கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

Spread the love

கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.

இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு

கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’

என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.

போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.


நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என


ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply