மரண மௌனம்
Posted in கவிதைகள்

மரண மௌனம்

மரண மௌனம்

என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.

உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்

நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.

என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு

என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.

என்னை மறந்துவிடு
Posted in கவிதைகள்

என்னை மறந்துவிடு

என்னை மறந்துவிடு

தேடி தேடி வருகிறேன்
தேவை இல்லை என்கிறாய்
கேட்டு கேட்டு கெஞ்சுகிறேன்
கேட்கலாமலே இருக்கிறாய்

கூட வந்த வேளையிலே
கூட வர மறுத்தவளே
தேவை இல்லை என்ற பின்னே
தேடி யான் வருவானோ

கதறுகிறாய் என்றெண்ணி
கருணை கொண்டு யான் வந்தேன்
ஒடித்து மனம் எறிந்தவளே
ஒடிந்து கண்ணீர் ஓடுதடி

திருத்தி படிக்க வந்தவனை
திருத்தம் இன்றி தொலைத்தவளே
உன்னை இனி நினைப்பேனோ
உள்ளமதில் வைப்பேனோ

காலம் எல்லாம் அழுதிருப்பாய்
கலங்கி மனம் நொந்து இருப்பாய்
வீழ்ந்து போன மனம் ஒன்று
விடை பெற்று போகிறது
மன்னித்துவிடு என்னை மறந்துவிடு

ஆக்கம் 21-06-2025

வன்னி மைந்தன்