சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Spread the love

சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை சவூதி அரேபியாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யேமனுடன் சவூதி அரேபியாவின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா அந்நாட்டிற்கான தனது பயண ஆலோசனையை நிலை 3-க்கு மாற்றியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச பயண இணையதளம், “பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்ற இந்த ஆலோசனையின் கீழ்,

ஆயுத மோதல், ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், யேமனில் உள்ள ஹூதிகளின் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளது.

வளைகுடா நாட்டின் சில பகுதிகளில் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அண்டை நாடான யேமனுக்கு நிலை 4 “பயணம் செய்ய வேண்டாம்” என்ற ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியுள்ளது.