இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

Spread the love

இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply