ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மௌலானா, தற்பாதுகாப்புப் காரணமாக நாட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் இச்சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.
மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி படை’ என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
”அவர் (கோட்டாபய) பிள்ளையானிடம் சிறந்த குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்ய வைக்குமாறு கூறினார். எனவே பிள்ளையான் தனது தேர்வுப்படி சிறந்தவர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவானது பின்னர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அறிந்து அவர்களைக் கொலை செய்தது” என மௌலானா தெரிவித்துள்ளார்.
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
ராஜபக்ச ஆட்சி குறித்த லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் முக்கியமாக பெரிதளவில் அறியப்படாத அவர்களின் MiG இராணுவ ஜெட் பற்றி தனது கட்டுரையில் வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களால் கோட்டாபய ஆத்திரமடைந்தார். எனவே ஒரு சந்திப்பில் தன்னையும் பிள்ளையானையும் அழைத்து, லசந்தவைக் கொலை செய்யுமாறு தெரித்ததாக மெளாலானா தெரிவித்தார்.
”இந்த நாய் என்னுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது என அவர் சொன்னார். லசந்தவைக் கொல்ல வேண்டும். உன்னால் இயலுமானவரை சீக்கிரம் அதை செய் என அவர் சொன்னார்” என மௌலானா தனது நேர்காணலில் கூறுகிறார்.
அத்துடன், லசந்தவின் படுகொலை பற்றி ஆவணப்படத்தில் ஆதாரமளிக்கின்றார் நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் லசந்தவின் வழக்கின் புதிய விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த சில்வா, விசாரணையில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தன்னை திரிப்போலி படைப்பிரிவுக்கு கொண்டு சென்றதாக ஆவணப்படத்தில் கூறுகிறார்.
லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாக நிஷாந்த சில்வா கூறுகிறார்.
”எனது ஆய்வின் பிரகாரம் கோட்டாபயவுக்கு திரிபோலி பிரிவுடன் நேரடியான தொடர்பு இருந்தது. மேலும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சந்தேக நபராக அவரை (கோட்டா) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்த போது, அது தொடர்பில் பேசுவதில் அவர் ஆர்வமாக இருக்கவில்லை” என நிஷாந்த சில்வா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
by நிருபர் காவலன் - லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
by நிருபர் காவலன் - இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு
by நிருபர் காவலன் - பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர,
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
“வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில்
உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.
விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம். சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இலங்கைக்கு கொண்டுவந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம்.
அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்by நிருபர் காவலன்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டுby நிருபர் காவலன்
- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனுby நிருபர் காவலன்
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரலிய ஒய பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மழையுடன் புளத்சிங்கள சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பல போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக புளத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக புளத்சிங்கள ஹல்வதுர தமிழ் வித்தியாலயம் , பரகொட கிதுலேகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இஹலவெல்கம கனிஷ்ட வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டுள்ளன
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்by நிருபர் காவலன்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டுby நிருபர் காவலன்
- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனுby நிருபர் காவலன்
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதைத் தவிர, பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. சில பாடசாலை மாணவர்கள் பாக்கு மற்றும் புகையிலையை மட்டும் மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பதுளை பஸ் நிலையத்தில் இவ்வாறு எச்சில் துப்புவதும் தெரியவந்துள்ளது.
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
பதுளை பஸ் நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம், இதுபோன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா ஒரு டூபாய் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
by நிருபர் காவலன் - லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
by நிருபர் காவலன் - இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு
by நிருபர் காவலன் - பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்க்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் என்றும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது
என்றும் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது குறித்து விசேட கவனம் செலுத்தி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்ட, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது .
தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே சனல் 4 வெளியிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.எனவே சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு
வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
வெல்லவாய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் 33 வயதுடைய கங்பங்குவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு
உயிரிழந்தவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் அயலவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாளை (09) முதல் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் தினங்களில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், 17ஆம் திகதி இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கதக்கது.
சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன் வரவில்லை என தெரிவித்தார்.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது எனவும், குற்றவாளிகளை தண்டிக்க போதுமான பொறிமுறையை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்துகிறார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டம் குறித்த பல சரத்துக்கள் தொடர்பில் தனது அறிக்கையில் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையின் ஆட்சியில் வரலாற்று ரீதியிலான மாற்றம், கடந்த கால மக்கள் எதிர்ப்புக்களில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்றும், இதன் காரணமாக நீண்டகால சவால்களுக்கு தகவல் வழங்குவது மேலும் தாமதமாகி வருவதாகவும் ஆணையாளர் வருடாந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்பட்டு வருவதாகவும், அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் நாட்டில் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருடாந்த அறிக்கையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துதல், ஊழலுக்கு எதிராக செயற்படுதல் மற்றும் நீதியை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
ஆழமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் இந்நாட்டு அரசியல் கட்சிகள் இதனை அவசரத் தேவையாகக் கருத்தில் கொண்டு செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|
ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|
ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கிழக்கு பலத்த தாக்குதல் ,
திணறும் இராணுவம் ,ரஷ்யா புதிய தாக்குதலினால் திணறும் எதிரிகள் ,
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்by நிருபர் காவலன்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டுby நிருபர் காவலன்
- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனுby நிருபர் காவலன்
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
உதயநிதிக்கு நடிகர் சந்தானம்தான் தெரியும் திமுகவின் சனாதனம் இதுதான்
உதயநிதிக்கு நடிகர் சந்தானம்தான் தெரியும் திமுகவின் சனாதனம் இதுதான்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

விஜயலட்சுமி முக்தர் கன்னி தன்மை சோதனை நடத்துவரா சீமான்
விஜயலட்சுமி முக்தர் கன்னி தன்மை சோதனை நடத்துவரா சீமான்
விஜயலட்சுமி முக்தர் கன்னி தன்மை சோதனை நடத்துவரா சீமான் |அந்த வீடியோவை காண்பித்த சீமான்|Vijayalakshmi
விஜயலட்சுமி முக்தர் கன்னி தன்மை சோதனை நடத்துவரா சீமான் ,
விஜயலட்சுமி ஒரு முறை பாட்டால் சீமான் பயந்துட்டாரு ,
2024 சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு! | Seeman’s Speech Celebrated By The Youth
2024 சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு! | Seeman’s Speech Celebrated By The Youth
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்by நிருபர் காவலன்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்by நிருபர் காவலன்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டிby நிருபர் காவலன்
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்by நிருபர் காவலன்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்by நிருபர் காவலன்
வெடித்த குண்டு சிக்கிய மர்ம நபர்கள்
வெடித்த குண்டு சிக்கிய மர்ம நபர்கள்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்by நிருபர் காவலன்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டுby நிருபர் காவலன்
- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனுby நிருபர் காவலன்
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை
ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை
ஈரான்இராணுவ முகாம் மீது தாக்குதல் ,இரண்டு அதிகாரிகள் படுகொலை
இஸ்ரேல் ஆதரவு குழு வெறியாட்டம் ,
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
- இஸ்ரேலின் ஐ.நா. உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யக் கோரி BDS ஐ.நா. பொதுச் சபையில் மனு
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
துபாயில் இலங்கையருக்கு அடித்த அதிர்ஷ்டம்
துபாயில் இலங்கையருக்கு அடித்த அதிர்ஷ்டம்
துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற அதிர்ஷ்ட சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு இருபது மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாய் பெறுமதியில் இது 175.75 கோடி ரூபாய் ஆகும்.
துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் டி. பிரபாகர் என்ற குறித்த நபர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளதுby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்by நிருபர் காவலன்
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
வாக்னா் படைக்குத் தடை
வாக்னா் படைக்குத் தடை
ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவு ஆணை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டால், வாக்னா் குழுவில் இணைவதோ, அந்தப் படைக்கு ஆதரவாக செயல்படுவதோ பிரிட்டனில் சட்டவிரோதமாகிவிடும்.
அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
பிரிட்டனில் இருக்கக் கூடிய வாக்னா் படையினரின் சொத்துக்களை முடக்கவும் அந்த வரைவு ஆணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் சூயெல்லா பிரேவா்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்னா் படை என்னும் அழிவு சக்தி ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினின் ராணுவ உபகரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாக்னா் படைக்குத் தடை
தன்னால் உருவாக்கப்பட்ட அந்த அசுர சக்தி குறித்து ரஷ்யா எந்த முடிவை எடுத்திருந்தாலும், புதினின் அரசியல் லாபங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் வாக்னா் படை நிலைத்தன்மையைக் குலைத்து வருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், வாக்னா் படையினா் அனைவரும் பயங்கரவாதிகள்’ என்றாா் அவா்.
ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. ‘ஜனாதிபதி புதினின் துணை ராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய ராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.
எனினும், இந்தப் போரின்போது ராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23 ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புதினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த மாதம் 23 ஆம் திகதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இருந்தாலும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைனின் நடவடிக்கைகள் தொடா்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பிரிட்டன் இந்த முடிவை எடுத்துள்ளது.
- பாதுகாப்புப் படைத் தலைவர் அலுவலகம் இல்லாமல் போயுள்ளது
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
by நிருபர் காவலன் - சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுவார்த்தை
by நிருபர் காவலன்