தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு

தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலை

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில்,

07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,

செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

வழகுகல் தாக்கல்

கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.

தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.

இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.

இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.

வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்

தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.

அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .

இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்

பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பம்பைமடு பெண்கள் விடுதியில்

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் முகாமுக்குள் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் நுழைந்துள்ளார்.

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்து கூச்சலிட்ட நிலையில், குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவம் அறிந்ததை அடுத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலையால் மரணமடைந்தார்.

மாணவிகள் விடுதியில்

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை

கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்

சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்

எதிர்வரும் கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல் இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்

காரணமாக உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் பிரவேசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம்

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், 4 மாதங்களுக்கு

மேலாகியும் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 2 இலட்சம் மாணவர்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளுக்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், அந்த பெறுபேறுகளின் தாமதம்

காரணமாக உயர்தர பாடப் பிரிவுகளை தெரிவு செய்வதில் மாணவர்களின் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மீண்டும் மீள் மதிப்பீட்டை நடத்தி பெறுபேறுகளை விரைந்து வெளியிடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் .

ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மோசடிகளை தடுக்க உத்தரவு

இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை


இஸ்ரேல் எங்கும் குண்டு மழை

இஸ்ரேல் எங்கும் குண்டு மழை,இஸ்ரேலை தாக்கிய விமானம்,
இஸ்ரேல் கட்டு பாட்டு இராணுவ வலய பகுதி எங்கும் ஹிஸ்புல்லா மழை போல குண்டுகளை பொழிந்துள்ளது .

அதேவேளை இஸ்ரேலை தாக்கிய வெடிகுண்டு விமானம், பலத்த சேதங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்க படுகிறது.

லெபனானுக்குள் எதிரிகள் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த ,இஸ்ரேலிய விமானங்கள் ,தெரிவு செய்ய பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் ஏவுகணை கூடங்கள் ,என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது .

அனால் காட்சிகளோ தலைகீழாக .காணப்படுகின்றன .

சொல்லி அடிப்பதில் கில்லாடிகளான ஹமாஸ் போர்ப்படை போராளிகள் ,தாம் தெரிவு செய்த இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

ஹமாஸ் தாக்குதல்

தெற்கு லெபனானுக்குள் வலிந்து நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ,பதிலடி தாக்குதலை ,ஹமாஸ் போர் புலிகள் நடத்தியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது


திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது

ரஷ்யாவுக்குள் உக்ரைன் திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது,விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் வயல்கள் ,எரிபொருள் தாங்கிகள் என்பன பற்றி எரிகிறது .

சற்றும் ,, எதிர்பாரத இந்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட விபத்தினால் பலமில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

உக்ரைன் விமானங்கள் ரஸ்யா உள்ளே தாக்குதல்

உக்ரைன் விமானங்கள் திடீரென ரஸ்யா உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது .

இந்த அவ்விமான தனியே நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயல் , மற்றும் தாங்கிகள் என்பன எரிந்த்து அழிந்துள்ளது .

திட்டமிட்டு தயாரிக்க பட்ட தாக்குதலாகவும் ,பின்புலத்தில் மேற்கு உளவுத்துறையும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற வலுத்துள்ளது .

திருப்பி தாக்குதம் ரஷ்யா

மேற்படி தாக்குதலை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ,ரஷ்யா ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் காற்கீவ்,தலைநகர் கீவ் கடும் சேதங்களை சந்தித்துள்ளன .தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

உக்ரைன் ரஸ்யா போர்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் இரண்டு ஆண்டுகள் கழிந்த இந்த தாக்குதல் சுநடவடிக்கையால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமான சேதங்களை உள்ளாகியுள்ளது .

அவ்வாறான பெரும் சீரழிவை தமது நாட்டுக்கு ஏற்படுத்திய அதே எதிரியாக விளங்கி வரும் ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் ,அதன் கூட்டு நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறன தாக்குதல் ஊடாகவே ரஷ்யா பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லை உக்ரைன்

ஐரோப்பிய நாடுகளின் முதல் எல்லையாக விளங்கும் உக்காரன் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் , அதனால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கருதும் ,ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகவே களம் குதித்துள்ளன .

அதுவே தற்போது ஐரோப்பா நாடுகளை அச்சுறுத்த ரஸ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்து தாக்கி வருகின்றன என்பதே ,இந்த எண்ணெய் வயல்கள் ஊடான தாக்குதல் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்


ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் பெரும் இழப்பு

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது ,ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் இஸ்ரேலிய சைரன்கள் அலறிய வண்ணம் உள்ளன .

இராணுவ தளங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளளதாக தாக்குதலை நாடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .

பலமுனைகளில் இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

பல முனைகள் ஊடாக இஸ்ரேல் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வடக்கு இஸ்ரேல் நிறுவ பெற்றுள்ள விமான நிலையம் ,கண்காணிப்பு , நிலைகள் என்பன குறி வைத்து தாக்க பட்ட வண்ணம் உள்ளன .

போர் படைகள் நடத்தும் வீரம் செறிந்த தாக்குதல் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளன .

மூன்று தளபதிகள் வீர்மரணத்திற்கு தகுந்த பதிலடியை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா போராளிகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் நிலை குலைந்துள்ளது .

போர்க்களத்தில் ஆறுமுனைகள் ஊடாக ஆறு போராளிகள் தாக்குதலை நடத்துகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுகிறது.

ஏப்ரல் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் மூன்று வாரங்களில் வருகை தந்துள்ளனர்.

நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைந்தது.

மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை

எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல, மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போக்குகளைப் பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும்.

ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 சதவீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 11 சதவீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 சதவீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

கொரனோ வைரஸ்

உலகை தாக்கிய மிக பெரும் கொரனோ வைரஸ் தாக்குதலை நோயினை அடுத்து ,பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கை தேசத்தினால் அதில் இருந்து மீண்டு எழ முடியவில்லை .

உல்லாசப் பயணத்தில் மட்டுமே தமது நாட்டின் வருமானத்தை நம்பி இருந்த ,இலங்கை தற்பொழுது அந்த வருமானத்தை இழந்து தவிக்கும் காட்சிகள் இலங்கையை நகைப்புக்கு உள்ளாக்கியது .

வீதிக்கடை உணவாகம்

அவ்வாறான கால பகுதியில் மீளவும் வளர்ச்சியடைந்து வரும் உல்லாச பயணத்தை ,சில வீதிக்கடை உணவாக காரர்கள் மேற்கொள்ளும் செயல் பாட்டினால், மீளவும் அந்த உல்லாச பயணம் வீச்சியுறும் நிலைக்கு தள்ள பட்டு வருகிறது .

மீளவும் அதே துயரை இலங்கை சந்திக்க போவதை உல்லாச பயணிகள் வரவு எடுத்து இடித்துரைக்கிறது .

வவுனியா பொலிஸார் அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா பொலிஸார் அதிரடி

வவுனியா பொலிஸார் அதிரடி

வவுனியா பொலிஸார் அதிரடி வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு

செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் விசாரணை

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும்

மோசடிகள் இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதி கைது

புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .

அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .

மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே புதன்கிழமை (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான முண்டிகு சரச்சந்திரன் மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அமுலில் இருக்கும்

மைத்திரிபால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது

2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்ச்சந்திர தாக்கல் செய்துள்ளார், மேலும் மைத்திரிபால சிறிசேன 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க சாத்தியமில்லை எனவும் அவர்கள் ஆதரவாளர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாத, பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், ஆட்சேபனைகளை ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய மற்றும் சட்டத்தரணி சம்பத் பெரேரா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்,இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தார்.

இலங்கை மாத்தள விமான நிலையத்தி வந்தடைந்த ஈரான் கேனாதிபதி இப்ராஹிம் ரைசி.உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பர் என தெரிவிக்க பட்டுள்ளது .

அச்சுறுத்தல் நிலையில் இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இக்கால பகுதியில் ,இலங்கை ,வந்தடைந்துள்ள ஈரான் ஜனாதிபதியின் வரவு துணிச்சல் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

ஈரானுக்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் ,பதிலுக்கு ,இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த நிலையில் ,அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் ,எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளார் .

மொசாட் குறியில் ஈரான் ஜனாதிபதி

மொஸாட் குறியில் என்றான் ஜனாதிபதி உள்ள பொழுதும் ,பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் பயணித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது .

இவர் இலங்கையில் மொசாட்டினால் கொலை செய்ய பட கூடிய ஆபத்துக்களு உள்ளதான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது .

அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அமெரிக்கா ,இஸ்ரேலை தட்டி கேட்கவா முடியும் என்ற நிலையே காணப்படுகிறது .

ஈரான் இலங்கை உறவு

ஈரானுக்கும் சிலாகிக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது .பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த பொழுது ஈரான் மிக பெரும் ஆதரவை வழங்கி இருந்தது .

விசேட எண்ணெய் கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது .மேலும் இலங்கை தேயிலையை மாதம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது .

இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்களில் ஈரானுக்கும் இலக்கைக்கும் நல்லுறவு காணப்படுகிறது .

அவ்வாறான இவ்வேளையில் ,ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளது ,மேலும் இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் பலத்தை சேர்க்கும் என கருத படுகிறது .

ஜனாதிபதியின் இலக்கை வருகையுடன் இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் ,ஐக்கிய நடுகல் மனித உரிமை அவையில் ,இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயம் தீவிரம் பெறலாம் என படுகிறது .

தமது சொல்லை தட்டையா இலங்கைக்கு ,அவர்கள் புரிந்த தமிழ் இந கொலையை தூசி தட்டி எடுத்தாலும் வியப்பதற்கில்லை எனலாம் .

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்

அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு .
ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் நாங்கள் அடுத்த நொடி அணுகுண்டு சோதனை நடத்துவோம் என ஈரானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலால் ஈரானிய இராணுவத்தினருக்கு இடையில் போர் வெடித்துள்ள இவ்வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

எதிரி நாடுகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .ஈரான் மத தலைவர் உத்தரவிட்டால் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என்ற ஈரான் அமைச்சர் முழக்கம் ,உலக நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளது .

பீதியில் இஸ்ரேல் மக்கள்

தமது எதிரி நாட்டிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ,யூதர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

அடங்க மறுத்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் கடும் போக்கு தனம் , .

பாலஸ்தீனிய இஸ்ரேல் போர் அரங்களில் மேலும் பெரும் இடர்களை ஏற்படுத்து விடும் என்பதாக இஸ்ரேல் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும்

எமது நாட்டுக்குள் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட முற்பட்டால் ,மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்திக்கும் என ஈரானிய முக்கிய இராணுவ தளபதி முழங்கியுள்ளார் .

ஈரானிய அணு முக்கிய விமான தளங்கள் ,எண்ணெய் வயல்களை தாக்கி அழிக்க ,இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என ஈரானிய இராணுவ தரப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காசா இஸ்ரேலுக்கு இடையில் நீடித்து செல்லும் கொடிய போரில் ,பல்லாயிரம் காசா மக்கள் பாலியாகியும் வாழ்விடங்கள் சுடுகாடாகியுள்ள இவ்வேளையில் .

ஈரான் களம் இறங்கி தாக்குதல் நடத்த பட்ட பின்னர் ,அணுகுண்டு சோதனை நடத்த போகிறோம் என்கின்ற ஈரான் அறிவிப்பு ,அரேபிய தேசத்தில் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .

கழியும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணபடுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை

ராடார்களுக்கு சிக்காது இஸ்ரேலை தாக்கிய
ஹிஸ்புல்லா ஏவுகணை .ஹிஸ்புல்லா பயன்படுத்திய புதிய வகை ஏவுகணையால் எதிரி படைகள் அச்சத்தில் உறைந்துள்ளன .


ரொக்கட் உள் வருகையை கண்டறியும் அபாய ஒலிகள் எழுப்ப படாததால் எதிரி படைகள் கலக்கத்தில் உறைந்துள்ளது .


லெபனான் போர் படைகள் நடத்திய இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு, ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து

இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து இந்த ஹிஸ்புல்லா பயன்படுத்தும் புதிய ஏவுகணையால் காத்துள்ளது .

இதுவரை இடம்பெற்று வந்த போரில் பயன்படுத்தாத புதிய வகை ஏவுங்கனைகளை பயன்படுத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதியவகை ஏவுகணை ஹிஸ்புல்லாவால் ஆபத்து

வரும் நாட்களின் இந்த புதியவகை ஏவுகணைகளை பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பினர் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ,விமான தளங்கள் ,துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அதுவே ,இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பையும் வரலாற்று தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீ கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை சிறை பிடித்து சென்றனர் .

இருநூறு நாட்கள் கழிந்த நிலையில் இதுவரை கைதிகளை விடுவிக்க ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இதனை அடுத்து தற்போது மக்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு மக்கள் எதிர்ப்பு

ஹமாஸ் போர் படைகளினால் சிறை பிடித்த கைதிகளை விடுவிக்க கோரி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு முன்பாக மக்கள்தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

காசா மீதான போரை நிறுத்தி உடனடியாக கைதிகளை விடுவித்து தரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

சட்டம் ஒழுங்கை உரிய முறையில் கடைபிடிக்காத நிலையில் ,தமது மக்களும் இராணுவம் ஹமாஸ் படைகளினால் சிறை பிடித்து செல்ல பட்டனர் என்ற விடயத்தை முன் வைத்து தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர் .

நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் மக்கள்

உடனடியாக தேர்தலை நடத்துங்கள் ,நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்த்து விடுகிறோம் என மக்கள் கோபத்தோடு பேசி வருகின்றனர் .

தேர்தலை நடத்தினால் ,தோற்று விடுவோம் என அச்சம் நெதன்யாகுவிற்கு ,அதனால் இணங்க மறுத்து போரை நீடித்து நடத்தி வருகின்றார் .

Error: View 9293b2au4w may not exist
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் விபத்தில் ஒருவர் காயம்

யாழ் விபத்தில் ஒருவர் காயம்

யாழ் விபத்தில் ஒருவர் காயம், யாழ்நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பட்டாரக வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது .

வான் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்

வான் மோதியதில் சிதறிய ஆட்டோ

யாழ் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.

மடசந்தி வான் ஆட்டோ விபத்தில் ஒருவர் காயம்

இதன் போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இதேவேளை, பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்


இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்,இரவிரவாக இஸ்ரேல் ஹமாஸ் இடையில் கடும் போர் இடம்பெற்றுள்ளது .


இஸ்ரேலிய இராணுவத்தின் நிலைகளை இலக்கு வைத்து ,ஹமாஸ் போராளிகள் கடும் ஏவுகணை யுத்தம் நடத்தியுள்ளது .

யூத இஸ்ரேல் இராணுவத்திற்கும் பெரும் இழப்பு

ஏழுமாதம் தொடர்ந்து நீடிக்கும் இந்த பொழுதில் ,வரலாறு காணாத மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

ஹமாஸ் போர் படைகள் நடத்தும் துல்லியமான ,தந்திரமான ,புதிய போர் முனை தாக்குதல் கண்டு அதிரும் உலக நாடுகள் .

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் மீது ஹமாஸ் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளன .ஹாமாஸ் விமான தாக்குதலினால் இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது .

யூதர்களின் இராணுவம் பலவீன பட்ட ஒன்றாக தற்போது காணப்படுகிறது .

பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்தி கொண்டிருக்கும் இஸ்ரேல் ,முன் வைத்த காலை பின் வைக்க முடியாது திணறி வருகிறது .

மிக பெரும் பொறிக்குள் காஸாவில் யுத்தத்தை ஆரம்பித்து நெதன்யாகு படைகள் சிக்கியுள்ளன ,என்பதே வரலாற்று சான்றாக காணக்கிடக்கிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன் நாட்டின் திட்டத்தில் இடையூறு ஏற்படுத்த பட்டு வருகிறது .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு வருடங்கள் கடந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த ரஷ்யா உக்ரைன் போருக்கு ஆதரவாக பல நாடுகள் களம் இறங்கியுள்ளன .இவ்வாறான கால பகுதியில் ஜெர்மன் நாடானது 400 MRAP கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதிற்கு முன் வந்தது .

400 MRAP கவச வாகனகள் இந்த மாதம் உக்ரேனுக்கு விநியோகிக்க பட்டு விடும் என எதிர் பார்க்க பட்டது .

ஆனால் அந்த கவச வண்டிகள் விநியோகம் தடை பட்டுள்ளதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது .

குவிக்க படும் போர் ஆயுதங்கள்

ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதற்கு ஆதரவாக, அமெரிக்கா 61 பில்லியன் டைலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

அமெரிக்கா வாழங்கும் அந்த ஆயுத தளபாடங்களில் கவச வாகனங்கள் ,டாங்கிகள் ,ஏவுகணைகள் ,என்பனவும் உள்ளடக்க பட்டுள்ளது .

தொடர்ந்து நீளும் ரஷ்யா உக்ரைன் போரினால் ,உலக நாடுகளை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு

இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக ,இஞ்சி அதிகம் பயன் படுத்தும் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் பொருட்களின் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் இஞ்சியின் விலை அதி உச்ச விலைக்கு சென்றதினால் ,அதனை இந்த விலை கொடுத்து வாங்கிட முடியா நிலையில் மக்கள் திணறி வருகின்றனர் .

உள்ளூர் உற்பத்தியில் இஞ்சி பயிர் செய்கை வீழ்ச்சி அடைந்த நிலையிலும் ,இறக்குமதி குறைவடைந்து நிலையில் ,இஞ்சியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது .

கோட்டபாய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் பின்னர் ,தற்போது இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது அதிகரித்துள்ளது .

உயரும் பொருள் விலை தவிக்கும் மக்கள்

திடீர் திடீரென உயரும் பொருள் விலையினால் ,மக்கள் அன்றாட வாழ்வியல் பாதிக்க பட்டுள்ளது .

காய்கறி விலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பால் ,ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வந்தனர் .

அவ்வாறான நிலையில் இலங்கையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக அதிகரித்து காணப்படுவது ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .