமெரிக்கா விமானப்படை மத்திய தலைமை கட்டளை பீடம் மீது 8 ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.

40 நிமிடத்திற்கு உள்ளாக 8 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி, அந்த அமெரிக்கா விமான படைத்தளத்திற்கு சேதங்களை ஈரான் ஏற்படுத்தியது .

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்த முற்பட்டால் ,எமது படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தும் என ஈரான் இராணுவ தளபதி மூலமும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் .

ஈரானுடைய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு,பதிலடியாக காட்டார் சிரியா ,ஈரான் ,கட்டார் அமெரிக்க இராணுவ படைத்தளங்களை சுற்றிவளைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது .

இதுவே அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் எதிர்வரும் மணித்தியாலங்களில் எதுவும் நடக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பொல்லு கொடுத்து அடிவானாகிய கதையாக அமெரிக்கா சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் இன்றைய கள நிலவரம் செய்திகள் ,இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் .

போரை நடத்திய வண்ணம் உள்ளது , ஈரான் நகரங்கள் மீதும் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈரானிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேல் எங்கும் 500 ஏவுகணை தாக்குதல் பதிலடி நடத்தும் ஈரான்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின்

ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க,

பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு

இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன்

ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார்.

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார்

செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு

மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா

காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும்

தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை

அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு

புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும்

இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது.

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர் ,சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,

தேசிய மற்றும் மாகாண பாடசாலை

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு

மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான

விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உணவுக் கட்டணம் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு ,பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025.05.23 அன்று பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.

இருப்பினும், இந்த விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற பணிக்குழாமினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 3000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2000 ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர்

பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுவரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த விடுமுறை இல்லத்தை முன்பதிவு செய்ய முடிந்ததுடன், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, இந்தக்

கட்டிடத்தில் உள்ள ஒரு பகுதியை எதிர்காலத்தில் பாராளுமன்ற ஊழியர்களுக்குக்கும் ஒதுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல் பணிகள் குறித்தும், பாராளுமன்ற அவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு பகலில் தற்காலிக தங்குமிடத்திற்கான இடத்தை தயார் செய்வதற்கான அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் ,ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த

இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் “பங்கர் பஸ்டர்” ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு ,கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு

செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வு, இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது ,முக்கியமான இராணுவ மற்றும் அணுசக்தி பகுதிகளில் உளவு பார்த்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டவரை ஈரான் கைது செய்துள்ளதாக, நேற்று ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி சேனல் டூ தெரிவித்துள்ளது.

யூத ஜெர்மன் இரட்டை குடிமகன்

அவர் ஒரு “யூத ஜெர்மன் இரட்டை குடிமகன் மற்றும் உளவாளி” என்று விவரிக்கப்பட்டார், மேலும் அவர் மத்திய மர்காசி மாகாணத்தில் தடுத்து

வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அவர் “டஜன் கணக்கான உளவு பார்த்தல் மற்றும்/அல்லது நாசவேலை செய்ததாக” அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

அவர் “ஒரு சுற்றுலாப் பயணியின் மாறுவேடத்தில்” ஈரானுக்குள் நுழைந்ததாக அறிக்கை கூறியது, ஆனால் அவர் “நாடு முழுவதும் உள்ள மர்காசி தொடர்பான பகுதிகளை படம்பிடித்து வந்தார்” என்று குற்றம் சாட்டியது.

சமீபத்திய நாட்களில் ஈரானில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மர்காசி, இஸ்ஃபஹான் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில்

குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள் ,ஈரான் விமான தாக்குதலில் youtube பிரபலங்கள் சொன்ன தகவல்கள் மக்களை பதற வைத்துள்ளது.

பிரித்தானியா சேர்ந்த youtube சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய ஜோடிகள் இருவர் இஸ்ரேலுக்கு பயணம் ஆயினர்.

ஈரானிய ஏவுகணைகள்

அங்கு இவர்கள் தங்கி இருந்த கொட்டல் மேலாக ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ,டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், அதில் பயந்து போன இவர்கள் தங்கள் அனுபவ பதிவுகளை நேரடியாக தெரிவித்துள்ளார்கள்.

ஈரான் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தாக்குதல் .அங்குள்ள மக்களை மிகப்பெரிய பரபரப்பிலும் பயத்திலும். அதிர வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள்.

வரலாற்றில் கண்டிட முடியாத மிகப்பெரும் அதிர்ச்சிகரமான ,அந்த அதி உச்ச கோரமான தாக்குதலாக அது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி பிழைத்ததாக ,அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவருடைய இந்த கருத்துக்கள் தற்போது சமூகத்தலங்கள் பற்றி எரிகின்றன .

ஈரான் மீது தாக்குதல்

சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் , இப்பொழுது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்தும் இதுபோன்ற தாக்குதல்கள் தீவிர படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலிய மக்கள் மற்றும் நிலை நாட்டு மக்கள் பீதியுடன் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்

தற்கொலை விமானங்கள் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .

இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .

இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.

திணறும் இஸ்ரேல்

ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.

களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

இதில் அழுத்தி காணொளி பார்க்க

என்னை மறந்துவிடு
Posted in கவிதைகள்

என்னை மறந்துவிடு

என்னை மறந்துவிடு

தேடி தேடி வருகிறேன்
தேவை இல்லை என்கிறாய்
கேட்டு கேட்டு கெஞ்சுகிறேன்
கேட்கலாமலே இருக்கிறாய்

கூட வந்த வேளையிலே
கூட வர மறுத்தவளே
தேவை இல்லை என்ற பின்னே
தேடி யான் வருவானோ

கதறுகிறாய் என்றெண்ணி
கருணை கொண்டு யான் வந்தேன்
ஒடித்து மனம் எறிந்தவளே
ஒடிந்து கண்ணீர் ஓடுதடி

திருத்தி படிக்க வந்தவனை
திருத்தம் இன்றி தொலைத்தவளே
உன்னை இனி நினைப்பேனோ
உள்ளமதில் வைப்பேனோ

காலம் எல்லாம் அழுதிருப்பாய்
கலங்கி மனம் நொந்து இருப்பாய்
வீழ்ந்து போன மனம் ஒன்று
விடை பெற்று போகிறது
மன்னித்துவிடு என்னை மறந்துவிடு

ஆக்கம் 21-06-2025

வன்னி மைந்தன்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ,அம்பாறை பகுதியில் நபரொருவரிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் என தெரியவந்துள்ளது.

மணல் போக்குவரத்து தொழில் நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்வதற்காகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ளாமல் இருப்பதற்காகவும், குறித்த இரு அதிகாரிகள் 25,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் இலஞ்சம் கோரியமை, அதனைப்

பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.