Tag: பெண்ணிடம்
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .
அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .













