அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை

அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை

அமெரிக்கா Fort Stewart in Georgia பகுதியில் உலகள இராணுவ தளம் அருகே வசித்து வந்த இராணுவ குடும்பம் நால்வர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இந்த நால்வர் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இராணுவ உள்ளக சண்டை காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எனினும் இந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை .

வீடியோ

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பறந்து வந்த ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .


கடந்த 24 மணித்தியாலத்தில் தமது எல்லைக்குள் நுழைந்த எதிரிகள் விமானம் பத்தில் ஒன்பது சுட்டு வீழ்த்த பட்டகாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


ஒன்று தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது .


தொடர்ந்து ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|


இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|

இஸ்ரேல் ஆமி பெண் பலி,ஹமாஸ் படையினரால் கைது செய்ய பட்ட இராணுவ இளம் பெண் சடலமாக மீட்பு.

அல்சீபா மருத்துவமனை சுற்றிவளைத்து தேடுதல் .

தமது ஆயுதங்களை வைத்து விட்டு ஹமாஸ் ஆயுதம் என பரப்புரை நடத்தும் இஸ்ரேல் இராணுவம் .

வீடியோ

மாவீரர்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

மாவீரர்

மாவீரர்

கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!

விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!

கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!

இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!

ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!

நிலாதமிழ்.17.11.2023.

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுகடல் பகுதிக்குத் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அது பற்றி அந்தப் பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வீடியோ

இளம் தாயை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இளம் தாயை காணவில்லை

இளம் தாயை காணவில்லை

மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் ஒரு மணியளவில் வெளியில் சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கணவனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தாயை காணவில்லைஇளம் தாயை காணவில்லைஇவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாடுகளை சுட்ட இருவர் கைது

மாடுகளை சுட்ட இருவர் கைது

மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை

வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு

கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.

மாடுகளை சுட்ட இருவர் கைது

இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை

(16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வீடியோ

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுவதிக்கு ஆபாச படங்கள் உரிமையாளருக்கு விளக்கமறியல்

யுவதிக்கு ஆபாச படங்கள் உரிமையாளருக்கு விளக்கமறியல்

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர்

தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

யுவதிக்கு ஆபாச படங்கள் உரிமையாளருக்கு விளக்கமறியல்

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை

முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (16) முற்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த நீதவான் , கடை உரிமையாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (17) அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (17) பிற்பகல் ஒரு மணிக்கு கோப் குழுவின் அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வௌ்ளிக்கிழமை ஜூம்மா இருப்பதால்

மரிக்கார் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ள முடியாது. ஆகையால் இந்த விடயத்தில் தலையிடுமாறு சபாநாயகரை பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

பின்னர் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, மறு அறிவித்தல் வரை கோப் குழு குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம் சபாநாயகர்

அங்கு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு அந்த கோப் குழுக்கூட்டத்தை நடத்தியிருக்கவேண்டும். ஏன்? மறு அறிவித்தல் வரை ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டார்.

கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை தவிர்த்து. உரிய கூட்டங்கள் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வீடியோ

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு

போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டாம் சிஐடிக்கு உத்தரவு

சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விமான நிலையத்திலோ அல்லது எங்கும் வந்தாலோ அவரை

கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (தலைவர்) நிஸ்ஸங்க பந்துல

கருணாரத்ன மற்றும் சமத் மொரைஸ் ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வீடியோ

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை|இஸ்ரேல் காசா போர்||isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை,
குறுக்குவழியில் சிந்திப்பதை விடுத்து ,தீர்வை நோக்கி செல்ல வேண்டும் இஸ்ரேலுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை


இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் எல்லை

இஸ்ரேல் ஹிஸ்புல்லா லெபனான் எல்லையில் கடும் மோதல்,
பெரும் இழப்பு என அறிவிப்பு ,

வீடியோ

இஸ்ரேல் முகாம் தாக்குதல்|இஸ்ரேல் படைகள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம் தாக்குதல்|இஸ்ரேல் படைகள் காயம்

இஸ்ரேல் முகாம் தாக்குதல்|இஸ்ரேல் படைகள் காயம்

இஸ்ரேல் முகாம் தாக்குதல் பல படைகள் காயம் ,அதிர்ச்சியில் இராணுவம்.

யசீர் அராபத் சிலை உடைப்பு .மக்கள் கொதிப்பு .

இஸ்ரேல் நோக்கி பறந்து வந்த கவுதிகள் விமானம் ,அமெரிக்காவினால் ல் சுட்டு வீழ்த்தல் .

லெபனான் இஸ்ரேல் முகாம்கள் கடும் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் குவிப்பு|லெபனான் இஸ்ரேல் மோதல்|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் குவிப்பு|லெபனான் இஸ்ரேல் மோதல்|


இஸ்ரேல் டாங்கிகள் குவிப்பு|லெபனான் இஸ்ரேல் மோதல்|

இஸ்ரேல் டாங்கிகள் லெபனான் எல்லையோரம் குவிப்பு ,
ஹிஸ்புல்லா நிலைகளை தாக்க இஸ்ரேல் இராணுவம் திட்டம் .

அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் , .

எல்லையில் குவிக்க பட்ட டாங்கிலை இழந்து ஓட்டம் பிடிக்குமா .?இல்லை ஹிஸ்புல்லளவி ஓடவிரட்டுமா ..?

வீடியோ

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி

ரஷ்ய உக்காரனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கடும் மோதலில்
இந்த போரில் ரஷ்ய தரப்பில் 1000 படைகள் பலியாகியுள்ளனர் .

36 பீரங்கிகள் ,17 கவச வண்டிகள் ,11 யுத்த டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீடு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீடு தாக்குதல்

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீடு தாக்குதல்

ஹமாஸின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீட்டை
குண்டுவீசித் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவரான இஸ்மாயில்
ஹனியேவின் வீட்டை போர் விமானங்கள் மூலம் கடந்த இரவு தாக்கின.

ஹமாஸ் உள்கட்டமைப்பு மற்றும் மூத்த நிலை ஹமாஸ் கூட்டங்கள் இங்கு தான் இடம்பெறுகிறது என இஸ்ரேல் தெறிவித்துள்ளது .

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீடு தாக்குதல்

இவரே ஹமாஸ் முக்கிய மூளையாக இருப்பதால் இவரை கொலை செய்ய இஸ்ரேல் மொஸாட் தீவிரமாக செயலாற்றி வருகிறது .

அதனால் இவரது பயணங்கள் நகர்வுகள் யாவும் அமெரிக்கா ,இஸ்ரேலினால் தீவிரமாக கண்காணிக்க படுகின்றன .

ஈரான் முக்கிய இராணுவ தளபதி சோலைமணியை போல இவரையம்
இல்லாது அழிக்க இஸ்ரேலை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .

வீடியோ

இஸ்ரேல் 2 தளபதிகள் பலி|எகிறிய இஸ்ரேல் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2 தளபதிகள் பலி|எகிறிய இஸ்ரேல் இழப்பு


இஸ்ரேல் 2 தளபதிகள் பலி|எகிறிய இஸ்ரேல் இழப்பு

இஸ்ரேல் 2 தளபதிகள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளனர் .

வடக்கு காசா வழியாக முன்னறிய முக்கிய படையணிகள் பலத்த அடி வாங்கியுள்ளனர் .


இஸ்ரேலுக்கு மிகபெரும் இழப்பு .குறிவைத்து வீழ்த்த படும் தலைகள் ஊடாக காணமுடிகியது .

வாய் சொல்லில் வீரர் என்பதாக இஸ்ரேல் இழப்பு எடுத்து காண்பிக்கிறது .

வீடியோ

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

அதிருப்தியடைந்த தனது காதலியை அழைத்து வருவதற்காக அவரது சகோதரனின் ஏழு வயது மகளை இளைஞர் ஒருவரால் கடத்திச் சென்ற

சம்பவம் ஒன்று ஹொரணை, கோனபொல, எட்டம்பஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காதலிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வரவில்லை என்றால் கொலை சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர், தனது காதலியின் உறவினர் வீட்டிற்கு சென்று சிறுமியை ஒப்படைத்து விட்டு குறித்த இளைஞர் காதலியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்படி, கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், நேற்று (14) கோனாபினுவல

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரின் காதலன் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, கோனாபினுவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் காதலனின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடத்தலுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் பொறுப்பேற்றதுடன் , அது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து

கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு மருங்கையேனும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள்

காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.

விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.